வீடியோ கேம்ஸ் விளையாடுங்க பசங்களா… அப்பா.அம்மா சண்டை KIDS PLEASE PLAY VIDEO GAMES..
நவீன தற்காலத்தில் ஒவ்வொரு வீட்டிலேயும், இது நடக்கிறது. ஒரு டீன்ஏஜ் பையன் வீடியோ கேம்ஸ் விளையாட்டுலே பைத்தியம் ஆகிட்டார். எப்போல்லாம் ப்ரீ டைம் கிடைக்கிறதோ அப்போல்லாம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து கேம்ஸ் விளையாடுவதே பொழைப்பா கிடக்கிறார். அவரிடம் ஒரு தற்கால நவீனகால அப்பா பேசுகிறார், அப்பாவிற்கும் பிள்ளைக்கும் நடக்கும் உரையாடலைப் பார்ப்போம்.
- அப்பா….
பையா, நான் எப்போ பார்த்தாலும் ஒரே கேம்மை திருப்பி திருப்பி விளையாடுகிறாய். ஒவ்வொரு முறையும் செய்ததையே செய்கிறாய், ஒரு கேம்ல துப்பாக்கியை வைத்து எதிரி டேங்கை சுடுகிறாய்.. அப்/டவுன்/வலது/இடது பக்க மூவ்மெண்ட் கீகளையும், எண்டர் கீயையும் விசைப்பலகையில் அதிகம் பயன்படுத்துகிறார். இது எப்படி உன்னை வெறுப்படையாமல் சலிப்பில்லாமல் செய்ய வைக்கிறது.
- மகன்….
அப்பா, ஒரே கேம்மாக இருந்தாலும், அதை நடைமுறையில் ஒரு சில சின்ன சின்ன வித்தியாசங்கள் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் வித்தியாசமான போராட்டங்களை / பந்தயங்களை சந்தித்து வித்தியாசமான ஸ்கோர்களை ஒவ்வொருமுறையும் பெறுகிறேன். நான் எப்போ அதிகமான ஸ்கோரை பெறும்பொழுது மகிழ்ச்சியாகவும், மேலும் விளையாட ஊக்கமாகவும் அமைகிறது. ஸ்கோர் குறைந்தாலும் அதை போராடி இதைவிட நல்ல ஸ்கோர் எடுக்க வேண்டும் என மீண்டும் போராடத் தோன்றுகிறது.
- அப்பா….
ஒரு கேம் முடிந்தவுடன் ரீஸ்டர்ட் (சரி/வேண்டாம்) என கேள்வி கேட்கும் பொழுது உடனே சரி என்ற பட்டனை அழுத்திவிடு திரும்ப விளையாட ஆரம்பித்துவிடுகிறாய்.. ஒரு தடவை கேம் விளையாடினால் போதுமானது இல்லையா?
- மகன்….
எப்போ நான் கேம்ல மிக அதிகபட்ச ஸ்கோர் எடுக்கிறோனோ அப்பத்தான் எனக்கு போதும் எனத் தோன்றும்..
(அப்போ… அம்மா இடையில் புகுந்து ஏன் பையனை திட்டிக் கொண்டே இருக்கீறிர்கள்… என சண்டை ஆரம்பித்தது)
- பேசும் மரம் ….(இது யாரு?)
இந்த வீடியோகேம் போலத்தான் நம்முடைய வாழ்க்கையும், நம்முடைய ஜீவாத்மா (embodied soul) உடல் உருவில் இவ்வுலகில் பிறக்கிறது. வாழ்க்கையின் அடிமையாக மாறி மீண்டும் மீண்டும் வேறொரு உடலில் புகுந்து வித்தியாசமான வாழ்க்கை சூழலில் வாழ்க்கையின் பல்வேறு வசந்தங்களையும், சோதனைகளையும் அனுபவிக்கிறது. ஒவ்வொரு பிறப்பின் கடைசியில் நேரும் மரணத்தில் திரும்பவும் ..எஸ்.. பட்டனை அழுத்தி திரும்பவும் இவ்வுலகில் பிறக்கிறது.
சரி.. எப்போ ..நோ.. பட்டனை அழுத்தி எப்போ இந்த திரும்ப திரும்ப போராட்டதை முடிவிற்கு கொண்டுவரும்.?
எப்போ ஜீவாத்மா போதுமான அளவிற்கு திருப்தியாக வாழ்ந்து விட்டதாக நினைக்கிறோதோ அதாவது .. வைராக்யா.. நிலை ஏற்படும்போது … இந்த வாழ்க்கை சூழலுக்கு நோ பட்டனை அழுத்தி முடித்துக் கொள்ளும்…
சரி… வைராக்யாவை எப்படி பெறுவது.. அதற்கு நீங்க ஒரு சத்குருவின் உதவியை நாட வேண்டும்…
(அய்யோ சாமி ஆளவிடுங்கடா சாமி…தாணே புயல் வந்துடுச்சு…)
நன்றி… தி ஸ்பீக்கிங் ட்ரீ.. http://www.thespeakingtree.com & TOI,MDU
KIDS PLEASE PLAY VIDEO GAMES.. TILL YOUR PARENTS END THEIR
QUARRELS.