சசியின் சமூக அக்கறை….

சசியின் சமூக அக்கறை….

நம்மைச்சுற்றிலும், நாம் தினம்தோறும் பல மனநோயாளிகளைப் பார்க்கிறோம்… ஆனால், ஒரு சிறிய உதவி கூட அவர்களுக்காக இதுவரை செய்யாததற்கு வெட்கப்படும் வகையில்… சசி குரூப் இந்தமுறை இந்த போராளியை இறக்கியிருக்கிறது.

சசியும், சசியின் நண்பரும் பட்டணத்திற்கு தப்பி வருகிறார்கள். வந்த இடத்தில் ஒரு மனநிலை தப்பியவரின் உதவியால், பெட்ரோல் பங்க்கில் வேலைக்கிடைக்கிறது… கருப்பின் நட்பைப் பிடித்து தங்க ஒரு காம்ப்வுண்ட் இடம் பிடித்து கொள்கிறார்கள்… அக்கம் பக்கம் பல மனிதர்களின் செயல்பாடுகள் குறிப்பாக சண்டைகள், நம்மை ஒரு முறை சுற்றிலும் பார்க்க வைக்கிறது. (அருமையான தொய்வில்லாத படம்பிடிக்கப்பட்டுள்ளது). கூட வேலை செய்யும் பெண்ணின் அக்கா வீட்டுக்காரர் கொடுமையை சசியிடம் சொல்ல, லாவகமாக தீர்த்து வைத்து, பொருளாதார குறைபாட்டை நீக்க பிள்ளையார் பாயிண்ட் சர்வீஸ் தொடங்கி படிப்படியாக வளர்ந்து வருகிறார். அப்பப்பா பிறருக்கு ஒடிப்போய் உதவி, அட்ரா சக்கை என்று பாராட்டையும் அன்பிற்கு உண்டாம் அடைக்கும் தாழ் என அனைவரின் மனதையும் தொட்டுவிடுகிறார்.

தொடர்ச்சியாக ஒரு கும்பல் (உறவினர்கள் கூட்டம்) தொறத்தி பிடிக்க இவர்கள் ஓட பிளாஷ்பேக்கில் இவர் பள்ளிக்கூடத்தில் நிலாவில் வலது காலை வைத்த முதல்மனிதர் யார் என ? வாத்தியாரிடம் கேட்க வாத்தியார் உதைக்க, பள்ளியை விட்டு நீக்கி, தினமும் பிள்ளையாருக்கு 108 குடம் தண்ணீர் பிடித்து அபிசேகம் செய்து நண்பருடன் ஊர்சுற்றி ஆகிறார். ஒரு மாதிரி பையித்தியம் போல் குடும்பத்தினர் ஆக்கிவிட, ஒருகட்டத்தில் மிகப்பெரிய சொத்துக்கள் எல்லாம் இவர் கையில் வர, அந்த இடத்தில் யுரேனியம் கிடைப்பதால் 15 கோடிக்கு (சுமார் 5 இலட்சம் மதிப்புள்ள இடத்தை) பாம்பே பார்ட்டி கேட்க, சித்தி மற்றும் உறவினர் இவரை துரத்த ஒரிஜினல் பத்திரம் வைத்து காப்பாற்றி வரும் உண்மையான வேலைக்காரத் தாத்தாவும், பேத்தியும் இவரைக் காப்பாற்றிவிட்டு உயிரைத் துரக்க வெறியேறி, அடியாள் கூட்டத்தை முழுவதும் போட்டுத்தள்ளி, வழக்கை சந்தித்து, மனநிலை சரியில்லாதவர் என்பவர் போல் ஏற்கனவே சித்தரித்து இருந்ததால் மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்டு அங்கே ஒரு நண்பரை கண்டுபிடித்து, நல்லது செய்து…. ஊர்விட்டு ஓடி பட்டணத்திற்கு வந்து விடுகிறார்கள்.

முடிவில் உறவினர் கூட்டம் துரத்த, இவர் மற்றும் காதலியுடம், நண்பர் மற்றும் காதலியுடம் ஒரு பிளைஓவரில் ஓட, இறக்கம் வந்ததும், இன்னும் எவ்வளவு தொலைவு ஓடுவது என முடிவெடுத்து அனைத்து உறவினர்கள் மற்றும் அடியாள்களையும் துவைத்துதெடுத்து சுதந்திரப்பறவையாக கிளம்பி நம்மையும் தியேட்டரைவிட்டு துரத்துகிறார்கள்.

நண்பராக கிராமத்து சிறியவயது மற்றும் பெரிய வயது, மற்றும் நகரத்து நண்பர், கஞ்சா கருப்பு, பெட்ரோல் பங்க் ஓனர், ஞானசம்பந்தம், வீட்டில் குடியிருக்கும் ரேடியோ மிர்ச்சி பேச்சாளர் நைட்டியுடன் அவரது மனைவி, எதிர்த்த வீட்டில் இருக்கும் ஏஞ்சல் பாட்டி, அவரது குட்டி தங்கை, அமைதிக்கு பெயர்தான் சாந்தி எனப் பாட்டுபோடும் நண்பர்… அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். ஓளிப்புதிவு நன்று.

எத்தனையோ குப்பைகளைப் பாத்த நமக்கு … இந்த போராளியையும் தவறாம பார்த்து வைக்கலாம்.

More than a Blog Aggregator

Thiratti.com Tamil Blog Aggregator

Thenkoodu

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s