டிசம்பர் 21ல் உலகம் அழியுமா.. அழியாதா?

டிசம்பர் 21ல் உலகம் அழியுமா.. அழியாதா?
Really the day on 21st December 2012, The World is end ?

ஊடகங்களின் தலையாய பிரச்சினைகளில் தற்சமயம் முன்னிலையில் இருப்பது இந்த டாபிக்தான்.. (12.12.12ல் ரஜினி பிறந்தநாள்தான் முடிஞ்சாச்சே அப்பா சாமி அலப்பறை தாங்க முடியல, எந்தசானலை துறந்தாலும் ரஜினிபாட்டுதான், எப்எம்லாம் ஒரே ரஜினிபாட்டுதான்.. வார, நாளிதழ்கள்லாம் ஒரே ரஜினிமயமாம் தான்… சே…ன்னு பப்ளிக் என்னுமளவிற்கு ஆகிவிட்டது) நம்ம பங்குங்கு நாமும் கொஞ்சம் அடித்து துவைப்போம்.
t3
• 3113 வருடங்களே உள்ள மாயன் காலண்டர் 21.12.2012ல் முடிவிற்கு வருவதால், பலரும் இந்த கருத்தை வழியுறுத்துகிறார்கள். மாயன் என்பவர் மயன் என்பதாகவும், இந்துக்கள் அவரை கடவுளாக வணங்குகிறார்கள் எனவும் ஒரு பதிவில் பார்த்தேன். திரு. கணபதி ஸ்தபதி என்பவர் இந்த மயன் பற்றி விரிவான ஆராய்ச்சி செய்திருக்கிறார் என்கிறார்கள்.

• பைபிள் கூட இந்த வருடமுடிவில் உலகம் அழியும் எனத் தெரிவித்திருப்பதாக, திரு. உமாசங்கர், ஐஏஎஸ் கூறியதாக செய்திகள் கூறுகிறது.

• மதுரை ஆதினமும் அடித்து சொல்றார் உலகம் அழிந்துவிடுமாம்.

• ஆனால், நாஸா வெளியிட்டுள்ள செய்தியில் இதெல்லாம் கட்டுக்கதை, யாரும் நம்பவேண்டாம் என்கிற ரேஞ்சில் அறிக்கை விட்டிருக்கிறார்கள்.
t0
• அதெல்லாம் சரி.. அழியுமா.. அழியாதா… விஞ்ஞான ரீதியில் இந்த உலகம் அழிய என்னவெல்லாம் காரணமாகலாம்..

1. பூமி தனது இயக்கத்தை தாறுமாறாக மாற்றாலாம் அதன் விளைவாக அனைத்தும் தலைகீழாக மாறலாம்.
2. சூரியன் தனது வெப்பக்கதிர்களின் வீச்சை அதிகரிக்கலாம்.
அதனால் பூமியின் வெப்பம் அதீதமாக உயர்ந்து, பொருட்கள் அனைத்தும், நாமும் தான் வெப்பம் தாங்காமல் எரிந்து போகலாம்.
3. வெளியில் உள்ள கிரகங்கள், விண்மீண்கள் போன்றவைகள் பூமியில் வந்து மோதலாம்.
4. புவிஈர்ப்பு விசையில் மாற்றம் ஏற்பட்டு பல விஷயங்கள் ஏற்படலாம்.
5. காற்றுமண்டலத்தில் உள்ள வளிமங்களை வளர்சிதை மாற்றம் / கெமிக்கல் ரியாக்ஷன் மூலம் மாற்றம் அடைந்து அதன்விளைவாக ஆக்ஸிசன் போன்ற இன்றியமைதா வாயுக்கள் காலியாகலாம்.
6. கடல் நீர் திடீரென வற்றிப்போதல், அல்லது பொங்கி எழுதல்
7. பூமிஅதிர்ச்சி ஒரே நேரத்தில் பல்வேறு இடங்களில் ஏற்படலாம்.
8. மனிதமனங்களில் ஒருவித ஒட்டுமொத்த அகோரம் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
9. மேற்கண்ட பல விஷயங்களோ அல்லது ஒரு விஷயமோ ஏற்பட்டு, அதன்விளைவாக மனிதர்களின் இரத்தஓட்ட மண்டலம் சிதையும் படியாக ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டு ஒட்டுமொத்த மனிதஇனமும் மடியலாம்.

