மனைவியை நாலு சாத்து சாத்தினால்…?

மனைவியை நாலு சாத்து சாத்தினால்…?

கொஞ்சம் லேட்டாத்தான் பார்க்க முடிந்தது….செல்வாவின் லேட்டஸ்ட் மயக்கத்தை சொல்கிறேன். தம்பியை வைத்து அந்தகாலத்தைப்போல உறிட் தட்டி, விட்ட இடத்தை பிடிக்க முயற்சி செய்திருக்கிறார். தனிப்பட்ட வாழ்க்கையின் தோல்வி மற்றும் கசப்பான அனுபவங்களின் அடிப்படையில் பெண்களை அடிடா… கொல்லுடா… என கொலைவெறியுடன் ஒரு பாடலையும் போட்டிருக்கிறார்கள்.

1) தனுஷ் நடிப்பு மெருகேரிக் கொண்டே போகிறது..
2) கதாநாயகி… ஆரம்பத்தில் ரொம்ப மாடர்ன் கேர்ள் போன்று செய்கையினால் தோன்றினாலும், பிற்பாடு கட்டுப் பெட்டித் தனமான கல்லானனும் கணவன் புல்லானலும் ( டாஸ்மார்க் புல்லும் உண்டு ) புருஷன் என்ற ரேஞ்சுக்கு மாறி… தனுஷ்யை காப்பாற்றுகிறார்.
3) கிராமத்தில் இருந்து கஷ்டப்பட்டு திறமையுடன் வரும் இளம் கலைஞர்களை ஊக்கிவிக்காமல், அவர்களின் உழைப்பையே திருடும் ஒரு சில வெற்றியாளர்களின் முகமூடியை கிழித்திருக்கிறார்கள்.
4) அதிர்ஷ்டம் இருந்தால், எப்படியும் வெற்றி கிடைத்து கீரிடம் தலைக்கு வரும் என்பது போல், குமுதம் பத்திரிகையில் வெளியான புகைப்படத்தை ரெப்பர் செய்யும் கட்டத்தில் அது தவறி பலருடைய டேபிளுக்கு சென்று குப்பைக்கு சென்று மீண்டும் யாரிடம் செல்லவேண்டுமோ அவரிடம் சென்று அதன் மூலம் வெற்றி கிடைப்பது நல்ல யுக்தி.
5) தற்காலத்தில் ஒரு அப்பா, டீன்ஏஜ் பசங்களிடம் எப்படி இருக்க வேண்டும் என ஒருவர் நடத்துகொள்கிறார் ஆனால் கிளாசில் சரக்கை ஊற்றி குடிடா எனக் கொடுப்பது கொஞ்சம் ஓவர்.
6) கதாநாயகி பாத்ரூமைத் திறந்து வைத்து குளிப்பதும், நண்பர் அவசரமாக கிளம்பிவிட பாதுகாப்பு பணியில் இருக்கும் தனுஷ்யை பல்லியை கண்டு பயப்பட்டு அலறி கூப்பிடுவதும், தனுஷ் வெட்கப்படுவதும், பிறகு பல்லியை விரட்ட செய்யும் கூத்தும் 100 சதவீதம் ரசிக்கத்தக்கது.
7) நண்பர்கள் சேர்ந்து கும்மாளடமிட மட்டுமல்லாமல் பிரச்சினை வரும் பொழுதும் சேர்ந்திருப்பது அருமை.
8) ஒளிப்பதிவு நன்றாக இருப்பினும், அதிகமாக இரவிலேயே படம் பிடித்திருக்கிறார்கள். ஏன்?
9) பாடல்களும், இசையும் பரவாயில்லை… (எங்கே தான் போவார்கள் அனைவருக்கும் பிடித்த இசையும் பாடலையும் எழுத…வருவதை ரசிக்க கற்றுக் கொள்வோம்)

ரசிக்கலாம்…. வேலையைமுடித்துவிட்டு பீரியாக இருந்தால்…

அதுசரி இதுக்கும் மனைவியை நாலு சாத்து சாத்தினால் என்னவாகும்.. திருப்பி உதைவிழும் …..

More than a Blog Aggregator

Thiratti.com Tamil Blog Aggregator

Thenkoodu

4 thoughts on “மனைவியை நாலு சாத்து சாத்தினால்…?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s