முல்லைப் பெரியார்.. சில உண்மைகள்…

முல்லைப் பெரியார்.. சில உண்மைகள்…

1. முல்லை ஆறு மற்ற சிறிய ஆறுகளுடன் கலந்து பெரிய ஆறாக உருவெடுக்கும் இடம்… (பெரியார்…ஈரோடு பெரியார் நினைவாக அல்ல…) தமிழ்ப்பெயர்.

2. முல்லைப்பெரியாருக்கு உண்மையில் சிவகிரி அருகே தமிழக எல்லையில் தான் நீர்பிடிப்பு பகுதி ஆரம்பம்.

3. பெரிய ஆறு டேம் உடைந்தால் கூட 23 கிலோமீட்டரில் மட்டுமே சமவெளியாகவும், மீதி இடங்களில் மலைகள் போன்ற இடங்களில் பாய்கிறதாகவும், சுமார் 11 இடைப்பட்ட சிறிய அணைகளை தாண்டித்தான் செல்கிறது..

4. நீர்பிடிப்பு பகுதியில் மறைந்த சாகுபடி நிலங்களாக சுமார் 8500 ஏக்கருக்கு, மொத்தம் ரூ. 2 லட்சத்திற்கு மேல் தமிழக அரசு இன்றும் கிஸ்தி தருகிறது.

5. முதல்முறை டேம் கட்ட ஆரம்பித்து சிறிது நாளில் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு, பிறகு அரசு உதவி இல்லாமல் பென்னிகுக் ஆங்கிலேயேரால் சொந்த பணத்தைக் கொண்டு கட்டப்பட்டது.

6. முல்லைப்பெரியார் டேம் மட்டும் தமிழக எல்லைக்குள் இருந்தால் தென்தமிழகம் முழுவதும் செழிப்பாக இருந்திருக்க வாய்ப்புள்ளது.

7. சுமார் 25 சதவீதம் தண்ணீர் வீணாக கொச்சி அருகே கடலில் கலக்கிறது.

8. தண்ணீர் பிடிப்பு பகுதியில் கடந்த 25 வருடங்களாக 136 அடிக்கு கீழ்தான் தண்ணீர்பிடிப்பு இருப்பதால் ஆயிரக்கணக்கான நிலங்கள் கேரளக்காரர்களால் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டதாகத் தெரிகிறது.

9. கேரளத்தில் விரைவில் இடுக்கி ( பெரியார் பாயும் பகுதி ) அருகில் தேர்தல் வரஇருப்பதால் அனைத்து கட்சிகளும் பெரியார் அணை பிரச்சினையை கிளப்பிஇருப்பதாக மீடியா கூறுகிறது.

10. கேரளஎல்லையில் பணிபுரிந்த ஏழை தமிழர்கள் விரட்டி அடிக்கப்பட்டும் பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாக்கப் படுவதை கேள்விப்பட்டு எல்லையோர கிராம மக்கள் கொதித்து தொடர்ந்து போராட்டங்களில் குதித்துள்ளனர்.

11. அரிசி, காய்கறி, பால், மணல், மற்றும் இதர முக்கிய பொருள்கள் அணைத்தும் தமிழ்நாட்டில் இருந்து 13 முக்கிய சாலைகள் வழியே கேரளாவிற்கு எடுத்து செல்லப்படுகிறது. சுமார் 60 லட்சம் கேரள மக்கள் தமிழகத்தில் வசிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

12. சபரிமலைக்கு தமிழகத்தில் இருந்து எளிமையாக சென்று வரும் குமுளிப்பாதையில் பதட்டம் நிலவுவதால், செங்கோட்டை அல்லது பாலக்காடு வழியாக வசதியானவர்கள் சென்று வருகிறார்கள் எனவும், பிறர் எல்லைப்பகுதியில் உள்ள கம்பம்மெட்டு அய்யப்ப சேவா சங்கத்தில் அல்லது திருச்சியில் உள்ள அய்யப்ப கோவிலியே இருமுடி அவிழ்த்து, அய்யப்ப அருளைப் பெற்றுக்கொள்கிறார்கள்.

13. கேரள அரசு அத்துமீறி எல்லையில் போராட்டாக்காரர்கள் நுழைந்தால் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டுப்பதாக மீடியா தெரிவிக்கிறது. தமிழக அரசும் சுமார் 4000 போலீஸ்களை உயர் அதிகாரி முன்னிலையில் எல்லையில் குவித்து, தடியடி போன்றவைகளைப் பயன்படுத்தி போராட்டாக்காரார்களை விரட்டியடித்து வருகிறதாக தகவல்கள் வருகிறது.

14. இதுவரை, சிறிய அளவிலான கல்வீச்சு சம்பவங்கள் போராட்டாக்காரர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

15. தமிழகத்தில் சுமார் 60 சதவீதம் நகைவியாபாரம், மற்றும் அடகு கடைகளை கேரளாக்காரர்கள் வைத்திருப்பதாக தெரியவருகிறது.

16. உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. தமிழக அரசு அவசரமாக சட்டசபையை கூட்டியுள்ளது..

17. கேரளாவின் 70 சதவீத மின்உற்பத்தி பெரியார் நதியை சார்ந்து உள்ளது.

18, உச்சநீதிமன்றம் 120 அடியாக நீர்மட்டத்தை குறைக்க அளித்த மனுவை நிராகரித்தது.

19. தமிழக அரசு முல்லைப்பெரியார் பிரச்சினையை பற்றி அனைத்து நாளிதழ்களிலும் தன்னிலை விளக்கம் வெளியிட்டுள்ளது.

More than a Blog Aggregator

Thiratti.com Tamil Blog Aggregator

Thenkoodu

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s