1980களில் ஸ்கைலாப் என்னும் சாட்டிலைட் விழுந்து ஒரு ஊரே காலியாகிவிடும் என மீடியாக்கள் (அப்போ பிரிண்ட் மற்றும் ரேடியோ மீடியா மட்டுமே பிரபலம்) அலற, மக்கள் கூட்டம் கூட்டமாக பயந்து போய் வீட்டில் உள்ள ஆடு, கோழிகளை அடித்து சாப்பிட்டு விட்டு, உறாயாக சினிமா பார்த்துவிட்டு, சிவனே என்று கடவுளை வேண்டிக்கொண்டே உறவினர்களுடன் ஒரே இடத்தில் கூடியிருந்ததாக கேள்வி… பின்பு ஸ்கைலாப் கடலில் விழுந்து, அந்த செய்தி ரேடியோ மூலமாக சொன்னபிறகுதான் பலருக்கு மூச்சே வந்ததாம்.

2012ல் அப்படியெல்லாம் நடக்காது என நம்புவோம்.. வழக்கம் போல் இந்த உலகம் நீடூழி வாழ வாழ்த்துவோம்.
Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB

ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு

100லிருந்து … 101 .. கம்பெனி சீக்ரெட்ஸ்

100லிருந்து … 101 .. கம்பெனி சீக்ரெட்ஸ்
100 to 101 – company secrets of bloging

அப்பாடா ஒரு வழியா ஒரு வருடத்தில் 100 பதிவுகள் போட்டாட்டாச்சு, (இது என்ன பெரிசு ஒரு மாதத்தில் 100 பதிவுகள் போடுபவர்கள் இருக்கிறார்கள் … என்ன செய்வது பிளாக்கே கதியா இருப்பவர்களுக்கும் ஓய்வில் பிளாக் பக்கம் கவனம் திருப்புவர்களுக்கும் வித்தியாசம் உண்டள்ளவா…
t0
கம்பெனி சீக்ரெட்ஸ்ன்னா…. இந்த பதிவுலகில் பெற்ற அனுபவங்களின் தொகுப்புதான் இந்தப் பதிவு.

முதல் சீக்ரெட்… நம்மாளுங்க எல்லாருக்கும் அந்த மாதிரி விஷயங்கள் ரொம்ப பிடிக்குது…

இரண்டாவது சீக்ரெட்… சினிமா சம்பந்தமான செய்திகளை விரும்பி விரும்பி படிக்கிறார்கள்.

மூன்றாவது சீக்ரெட்… தலைப்பு சரியில்லாவிட்டால் நல்ல பதிவைக்கூட சீந்துவதற்கு யாருமில்லை.. அதே போல் மொக்கை பதிவு கூட நச் தலைப்பைப் பார்த்து ஓடிஓடி ஓப்பன்செய்கிறார்கள்.
t1
நான்காவது சீக்ரெட்.. தமிழ்வெளி, தமிழ்மணம், யூடான்ஸ், தமிழ்10, உலவு, தேன்கூடு, இண்டலி இன்னும் சில திரட்டிகளில் இணைத்தாலும், அவர்களின் முன்னிலைப் படுத்துதலைப் பொறுத்தே நமக்கு உறிட்ஸ்கள் அள்ளுது.

ஐந்தாவது சீக்ரெட்.. திங்கள் மதியம் அல்லது செவ்வாய், புதன் அன்று போடப்படும் பதிவுகளுக்கே வரவேற்பு அதுவும் வெள்ளிக்கிழமை மதியம் போடப்படும் பதிவுகள் முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது.. (ஏன்னா… விட்டகுறை தொட்டகுறை வேலைகளை முடித்துவிட்டு வீக்எண்ட் கொண்டாடப் போக வேண்டாமா? அப்பபோய் உங்க பதிவைப் போய் யாராவது படிக்கவருவார்களா அம்மாஞ்சி மாதிரி சொல்லவந்தீட்டீங்க…)

ஆறாவது சீக்ரெட்.. வெளிநாட்டில் அதுவும் ஒண்டிக்கட்டை ரிமோட் நாடுகளில் உதாரணம் செசல்ஸ், ஐரோப்பா நாடுகளின் மூலைமுடுக்குகளில், கப்பல்களில் செல்லும் தமிழர்களே தமிழ் பிளாக்களுக்கு பெரும்பாலும் தொடர் ஆதரவு தருகிறார்கள்.
t2
ஏழாவது சீக்ரெட்.. பின்னூட்டம் வந்தால்தான் பிளாக்கை தொடருவேன் என அடம்பிடிக்காமல், வந்தாலும் சரிவராவிட்டாலும் சரின்னு தொடர்ந்து எழுதுபவர்களையே இந்த உலகம் நம்புகிறது..

எட்டாவது சீக்ரெட்.. போட்டிபோட்டுக்கொண்டு முதல் இடம் பெற எண்ணக்கூடாது (ஏனென்றால் அது எட்டாக்கனி ஏற்கனவே பல ஜாம்பவான்கள் அதை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள்)

ஒன்பதாவது சீக்ரெட்.. தப்பித்தவறி யாரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு பிளாக் எழுதக்கூடாது…

பத்தாவது சீக்ரெட்.. இந்தவாரம் இந்த தகவல் சிக்கிடுச்சுன்னு ஒவ்வொருவாரமும் தலைப்பு மற்றும் செய்திகளை தெரிந்தெடுத்து எழுதினால் மக்களின் வரவேற்பு அமோகம்..

