முல்லைப்பெரியார் விவகாரம் – இளையராஜா வீடு முற்றுகை

முல்லைப்பெரியார் விவகாரம் – இளையராஜா வீடு முற்றுகை
MULLAI PERIYAR ISSUE – ILAIYARAJA HOUSE

கேரளாவைச் சேர்ந்த நிறுவனம் நடத்த உள்ள இசை நிகழ்ச்சியை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி இசைஞானி இளையராஜாவின் வீடு முன்னர் பெரியார் தி.க.வினர் போராட்டம் நடத்தினர். கேரளாவைச் சேர்ந்த பிரபல தங்க நகை விற்பனை நிறுவனமான மலபார் கோல்ட் நிறுவனம், தங்களது நிறுவனத்தின் விளம்பர அம்பாசிடராக இளையராஜாவை வைத்துள்ளது. அந்த நிறுவனத்தின் விளம்பரங்களில் இளையராஜா இடம்பெறும் காட்சிகள் தான் தொலைக்காட்சிகளில் இடம் பெறுகிறது.

இந்நிலையில் இந்நிறுவனமும், இணைந்து 28ம்தேதி சென்னை நேரு விளையாட்டரங்கில் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளது. இந்நிகழ்ச்சி பல வாரங்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்ட நிலையில், முல்லைப் பெரியார் அணை பிரச்சினை திடீரென விஸ்வரூபம் எடுத்துள்ளது. இப்பிரச்சினை தொடர்பாக கேரளாவுக்கு எதிராக தமிழக்கத்தில பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கேரள நிறுவனத்திற்காக மேற்கூறிய இசை நிகழ்ச்சியை இளையராஜா நடத்தக்கூடாது என்று வலியுறுத்தி சென்னை தி.நகரில் உள்ள அவரது வீட்டின் முன்னர் பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்நதவர்கள் இன்று போராட்டம நடத்தினர். அப்போது அவர்கள் மேற்கண்ட நிறுவனத்திற்காக நடத்த ஒப்புக்கொண்ட நிகழ்ச்சியை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தித முழுக்கங்களை எழுப்பினர்.

ஏற்கனவே முல்லைப்பெரியார் அணை உடைவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கும் டேம் 999 படப்பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைக்க விரும்புவதாக கூறி சர்ச்சையில் சிக்கினார் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஉற்மான், தற்போது இளையராஜா அதுபோன்று எதுவும் கருத்து சொல்லவில்லை என்றாலும், எப்போதோ ஒப்புக்கொண்ட இசை நிகழ்ச்சி தற்போது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
.. thanks.தினசூரியன்

More than a Blog Aggregator

Thiratti.com Tamil Blog Aggregator

Thenkoodu

valaipookkal.com Tamil Blogs

http://www.tamil10.com/files/hotlink.php

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s