நாஸ்தி .. ஒஸ்தி

நேற்றைக்கு ஒரு சூறாவளியில் மாட்டிக் கொண்ட விபரத்தை உங்களிடம் அவசியம் பகிர்ந்து கொள்ள வேண்டும். நம்ம எஸ்டிஆர் நடித்த ஒஸ்தி பார்த்ததைத்தான், அடேங்கப்பா.. என்னா பில்டப்… ஸ்ட்ராங் ஆனா பாடி வீக்..

கதையை பார்ப்போம், சின்ன வயது அண்ணன் (எஸ்டிஆர்) அதாம்பா சிம்பு, தம்பி (ரமேஷ்), அப்பா (நாசர்), அம்மா (ரேவதி) .. அப்பா தம்பி ஜாதகத்தைப் பார்த்து நல்லா இருக்கு அண்ணன் ஜாதகம் மோசம் என ஆரம்பத்திலே இருந்து அண்ணணை மட்டம் தட்ட, அம்மா ஆதரிக்க காலம் ஒடிக்கொண்டே போகிறது..

அண்ணா எப்படியோ (எப்படி ?) அதே ஊரிலேயே (காட்டுப்பாக்கம் ) இன்ஸ்பெக்டராம்… பக்கத்து வீட்டு பத்தாவது படிக்கும் பையன் போல் இருக்கிறார். ஆனால், சுமார் 25 ரடிவுகளை பந்தாடி நடுங்க வைத்து, அவங்களிடம் 25 லட்சமா ? 75 லட்சமோ ( இரண்டு இடங்களில் ஒரு இடத்தில் 25 லட்சம் என்றும், மாவட்ட கலெக்ட்ரோ 75 லட்சம் சொன்னதா நாபகம் ) ஆட்டைய போட்டு வீட்டுக்கு கொண்டு போகிறார். ஒட்டை போலீஸ் ஜுப்பையும் ஆட்டைய போட்ட பணத்தில் புதியதாக வாங்கி விடுகிறார். (எப்படி ?) ஆட்டைய போட்ட பணத்தில் கூட வந்த காமெடி போலிஸ் அண்ணாச்சியை சுட்டு மருத்துவமணையில் போட்டு 100000 மணைவியிடம் (காயம்பட்டவர்) கொடுத்து அரசாங்கம் கொடுக்கலைன்னாலும் நான் கொடுப்பேன், இதே இறந்து போனா 500000 தருவேன் என மனைவியை தானே அரசாங்கம் போல செயல்பட்டு நம்மை கிலிப்படுத்துவார். வில்லன் தேர்தலுக்காக வாக்காளருக்கு கொடுக்க இருந்த பணத்தை ஆட்டையை போட்டதாலா, வில்லன் சிம்புவோட அம்மாவை போட்டுள்தள்ளி (சஸ்பென்ஸ் ஆம்…) அப்பாவை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி, தம்பியை விட்டு மந்திரியை போட்டுத்தள்ளி ( அரசாங்கம் பார்த்துக்கொண்டு சும்மா நிக்குமாம்… ) இடையே… அடியாள்களைத் துரத்த போய் கதாநாயகி ( மெழுகு சிலைப்போல் அந்நிய மாநில இறக்குமதி ) மார்போட நிக்கிறதபார்த்துட்டு ஜொல்லு விட்டு பின்னாடியே துரத்துரதும், போலீஸ் ஸ்டேஷனில் வைத்து கதாநாயகியை சிரிக்க வைப்பவருக்கு 1000 என பரிசு அறிவிப்பதும் மிகக் கேவலம்…
கதாநாயகியின் அப்பா ஒரு தண்ணி வண்டியாம்…எப்போ பார்த்தாலும் கையில் கிளாசும் சரக்குடனும் இருப்பாராம், கதாநாயகி பானை வித்து வர காசுலே அதெல்லாம் முடியுமா…. கடைசியில் கதாநாயகிக்காக அப்பா உயிர விடுறது மட்டும் நல்லாயிருக்குப்பா.

சண்டை…. பாட்டுக்களை எடுத்தவிதங்கள் லொக்கேஷன்கள் ரொம்ப அருமை… அதமட்டும் நம்பி ஒரு கூடை பூவுடன் இந்த முறை தரணி நம்மை கில்லியாடிக்கிறார்…

இது ஒரு தமிழக போலிஸ்சை நாஸ்தியாக்கும் ஒஸ்தியான படமாக்கும். இதைப்பார்த்த பொழுது ஒரு தங்க் பதக்கம், வால்டர் வெற்றிவேல், காக்க காக்க எல்லாம் கோவில்கட்டி கும்பிடவேண்டிய படங்களாகும்…

ஒஸ்தியை விட கில்லியை திரும்பி ஒருமுறை தியேட்டரில் ஓடவிட்டுக் காட்டி ரசிகர்களை குஷி படுத்தியிருக்கலாம்.
பெட்டர் லக் நெக்ஸ் சிம்பு….

More than a Blog Aggregator

Thiratti.com Tamil Blog Aggregator

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s