வாழ்க வளமுடன் தொடரும்…
அன்புடன் சிவபார்க்கவி

பலமுறை http://ta.wordpress.com/ இன்டெக்ஸ் மற்றும் தமிழ்வெளி,தமிழ்மணம் முன்னனி பதிவுகளில் இடம்பெற்றிருந்ததற்காக வாழ்த்துக்கள்.. (என்னசெய்வது நாமளே நம்மள வாழ்த்திக்க வேண்டியதுதான்..)

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு

நடுவுல 100 பக்கத்தைக் காணோம்… திரை விமர்சனம்

நடுவுல 100 பக்கத்தைக் காணோம்… திரை விமர்சனம்
naduvula konjam pakkatha kanom .. tamil film review
100 …. ஆமாங்க ஆமாம்… இந்தப்பதிவு 100வது பதிவு… சென்ற வருடம் இதே காலக்கட்டத்தில் தொடங்கப்பட்ட சிவபார்க்கவி.வேர்டுபிரஸ்.காம் வலைப்பூவை தொடர்ந்து 31000 உறிட்களுக்கு மேல் அடித்து, தங்களது பேராதவை அளித்து வந்து கொண்டிருக்கும் இணைய தளபதிகளுக்கும், உறவுஸ்கிங் மேக்கர்களுக்கும், தகவல்தொழில்நுட்ப மதியாளர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி கலந்த வணக்கங்கள்…
tx

t0

t7
நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்…

அருமையான டைட்டில், பாலாஜி சக்திவேல் குழுவினர் என்பதால் புதிய கான்செப்ட் என்ற எதிர்பார்ப்பு தலைதூக்கிறது. அதனை கொஞ்சம் ஈடும் செய்கிறார்கள்.. ஒரு திங்கட்கிழமை மதியம் தொடங்கி வியாழன் காலை வரை நடைபெறும் கதை. நட்புன்னா இந்த மாதிரிதான் இருக்கனும்… வயது வித்தியாசம் பொருளாதார வித்தியாசம் பாராமல் 3+1 நண்பர்கள் உயிரைக்கொடுத்தும் (உயிரைக்கொடுத்து அல்ல அந்தளவிற்கு நட்பிற்காக நண்பனுக்காக தங்கள் உழைப்பைக்கொடுத்து சிக்கலில் மாட்டும் தனது நண்பனை காப்பாற்றி, கல்யாணம் பண்ணி வைப்பது.. ஆகா .. ஆகா.. அருமை ) (இது ஒரு உண்மைகதையும் கூடவாம்…) படம் ஆரம்பத்தில் அடுத்த நாள் திருமணம் நடைபெற இருக்கும் நண்பர் தனது நட்பு வட்டத்தில் அரட்டை அடிக்கும்பொழுது, கிரிக்கெட் விளையாடலமா என கிளம்பி கிரிக்கெட் விளையாட (கொஞ்சம் நீளமான காட்சிகள்…தான்) அதுவே படத்தின் கதைக்கும் ஆரம்பமாகிறது.

என்னாச்சு.. நீ தான் பாலைப்போட்டே, அப்படியே பறந்து வந்தது, நான் பிடிக்க போனேன் அப்படியே விழுந்து விட்டேன் பின் மண்டையிலே …… அடிபட்டது, இது ஒன்னும் பிரச்சினையில்லை கொஞ்சம் டெம்பரவரி மெமரி லாஸ்தான் தானா சரியாகிவிடும்…
இந்த வசனம் படம் பார்க்கும் அனைவருக்கும் மனப்பாடம் ஆகிவிடும் பின்னே 100 தடவையாவது இது திருப்பி திருப்பி வந்தா… ஆனா அதுதான் படத்தின் உறலைட்டே.. நண்பர்கள் ஒவ்வொருவரும் முகத்தில் காட்டும் எக்ஸ்பிரஷன்கள் சூப்பர்ப்.. சிவாஜிகள் பலர் உருவாகிவிட்டார்கள்..
t2
சரியான நடிகர்கள் தேர்வு… பெயர்கள் ஒவ்வொருவருக்கும் சூட் ஆவது.. அவர்களுடைய பெற்றோர்களின் மேனரிசம்.. குடும்ப சண்டை… திருமண வரவேற்பில் பெண்ணைப்பார்த்து மாப்பிள்ளை யார்டா இவ .. பேய் மாதிரி மேக்கப் போட்டுக்கிட்டுன்னு கேட்பது… அதையெல்லாம் மூன்று நண்பர்களும் சமாளிப்பது.. என படம் கொஞ்சம் நீளமாக போனாலும்… பார்த்து ரசிக்கும் விதமாக எடுத்திருக்கும் இயக்குனர்..

