கிழட்டு முகமூடி …. திரை விமர்சனம்
mukamoodi .. Tamil Film Review..
அருமையான கான்செப்ட் மிக நன்றாக வந்திருக்க வேண்டிய படத்தை போட்டு, பழைய மாவைவிட்டு கிண்டி கிண்டி மிக மோசமாக உருவாக்கியிருக்கிறார்கள். ஜீவா ஒரு விளையாட்டு வாலிபன், மற்றவர்கள் மாதிரி 9 டூ 5 அலுவலகம் சென்று விட்டு, 7 மணி சீரியல் பார்த்து வழக்கமான வாழ்க்கை வாழ விரும்பாதவன், எதையாவது சாதிக்க விரும்புகிறான். அவனது நண்பர்கள் குழாம் குங்குபூ கற்றுத்தரும் ஒரு மாஸ்டரிடம் ஒருசில வித்தைகளைக் கற்றுக் கொள்கிறார்கள். படத்தில் சைனா படம்போல் குங்பூவை எதிர்பார்த்தீர்களானால் நீங்கள் பனால், சும்மா டான்ஸ் பிராக்டிஸ் பன்னுவது போல் ஒரு சில பைட் மூவ்மெண்ட்களை மட்டும் பிராக்டிஸ் செய்து குங்பூ பைட்டர் போல் பில்டப் செய்யப்பட்டிருக்கிறது.

இடையில் பழைய தமிழ் படமான சத்திரியனைக் காப்பியடித்து வில்லன் / கதாநாயகன் பிளாஷ்பேக்.. ( அப்பா சாமி ரொம்ப அறுவைடா…). நகரில் நடக்கும் தொடர் கொள்ளை அதுவும் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து கொலை மற்றும் கொள்ளை நடக்கிறது. அதை செய்வது டிராகன் குங்பூ டிரையினிங் வைத்திருக்கும் நால்வர் அதிலும் நரேன் தான் முக்கிய வில்லன். (இவர் போலிஸ் புல்லுறுவி) இடையில் நடக்கும் ஒரு சில விஷயங்களால், நாசர் மருத்துவமனையில் அட்மிட், கதாநாயகியின் சில்மிஷம்… எல்லாம் ஏற்கனவே பல தமிழ்ப்படங்களில் வந்த காட்சிகளையே திரும்ப திரும்ப எடுத்திருக்கிறார்கள்.

நண்பனின் சாவு மற்றும் சாதிக்க வேண்டும் என வெறி கொண்டு, இரண்டு தாத்தாக்களால் விஷேச முகமூடி மற்றும் உடையை அணிந்து கொண்டு வில்லன்களை பிடித்து துவம்சம் செய்வதே முகமூடி…
அப்பாடா பெரும்பாலான காட்சிகள் இராத்திரியிலேயே எடுக்கப்பட்டிருக்கிறது… அதனால் பல காட்சிகளில் என்ன நடக்கிறது என்பது கூட சரியாக புலானாக மாட்டேன்கிறது. இசையும் சுமார்தான்… கதாநாயகி மட்டும் பலப்பலன்னு மின்னுகிறார் (நடிப்பில் அல்ல) ஜீவா உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறோம். இந்த மாதிரி சில்லரை அயிட்டங்களைத் தவிருங்களேன்.

கிழட்டு முகமூடியால் சிறப்பாக எண்டர்டய்ன் பண்ணவோ, சண்டைகளால் சிலிர்ப்பூட்டவோ, செம திரில்லராகவோ, சஸ்பென்ஸ் கில்லராகவோ, நட்பை பெருமைப்படுத்தும் படமாகவோ எதுவாகவும் ரகம் பிரிக்கஇயலாது… பெட்டர்லக் அடுத்துமுறை…






