கன்னி மேரி கண்ணைத்திறந்து பார்க்குதா ?!

திருச்சிமாநகரில் மத்தியில் அமைந்திருக்கிறது, அமெரிக்கென் மருத்துவமணை என்னும் குழந்தை ஏசு மருத்துவமணை மிகப்பழமையானதும் புகழ்பெற்றதாகும். இதனை கிருஸ்துவ மிஷனின் கீழ் நடைபெற்றுவருகிறது. கடந்த ஒருவாரமாகவே, மாநகர மக்கள் மட்டுமல்லாமல், அக்கம் பக்கம் உள்ள ஊர்களில் இருந்தும் மக்கள் குழந்தைகுட்டிகளுடன் வருகை புரிந்தனர். எதற்காக..

அங்கே உள்ள சேப்பலின் அருகே, மேரி மாதா உருவாச் சிலை சுமார் 2 அடி இருக்கும் மலைமீது இருப்பதுபோல் அமைக்கப்பட்டுள்ளது. அச்சிலை திடீரென கண்களைத் திறந்து பார்க்கிறது என செய்தி பரவியதே காரணம். கூடுதலாக அனைத்து லோக்கல் பேப்பர்களிலும் செய்தி போடப்பட்டதால் பள்ளி செல்லும் வேலைக்குச்செல்வோர், வீட்டிலிருப்போர் என அடித்து பிடித்துக் கொண்டு பார்க்க சென்றவண்ணமிருக்கின்றனர். உண்மையில் என்ன நடக்கிறது.?

பிஷப் பொறுப்பில் உள்ளவர் கூறுகையில் இத்தகைய நடப்பு உண்மையா பொய்யா என்பதைத் விடுத்து மக்கள் ஆர்வமுடன் மேரி மாதாவை தரிசனம் செய்வதை நாம் மனமாற வாழ்த்துகிறேன், எனவும், மருத்துவமணை நிர்வாகவே, புரளியை கிளப்பி விட்டு விட்டனர் என்பதை மறுத்து தலைமைப் பொறுப்பில் இருக்கும் சிஸ்டர் கூறுகையில், நாங்கள் ஏற்கனவே பிரபலமானவர்கள் மேலும் இதுபோன்ற புரளியைக் கிளப்பி புகழ்பெற வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்தனர்.

கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டி தடுப்புகள் அமைத்தும், திருவிழாக் கூட்டத்தைப் பயன்படுத்தி பஞ்சு மிட்டாய், பாப்கார்ன் கடைகளும், முக்கிய ரோட்டில் அமைந்திருப்பதால் மிக மிஞ்சிய ட்ராபிக் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

சரி, கட்டுரையாளர் என்ன சொல்கிறாய் என கேட்பது காதில் விழுகிறது. நானும் குடும்பத்துடன் சென்று பார்த்தேன். மேரி மாதா சிலையின் கண்கள் அங்கும் இங்கும் அலைபாய்கிறது உண்மைதான் என்பது போல் தோன்றுகிறது. அதாவது நாங்கள் வரிசையில் இருந்து உள்ளே நுழையும் இடத்தில் இருந்து பார்க்கும் பொழுது மட்டும் கண்கள் அசைவது போலவும், கிட்டே இருந்து அல்லது நேரடியாக நின்று பார்க்கும் பொழுது எந்தவொரு அசைவும் இல்லை. இது ஒரு இல்லுசன் மேஜிக் என்றே தோன்றத் தோனுகிறது. நீங்க என்ன சொல்றீங்க…
More than a Blog Aggregator

Thiratti.com Tamil Blog Aggregator

Advertisements

One thought on “கன்னி மேரி கண்ணைத்திறந்து பார்க்குதா ?!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s