தமிழ்ப்படம் விமர்சனங்களை நமது மக்கள் விரும்பி படிக்கிறாங்க போல… சன்னிதானமும் (நான்தான்) எனது பங்குங்கு ஆரம்பிக்கிறேன்.
தம்பி வெட்டோட்த்தி சுந்தரம்
இது ஒரு தமிழ்ப்படம்… இதுல பலர் நடித்திருந்தாலும்.. நமக்கு கண்னுக்கு வெளிச்சமாக தெரிவது அஞ்சலி மற்றும் ஒருவர் அதாங்க சுந்தரம் (கோல்டு மெட்ல் வாங்ககியவர்). முதலில் ஏண்டா இந்தப் படத்திற்கு வந்தோம் என்பது போல் காட்சிகள் படுமோசமாக இருந்து பின்னால்… நம்மை அறியாமலே (வேற வழியில்லாமல் படத்துடன் ஒன்றிவிடுகிறோம்) ..
கதைச்சுருக்கம். கன்னியாகுமரி மாவட்த்தில் கதைக்களன் அமைந்துள்ளது. அந்த மாவடத்திற்கே உரிய அப்பாவித்தனம் மற்றும் புத்திசாலித்தனம், அனைவரும் படித்துவிட்டு அரசர்ங்க வேலைகிடைக்கும் என வேலைவாய்ப்பு அலுவலக புள்ளிவிபரத்துடன் திரிகிறார்கள். அதில் ஒருவர் வேலை கிடைக்க வாய்ப்பு இருந்தும் லஞ்சம் கொடுக்க அல்லது வயது முதிர்வின் காரணமாக (சுமார் 38 வயது கல்யாணம் ஆகீ குழந்தை உள்ளவர்) வெறுப்படைந்து தற்கொலைசெய்துகொள்கிறார்.
நம்ம சுந்தரமும் படித்துவிட்டு நண்பர்களுடன் குட்டிசுவரில் உட்கார்ந்து போகிறவற பிகர்களை பார்த்து ஜொள்ளும்போது அஞ்சலி மாட்டிவிடுகிறார். அதன் பிறகு ஒருசமயம் சரவணன் சுந்தரத்தை போலிஸில் மாட்டவிடமல் அடிவாங்கிக்கொள்வதால் இருவருக்கும் நட்பு பிசின் போல் ஒட்டிவிடுகிறது. அலப்பறை தாங்முடியாததால் கடைசி ரீலுக்கு தாவிவிடுகிறேன்.
சினிமா விதிகளின்படி,,, இப்படத்தில் நடித்துள்ள அனைத்து நபர்களும் அஞ்சலியைத் தவிர (கடைசி சீனில் கதாநாயகனின் கல்லறையில் அஞ்சலிசெலுத்துகிறார்) ஒருவர் பின் ஒருவராக மாற்றி மாற்றி எதிர் டீம் மற்றும் போலிஸ் எதிரியர்ல் போட்டுத்தள்ளப்படுகிறார்கள் (போலிஸிசும் சேர்த்து)..
சுமாரான படமாயிருந்தாலும் எதிர்பாராத திருப்பங்கள் இல்லையென்றாலும்… படமாக்கிய விதமும், துணை நடிகர்கள் சிறப்பாக பயன்படுத்தியிருப்பதும்… கதை நடக்கும் இடங்களையே படப்பிடிப்பிற்கு பயன்படுத்தியிருப்பதாலும்…. (என்ன சொல்லவர)… சும்மா இருந்தால் பார்த்து வைக்கலாம்…
அன்புடன் .. சிவபார்க்கவி.