பாடலே இல்லாத குறையைப் போக்க வேண்டி, படத்தின் புரேமோவிற்காக எடுக்கப்பட்ட பாடலை இடையில் போட்டு விடுகிறார்கள். சதா நேரமும் ரூமில் படுத்துக் கொண்டிருக்கும் நண்பரைப் பார்த்து என்னடா எப்ப பார்த்தாலும் புள்ளத்தாச்சி மாதிரி படுத்தே கிடக்கிற என்ற வசனமும். உறவினர் சதீஷ் என்பவருக்கே திருமணம் என நம்பவைத்து மணமகனை மேடையேற்றுவதும் அங்கே அந்த சதீஷ் வந்து பின்பு நடைபெறுவது அட்டகாசமான காட்சிகள். அண்ணன் கூட சண்டை போட்டுபிரிவதும், திருமணத்திற்கு வந்த அண்ணனை சண்டையைப்பற்றி ஞாபகம் இல்லாமல் கட்டி அணைத்து அன்பால் நனைப்பதும்… டாக்டரிடம் பேசுவது.. நர்ஸ்கள் டெரர் ஆவது என காட்சிக்கு காட்சி நன்றாக மெனக்கெட்டிருக்கிறார்கள்… நிறைவான படம்…கொஞ்சம் தொய்வைப்பற்றி கவலைப்படாமல் பார்த்து ரசிக்கலாம்.

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB

ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு

துப்பாக்கியில் சுட்ட பீட்ஸா …. 2 திரைப்பார்வை

துப்பாக்கியில் சுட்ட பீட்ஸா …. 2 திரைப்பார்வை
Thuppakki , Pizza – Tamil Film Reviews

கொஞ்சம் டியூப் லைட்தான்… எல்லாரும் அடித்துத்துவைத்து தூர போட்டபின் எடுத்து விமர்சனம் செய்வது…. என்ன செய்வது.. மின்தடையால் இப்போதான் இந்த லைட் எரிகிறிது…

1. பீட்ஸா

இளமை துள்ளும் இந்தக்கதையில் டெரர் எட்டி பார்க்குது ஆரம்பத்தில் இருந்தே ஒரு டூபாக்கூர் கதை கதைக்குள்ளேயே வளர்ந்து வருவதால் நமக்கு எது டூபாக்கூர் எது ஒரிஜினல்ன்னு பிரித்து பார்க்க இயலாததே இந்தப்படத்தின் வெற்றி…
t1
இளைஞன், இளைஞி இருவரும் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்து வந்தவர்கள் இளமை முழுவதும் சிரமமான சூழ்நிலையில் வாழ்ந்தவர்கள், கெட்டூகெத்தர் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள், சில நாட்களில் அந்த பெண் கர்ப்பாகிவிடுவதால் ( பாதுகாப்புகளை மீறி ) உடனே வீட்டிலேயே மோதிரம் மாற்றி திருமணம் செய்தும் கொள்கிறார்கள்.. இளைஞன் பீட்ஸா கடையில் சப்ளை செய்து சிறிது வருமானம் பெறுபவராகவும், இளைஞி பேய்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து அதில் முன்னேற்றம் காண முனைபவராகவும், பீட்ஸா கடை ஓனர் மற்றும் இரு பணியாட்களும் இளைஞனுடன் நன்கு பழகுபவர்களாக இருக்கிறார்கள்… ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில், இளைஞன் கையில் 2 கோடி மதிப்பிலான பொருள் கிடைக்கிறது அதனை தன்னுடையதாக ஆக்கிக்கொள்ள வேண்டி இளைஞனும், இளைஞியும் சேர்ந்து முயற்சி செய்து வெற்றியும் ? பெறுவதுதான் … இந்த பீட்ஸா…
t0
படம் உண்மையில் ஒரு திரில்லர்தான்… அடுத்து என்ன என யோசிக்க விடாமல், காட்சியமைப்புகள்… இந்த இளமை டீம்முக்கு தமிழ் திரையுலகம் தனது பாராட்டு என்னும் பட்டு கம்பளத்தை விரித்து வரவேற்கிறது.

