பெயர் சொன்னா புலி ஒதுங்கும்..

பெயர் சொன்னா புலி ஒதுங்கும் ..

வெள்ளித்திரையை முறைத்து பார்த்துக்கொண்டிருந்த நமக்கு விக்ஸ் ஆக்சன் 500, உறார்லிக்ஸ் விளம்பரங்களை முடித்து, சென்சார் சர்ட்டிபிக்கேட்டை காண்பித்தார்கள்.. இளையராஜாவின் இனிய குரலில், காட்டுவழி போற புள்ள கலங்கி நிக்காதே, மம்பட்டியான் பேரு சொன்னா புலி ஒதுங்கும் பாரு…ன்னு கணீர் என்ற குரலில் பாட்டுடன் மலை கிராமங்களை பின்புலமாக காண்பித்து, டைட்டில் கார்டு காட்டப்படுகிறது.

மலைக்காடு பிரதேசத்தில், ஊரையே அடித்து உலையில் போடும் பண்ணையார் மற்றும் அடியாட்கள், தட்டிக் கேட்க யாரும் இல்லாத நேரத்தில், மண்வெட்டி பிடித்து உழவு செய்யும் நமது நாயகன், பண்ணையாரின் அட்டூழியம் பொறுக்க முடியாமல் பொங்கி எழுகிறார்.. பண்ணையாரின் அரசியல் செல்வாக்கை வைத்து, போலீசை கைக்குள் போட்டுக் கொண்டு மம்பட்டியானை பிடிக்க போலீசை அனுப்புகிறார்கள்.. தகவல் அறிந்து மம்பட்டியான் ஒரு குதிரைவண்டியில் தப்பி ஓடுகிறார். வெகு வேகமாக குதிரைவண்டி தெருக்களில் ஓடியும், ஒரு இடத்தில் ஒரு சிறிய குழந்தை நடுவீதியில் வந்து விடுவதால், மம்பட்டியான் வண்டியை நிறுத்தி போலிஸ் இடம் மாட்டிக் கொள்கிறார். லாக்கப்பில் போலிசார் நன்றாக துன்புறுத்தி தலைகீழாகக் கட்டித் தொங்க விட்டுவிடுகிறார்கள்.. இரவு நேரம் வந்ததும், ஆடிக்கொண்டே அருகில் இருந்த (எங்கேயும் எப்போதும் கரண்ட் கட் இருக்கும் போல…) மெழுகுவர்த்தியை வாயினால் கவ்வி கயிறை அறுத்து, ஜன்னலை உடைத்து, தப்பி மறைமுகமாக வீரப்பன் போல மலைப்பிரதேசத்தில் ஒளிந்து கொள்கிறார். அவருக்கு ஒரு சில உதவியாளர்களும், தகவல் அளிப்பவர்களும் சேர்ந்து கொள்ள, சுற்றுவட்டாரத்தில் அநியாயம் செய்பவர்களிடம் தட்டிப் பறித்து ஏழை எளியவர்களுக்கு அளிப்பதால் நல்ல பெயரை கூடிய விரைவில் சம்பாதித்து விடுகிறார்.

ஒருமுறை, திருமண கோஷ்டி காட்டுவழியே ( நான்கு வழிப்பாதைகள் கிடையாதா ? ) போகும்போது திருடர்கள் வழிமறைக்க, மாப்பிள்ளை உட்பட அனைவரும் அடித்து பிடித்து ஓடிவிடுவதால், மணப்பெண் மட்டும் பயந்து கொண்டே மாட்டு வண்டியில் அமர்ந்திருக்கிறார்.. அப்போது மம்பட்டியான் அங்கே விஜயம் செய்து திருடர்களை விரட்டி மணப்பெணை ஊரில் கொண்டுவிட ஏற்பாடு செய்கிறார். மணப்பெண், மாப்பிள்ளையை கைகழுவி விட்டு, மம்பட்டியானை விரும்ப ஆரம்பிக்கிறார். ஓடையில் குளிக்கும்பொழுது சேலை தவறி சென்று விடுவதை மம்பட்டியான் கவனித்து எடுத்து தருவதால்.. பின்புலத்தில் சின்ன பொன்னு சேலை, செண்பகப்பு போல என மீண்டும் இளையராஜா பாட ஆரம்பித்து விடுகிறார்.

இதற்கிடையே, உள்ளிக்கோட்டை சொர்ணம் என்னும் டகால்ஜி பிகர் ஊருக்கு வந்து சேர்கிறது. பண்ணையார் ஜாலியாக இருந்த நேரம் போக, மம்பம்பட்டியானும் இரவில் வந்து போகிறார்.. ( வெள்ளைக்கொடியை குடிசையில் ஏற்றி சிக்னல் ஆபத்து இல்லை என காட்டப்படுகிறது)

ஒரு கட்டத்தில் போலிஸ் மம்பம்டியானை பிடித்தே தீர்வது என முடிவுகட்டி சொர்ணம் வீட்டில் வெள்ளைக்கொடி ஏற்றி காத்திருக்கிறது. சொர்ணம் வீட்டிற்கு வந்த மம்பட்டியான் சூழ்நிலையை அறிந்து உடனே தப்பிவிடுகிறார். காலச்சூழலில் கூட இருந்த உதவிசெய்தவராலேயே காட்டிக் கொடுக்க, போலிஸ் பிடியில் இருந்து தப்பிக்க, துப்பாக்கி குண்டு பாய்கிறது.

1984ல் வெளியான மம்பட்டியன் படத்தில் தியாகராஜன் மம்பட்டியானாகவும், சரிதா காதலியாகவும், ஜெயமாலினி சொர்ணம் ஆகவும்..காமெடிக்கு கவுண்டமணியும் நடித்திருந்தார்கள். இளையராஜாவின் இனிமையான இசை, அழகான படப்பிடிப்பு மற்றும் 100 நாட்களுக்கு மேல் ஒடியாதாக ஞாபகம்.

லேட்டஸ்ட் மம்பட்டியான், அவரது மகன் பிராசாந்த்தும், மீராஜாஸ்மின், வடிவேலு, விஜயகுமார் நடித்து இன்று வெளியாகிறது… அத இன்னும் பாக்கலை….அடிக்க வராதாதீங்க.. பிளீஸ்..

More than a Blog Aggregator

Thiratti.com Tamil Blog Aggregator

Thenkoodu

2 thoughts on “பெயர் சொன்னா புலி ஒதுங்கும்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s