டாண் 2 … விமர்சனம் DON 2 FILM REVIEW

டாண் 2 .. விமர்சனம் DON 2 FILM REVIEW

உலக சினிமா தரத்தில் எடுக்கப்படவேண்டும் என எல்லாருக்கும் ஆசைப்போல டாண் 2 .. மிகுந்த பொருட்செலவில் முழுக்க முழுக்க குறிப்பாக ஐரோப்பாவில் எடுக்கப்பட்டிருக்கிறது.
படம் ஆரம்பத்தில் என்ன வந்தது எனத்தெரியவில்லை.. உள்ளே சென்று அமரும்போது நமது நாயகன் ஜெயில் கம்பிகளுக்குப் பின் நண்பருடன் சேர்ந்து அருதப்பழசான திட்டத்தின் மூலம் தப்பிக்க திட்டம் போடுகிறார். ஜெயில் மிக அருமையாக 5 ஸ்டார் ஓட்டல் போலிருக்கிறது.. முழுக்க மாடர்ன்..கைதிகள் அனைவருக்கும் வயிற்றுவலிவரும் மருந்தை உணவின் மூலம் வழங்கி ஆம்புலன்ஸ்களை வரவழைத்து, ஷாரூக்கானும், அவரது நண்பரும் தப்பிவிடுகிறார்கள் ?.. உஸ் அப்பாடா இப்பவே கண்ண கட்டுதேனு அல்லாரும் பார்க்கிறார்கள்..

DON2 (TAMIL) FILM REVIEW

அப்புறம் தான் தெரிகிறது, நம்மாளு மிகப்பெரிய டானும், இண்டர்போல் போலீசை சேர்ந்த பியூட்டி கதாநாயகி மற்றும் பாஸ் ஓம்பூரியுடன் சேர்ந்து தேடுகிறார்கள்… நம்மாளு இந்தமுறை மிகப்பெரிய திட்டம் போடுகிறார்கள்.. ஈரே பணம் கொள்ளையடிக்க தேவையில்லையாம்… அந்த ஈரே பணம் அச்சடிக்கும் பிளாக்கை கொள்ளையடித்தால் போதுமாம், தேவையான பணத்தை இவங்களே அச்சடித்துக் கொள்ளலாம் என ( நம்புவோம்.. ) காரியத்தில் இறங்குகிறார்… அடிக்கடி எஸ்.பி.சரன் தயாரித்த தமிழ், நாணயம் படம் ஞாபகத்தில் வந்து விடுகிறது. அதற்காக ஒரு ஸ்மார்ட் கம்ப்யூட்டர் றேக்கரை கண்டுபிடித்து கூட்டாளியாக்கிறார். பிறகு.. பணம் அச்சடிக்கும் அரசு நிறுவனத்தின் துணை தலைவர் (ஒரு இந்தியராக்கும்) பிளாக் மெயில் செய்து பிளானுக்கு தேவையான விபரங்களைப் பெறுகிறார். இடையே, துணைத்தலைவர், ஒரு அடியாள் குரூப்பை அனுப்ப அவர்களைப் பேசிபேசியே டாண் குரூப்பில் இணைத்து விடுகிறார். ஆக, ஒரு பெரிய கேங்க் ஆக மாறிவிடுகிறது.

இடைவேளை வரையில் இண்டர்போல் அழகி போலிஸ் டாணை பின்தொடர்ந்தும், 2 சதவீதம் மட்டுமே வெற்றியடைகிறார்கள். இடையே அனாவசியமாக பெர்லின், ஜீரிச் நாடுகளின் வீதிகளில் ஒரு கார் சேசிங் (படு கேவலமாக இருக்கிறது). நம்மாளு டானுக்கு இண்டர்போல் போலிஸ் அழகியுடன் ஒரு ஈர்ப்பு… சின்னப்பிள்ளைத்தனமாய் இருக்கு…
கடைசியில் ஒரு நல்லநாளில் கேங்க், தயார் செய்யப்பட்ட தீயணைப்பு வண்டி, கரண்ஸி தயாரிக்கும் நிறுவன வண்டி, ஏகப்பட்ட வெடிமருந்துகள் துப்பாக்கிகளுடன் கரண்ஸி தயார்செய்யும் பிளாக்கை கொள்ளையடிக்க நிறுவன துணை பிரஸிடெண்ட் உதவியுடன் நிறுவனத்தில் நுழைந்து விடுகிறார்கள்.. ஒரு பெரிய லாக்கரில் பாஸ்வேர்ட், கை ரேகை, ஆபத்தான அமைப்பு என நாணயம் படத்தில் வந்தமாதிரியே அமைக்கப்பட்டிருந்தாலும் நம்ம டாண் அதை சும்மா லைப்ரரிக்குள் நுழைந்த மாதிரி ( லிப்ட்டின் மேல் டாண் குதித்தவுடன் எடை கூடியதைப் பார்த்த இண்டர்போல் போலிஸ் அழகி, டாண் ஒரு மாடியில் மீண்டும் இறங்கியவுடன் லிப்ட் எடை குறைவதைப்பார்க்கிறார் ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன்கிறார். றேக்கரும் களத்தில் இறங்கி நிறுவனத்தின் அனைத்து கண்ட்ரோலையும் கையில் எடுத்துக்கொண்டு திருட்டுக் கூட்டத்திற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கிறார். சுபமாக பிளாக்கை திருடியவுடன், வில்லன்கள் குரூப் டாண்னை போட்டுத் தள்ள பிளான் செய்ய, எப்படியோ அங்கேயிருந்து தப்பி வெளியில் வந்து, போலிஸில் மாட்டி மறுபடியும் போலிஸ் உடன் உள்ளே சென்று, இண்டர்போல் அழகி குண்டடிப்பட்டு சாய்ந்து, கடைசியில் டாண் உடைய அனைத்து எதிரிகளையும் போட்டுத் தள்ளி (நிறுவனத்தின் துணைத்தலைவரையும் சேர்த்து) , ஜெயிலில் தள்ளி, டாண் ஐரோப்பாவில் வசிக்க குடியுரிமை பெற்று (போலிஸ்க்கு உதவி செய்தாராமாம்…)
டாண்..3யில் சந்திக்கலாம் என நீளமாக.. படமாக்கப்பட்டு திரைக்கு வந்திருக்கிறது.

மருந்துக்குகூட சிரிக்காமல் சீரியஸ்ஆக பார்த்துக் கொண்டே இருக்கலாம்… ஷாருக்கானுக்கு டாண் வேஷம் கொஞ்சம் கூட பொருந்தவில்லை… டப்பிங் ரொம்ப மோஷம் (குறிப்பாக ஷாருக்கான் சின்னபையன் மாதிரி பேசுகிறார்..) ஆனாலும்… பார்க்கலாம் ரகந்தான்… பலகோடிகளை முழுங்கியிருக்கும்..(செலவில்) நாமளும் ஒரு கோடியில் (ஜனத்தொகையில்) ஒருத்தாராக பார்த்து வைப்போம்.

More than a Blog Aggregator

Thiratti.com Tamil Blog Aggregator

Thenkoodu

valaipookkal.com Tamil Blogs

http://www.tamil10.com/files/hotlink.php

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s