2. துப்பாக்கி
t2
நீண்ட நாளுக்குப்பின் விஜயின் ஒரு வெற்றிப்படம்,
வழக்கமான அட்டு பில்டப்கள் இல்லாமல், வெத்துவேட்டு பஞ்ச்கள் இல்லாமல், நார்மல் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வேடத்தில் விஜய். இரானுவத்தில் இருந்து 40 நாட்கள் விடுமுறையில் வரும் விஜய் அண் கோ ( வீடு மும்பையில் இருப்பதாக எடுத்துக் கொள்ளவும் ) சேர்ந்து எதிர்பாராமல் கிடைக்கும் ஒரு சந்தேகப் பார்ட்டியை பின்பற்றி 20 இடங்களில் சாதரண மனிதர்கள் போலவே இருக்கும் தீவிரவாதிகள் ஒழித்து கட்டுவதும் இதனால் 20 இடங்களில் குண்டு வெடிக்க இருப்பதைத் தடுக்கவும், பின்னர் இந்த தீவிரவாதிகளின் தலைவனை கண்டுபிடித்து அழிக்க தன்னையே பணயம் வைக்கவும் விறுவிறுப்பான காட்சிகளால் நம்மை ஆனந்தப்படுத்துகிறார் இயக்குனர் முருகதாஸ். தொட்டுக்க ஊறுகாய் மாதிரி காஜல் வந்தாலும், பொருத்தமான இடங்களிலேயே காட்சிகள் அமைவதால், மெயின் கதைக்கு சங்கடமில்லை… கிளைமாக்ஸ் மட்டும் கொஞ்சம் லாஜிக் பார்க்கமால் பார்க்கனும்…. மத்தபடி இதுவும் ஒரு வெற்றிப்படம் தான்.
t3
இந்த இரண்டு படங்களிலும், பொதுவாக சிரத்தையெடுத்து மக்களை எவ்வாறு திருப்திபடுத்துவது என்பது வெவ்வேறு சிந்தனைகளில் உருவாக்கி இருக்கிறார்கள். வாழ்த்துக்கள்…

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB

ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு

வான்மேகமே….

வான்மேகமே….
space brings wonderful themes
இந்த வானத்தைப்போல அழகானது உலகில் ஒன்றும் இல்லை. யாராயிருந்தாலும், எப்படியிருந்தாலும், எங்கிருந்தாலும், ஒரே மாதிரியாக காட்சியளிப்பதில் அந்த வானம் மட்டுமே இருக்க இயலும்.

கவிஞர்கள், தங்களது பெரும்பாலான கவிதைகளில் எப்படியாவது இந்த வானத்தை கொண்டுவந்து விடுவார்கள். கவிஞர் வைரமுத்து ஆரம்பமே … நிழல்கள் படத்தில் வரும் அந்த வானைப்பற்றிய பாடலே.. ( வானம் எனக்கு ஒரு போதி மரம், தினமும் எனக்கு சேதி தரும் )

விண்டோஸ் பயன்படுத்துபவர்களின் பேவரைட் ஸ்கிரின் ஒரு மேடும் அதனைச் சார்ந்த வானமும்… மிக அழகாக 90களில் கலிபோர்னியா மாகானத்தில் எடுக்கப்பட்ட படமும், 2005ல் மீண்டும் அதே கோணத்தில் வேறொருவர் அதே இடத்தில் எடுக்கப்பட்ட படமும் வெவ்வேறாக இருக்கிறது. ( நெட்டில் தேடிப்பார்க்கவும்…)

தேமுக தலைவரின் வெற்றிப்பயணமும், அந்த வானத்தைப் போல மனம் படைத்த மன்னவரேன்னு பாடியதற்கு பின்னரே… என்பதனையும் நினைவில் கொள்ளவும். காக்கிச்சட்டைத் திரைப்படத்தில் வானிலே தேனிநிலா ஆடுதே பாடுதே வானம்பாடி…ன்னு கமலும் அம்பிகாவும் ஜோடி சேர்ந்து நம்மை அந்த வானில் சிறகடிக்கமாறு நமது சிந்தனைகளை சிதறடித்தார்கள்.

மேகம் கறுக்குதுன்னு… தண்ணீர் தண்ணீர் படத்தில் சரிதா பாடிக்கொண்டே வானத்தைப் பார்ப்பதும், ஒரு சில நீர்த்துளிகள் மட்டும் விழுந்து மழை மறைந்து விடுவதும் திடுக் திருப்பம் நிறைந்தது… ( மறக்க இயலுமா…)

சிறு குழந்தைகளுக்கு இருட்டாயிருக்கும் வானத்தைப் பார்த்து பயப்படுவார்கள்… அந்த நாளில் அமாவாசை இருட்டில் நடந்து செல்ல அஞ்சி பெரும்பாலும் பயணத்தை தவிர்த்து விடுவதும் உண்டு.

வானம் பொய்த்து.. தண்ணீர் இல்லையெனில் இந்த உலகத்தை கற்பனை செய்து பார்ப்பது அரிது. இன்றைக்கு நமது அன்றாட நடவடிக்கைகள் செய்கைகள் அனைத்தும் வானத்தை முன்னிறுத்தியே அமைகிறது…( அதாங்க செயற்கை கோள்கள் இல்லைன்னா செல்போன் இல்லை, டிவி இல்லை, இல்லை இல்லைகள் தான்…). அந்த முக்கியமானவர்கள் வானத்தில் அலையும் அலைக்கற்றைகளாலேயே அலைக்கழிக்கப்பட்டது உலகம் அறிந்த விஷயம்.

நடப்பு விஷயம்…

• அம்மாவும், ஜகதீஷ் சட்டரும் பேச்சுவார்த்தை வானம் பொய்த்தால் தண்ணீர் விடுவீர்களா விடமாட்டிங்களா?
• 2ஜி அலைக்கற்றையினால் ஏற்பட்ட நஷ்டம் உண்மையானதா? இல்லையா? ஆடிட் டிபார்ட்மெண்ட்டையே ஆடிப்போகும்படி கேள்வி எழுந்துள்ளது.

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB

ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு

அம்மாவின் கைபேசி…. திரைவிமர்சனம்

அம்மாவின் கைபேசி…. திரைவிமர்சனம்
ammavin kaipesi … tamil film review

இந்த தீபாவளிக்கு நம்ம ஒளிதச்சர் தங்கர்பச்சான் அருளிய அம்மாவின் கைபேசி திரைப்படத்தை கானும் பாக்கியம் அருளியது.

இதுதான் கதை….
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு குடும்பம், அந்த குடும்பத்தில் 7,8 அண்ணன் தம்பி அக்காமார்கள், ஒரே ஒரு அம்மா…அந்த அம்மாவிற்கு கடைசி பையன் வாலு, இளமையானவர்..(சந்தனு) எந்த வேலைக்கும் லாயக்கில்லை… திருட்டு நண்பர்களுடன் சகவாசம் என்பதால், வசதியான மாமாவின் ஆதரவும், அவர் பெண்ணின் (இனியா) முத்தம் கிடைத்தும், சந்தர்பவசமாக ஒரு உறவினர் காதுகுத்து விழாவில் காணாமல் போகும் நகைகளுக்கு சந்தனுதான் காரணம் என முடிவு செய்து அம்மா உட்பட செருப்படி, விளக்குமாற்று அடிகொடுத்து ஊரைவிட்டே துரத்துகிறார்கள்.

வழக்கம்போல் நம்ம உறீரோ மாட்டுத்தோல் சுத்தம் செய்யும் ஆம்புர் பாய் முதலாளியிடம் சேர்ந்து நல்லபெயர் எடுத்து, பிறகு கிருஷ்ணகிரி குவாரி முதலாளியிடம் சேர்க்கப்படுகிறார்… குவாரியில் நடக்கும் தில்லுமுல்லுகளை முதலாளிக்கு விசுவாகமாக இருந்து நல்லபெயரும் எடுத்து சிறிது காலம் கழித்து முதலாளி ஒரு நாள் அவர்பெயருக்கு வீட்டை எளிதித்தர வேண்டிய நாளில் … மில்லியனர் முதலாளி மிகவும் அப்பாவியாக இருக்கிறாரே ஏன்.? .. வில்லன்களும் அவங்கதான்… முடிவு…

அடிரா சக்கை… போடு குத்தாட்டம்
இடைஇடையே… தங்கர்பச்சான் படம் ஆரம்பம் முதல் கடைசி வரை வருகிறார்.. கொஞ்சம் தண்ணிபோட்டது போல், தூங்குமூஞ்சி அப்பாவி வேஷம்.. அவருடைய மனைவியாக வரும் நெட்ட கொக்கு பார்ட்டி பலே…. படம் ஆரம்பத்திலேயே குத்தாட்டாட்டம் தான்… வெஸ்டர்ன் டான்ஸ் அப்புறம், சந்தனு இனியா ஒரு டூயட் (விரசமான..), தங்கர்பச்சான் நெட்டகொக்கு பார்ட்டியுடன் ஒரு குத்தாட்டம்… எல்லாம் இருக்கு..

அம்மா எங்கே….
ஒரு வயதான பாட்டிதான் அம்மா, அவருடன் எப்பொழுதும் ஒரு தாய்ப்பசுவும் கன்றும், கஷ்டப்பட்டு ஒரு மொபைலை வாங்கி சந்தனு அவரிடம் சேர்ப்பிக்க அதைவைத்துக்கொண்டு சந்தனுவுடன் தொடர்பு கொள்ளாமல் தவிப்பது… கடைசிவரை மகனைப் பார்க்காமலே உயிரை விடுவது என படம் தொடர்கிறது.. அம்மாவின் இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் விரிவாகவே இடம் பெறுகிறது.

வட்டாரமே வட்டாரமே…
வழக்கமா நம்ம தங்கர் கடலூர் மாவட்டத்தை விட்டு விட்டு (புயல் வந்ததால்) இப்போ சேலம் மாவட்டம், மலை சார்ந்த இடங்கள் மேட்டூர் டேம்… அதற்கப்பால் உள்ள கிராமங்கன்னு இதுவரை தமிழ்திரையுலகம் பதியாத இடங்களை சுட்டுத்தள்ளியிருக்கிறார்.

• போட் (தோணி) மூலம் ஊருக்கு செல்வது….
• முனியப்பன் கோவிலில் ஆணி செருப்பு அணிந்து பாவத்திற்கு தண்டனை பெறுவது…
• மாம்பழக்கூழ் செய்யும் நிறுவனம்
• மாட்டுத்தோல் பதப்படுத்தும் நிறுவனம்
• கிரானைட் குவாரித் தொழில்
• மினரல் வாட்டர் பாக்கெட் தயாரிப்பு நிறுவனம் .. இதையெல்லாம் விலாவாரியாக காட்டுகிறார்….
• பழைய காலத்து வீடு.. 13 வயதில் இந்த வீட்டுக்கு வந்தேன் 17 வயதில் நானும் உங்கப்பாவும் பார்த்து பார்த்து கட்டிய வீடுடா இதை இடிக்காதிங்கன்னு உருகுவதும்.
• தண்ணியடிக்காதிங்கன்னு இடைவேளையில் தங்கர் உருகுவதும், பின் ஒரு காட்சியில் அவரே உட்டுக் கட்டுவதும், மருந்துக்குக்கு கூட சிரிப்பில்லாமல் பார்த்துக்கொண்டதும்.
• சார்ன்னு சொல்லாதீங்க அய்யான்னு சொல்லுங்கன்னு புத்திமதி வேற சொல்றாரு…
• பேங்கில் இருந்து அதிகப்படியா தொகை எடுத்துக் கொண்டு வரும்பொழுது கூட சந்தனுவிற்கு துணையாக அடியாள்கள் யாரும் இல்லாதது நெருடல்…
• சந்தனுவை பழிவாங்கும் காட்சி… வித்தியாசமானது..
• நேர்மையான சந்தனுவை காட்டிவிட்டு கடைசியில் முதலாளியின் பணத்தை ( கொள்ளையடிக்கப்பட்டது ) எடுத்து சந்தனுவின் வீட்டிற்கு கொடுக்க சொல்வது என்ன நியாயம்?
• இனியாவும், மற்ற பெண்களும் காஸ்ட்யூம் மற்றும் பாடி லாங்வேஜ்ல்லாம் ( உயர்தரம் )
• என்ன சொல்ல வருகிறார்? நேர்மையாக இருக்காதேன்னா.. உண்மையா இருந்தா மவனே காலிடான்னா.. தங்கரின் தெளிவில்லாத கேரக்டர் போலவே குழம்புகிறது.
• முடிவை இழுஇழுன்னு இழுத்து காட்சிகளை இடம் மாற்றி மாற்றிப் போட்டு நம்மளை சிந்திக்க விடாமல் செய்ததும் தங்கரின் வெற்றிதான் போலே… இருந்தாலும்… கொஞ்சம் ………..

.. சிவபார்க்கவி

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB

துப்பாக்கி விலை ரூ.40…. தீபாவளி 2012

துப்பாக்கி விலை ரூ.40…. தீபாவளி 2012
Thuppakki price Rs. 40 in Deepavali 2012

தீபாவளி 2012 மிக நன்றாக கரண்ட் கட் இல்லாமல் நாள் முழுமைக்கும் டிவி பொட்டியே கதியாக தமிழர்களால் இனிதே கொண்டாடப்பட்டது.

• விஜய் நடித்த துப்பாக்கியை பார்க்கவும், பார்த்துவிட்டு அதைத்தூக்கு இதைத்தூக்குன்னு ஒரு கும்பல் கிளம்பிடுச்சு… அதற்காக முருகதாஸ் அண்ணாச்சியும், பல காட்சிகளை வெட்டி எறியப்போறார்ன்னு தகவல்.

• போடா போடி போஸ்டரை பார்த்தால் fun n fun என்று படிக்குமாறு லெட்டர்ஸ் அமைத்திருக்கிறார்கள். என்ன கிரியேட்டிவிட்டியோ…

• தீபாவளின்ன துப்பாக்கி இல்லாமலா… எங்க வீட்டு வாலுக்கு நாங்க வாங்கிக்கொடுத்த துப்பாக்கியின் விலை ரூ.40… ஒரு பாக்கெட் ரோல் கேப் தீருவதற்குள்ளாகவே, அந்த துப்பாக்கியும் செயல் இழந்துவிட்டது. என்ன குவாலிட்டியோ…

• இந்த வருடம் மழை தீபாவளியை கெடுக்காமல் விட்டதால் சிறு வியாபாரிகளுக்கு கொண்டாட்டம்..

• வழக்கம் போல் டாஸ்மார்க் 270 கோடிக்கு விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

• எல்லாப்பொருளும் விலையேற்றத்தால் 500 ரூபாயாக செலவழித்தால் மட்டுமே வேண்டிய பொருட்களை வாங்கி மகிழ்ச்சியாக கொண்டாட முடியும் வகையில் இருந்தது.

• தீபாவளின்னாலே பிறருக்கு கொடுத்து மகிழ்தல் தான்.. இங்கே ஒரு நெருங்கிய சொந்தக்காரர் (மச்சான்) சென்னையிலே என்ஜினியராக எல்&டி குரூப்பில் பணிபுரிகிறார் அவர் தங்கை வீட்டுக்கு வந்தவர் வாங்கி வந்த பொருட்களைப் பாருங்களேன்.
1. பிரிட்டானியா பிஸ்கெட் ரூ. 15
2. லேஸ் ரூ. 10
3. கீரிம் பிஸ்கட் ரூ. 10
காசு தான் முக்கியம்னா ஏண்டா பஸ் செலவு செய்துகிட்டு வர்றீங்க … (இவர்பொறுப்பில் தலைதீபாவளி ஏற்பாடு செய்யப்பட்டபோது, இரண்டு தம்பதிகளை வரவழைத்து சீர்சினத்தி எதும் செய்யாமலும், (நல்ல துணிகூட வாங்காமல் கேவலமாக ரூ400க்கும் ரோட்டில் போட்டுவிற்கும் துணியை வாங்கி கொடுத்து தையல் கூலியாக ரூ.100 மட்டும் கொடுத்து ) வெறும் ஸ்வீட் கூட செய்யாமல் இதெல்லாம் செய்யலாம்ன்னு பார்த்தேன் ஆனா, செய்யல, என கஞ்ச புத்தியை காமிச்சு, தம்பதியர் எங்களுக்கு மீண்டும் ஒரு தலைதீபாவளி வருமாடான்னு காறித்துப்பிவிட்டு சென்றனர் என்பது பழையகதை…) உங்களய வரச்சொன்னமான்னு அந்த வீட்டில் சத்தம்கேட்டுக்கிட்டே இருந்தது…

• வீட்டு பசங்க சொந்தக்காரங்க வீட்டுக்கு படையெடுத்து 2000 ரூபாய் வரைக்கும் தேத்திட்டாங்க

• மார்க்கெட்டுக்கு போனா பாதிப்பேருக்கு அச்சு அச்சுன்னு கும்பல் மேலேயே தும்மி கொண்டே இருந்தது.

• இந்த வருடம் குறிப்பாக நெய் அதிரசமும், ரஸ்தாளி வாழைப்பழமும் வெகுஜோர்….( எங்க வீட்டிலேங்க…)

• வீட்டு வாலுக்கு கண்ணில் பட்டாசு பட்டு இராத்திரி பூரா ஒரே அழுகாச்சி… வாசனுக்கு போய் ஒரு சொட்டு மருந்து போட்டு பில் கட்டியவுடன் தான் அடங்கிச்சு போங்க…

• வழக்கம் போல் எல்லாம் பஸ்லேயும் காலை வைக்க முடியல சாமி… கும்பலோ கும்பல்… அப்படி எங்கத்தான் போவாங்களோ…

அவ்வோளதான் இப்போதைக்கு சாமி… சீக்கிரமே அடுத்த பதிவில் பார்க்கலாம்…
..சிவபார்க்கவி
Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB

மாற்றான்… ஆடு வித்தா 4 காசு… ஆட்டுவித்தா 10 காசு…

மாற்றான்… ஆடு வித்தா 4 காசு… ஆட்டுவித்தா 10 காசு…
mattran… konjam tamil ularals…

ரொம்ப நாளாக பதிவே போடல… ஏன்னா, டொக்கு போட்டது போக, விடுமுறை விட்டது போக… மீதி நேரத்தில் வேலையை பார்க்கவே சரியாக இருந்தது. இந்த தலைப்பை பற்றி இந்தப்பதிவின் கடைசியில் பார்க்க..

• முதல் 2 புயல்கள் நம்ம நாட்டுக்கு இப்ப வந்திருக்கு அதனால என்ன பாதிப்புன்னு 2 நாள் கழித்துத்தான் தெரியும்… சாக்கிரதையாக இருந்துக்கோங்க..

• ஆர்ச் வளைவுகள் கட்டுறாங்க அம்மா.. அதே நேரத்தில் அந்த வளைவுகளை நல்ல ஆர்க்கிடெக் மூலம் சிறப்பாக புதிய வடிவில் புதிய பொருட்களை வைத்து உருவாக்கினால் காலத்திற்கும் அது உலகில் பெயர் சொல்லும் இல்லையா.. ஆமா, இதை எப்படி அம்மாவிடம் சொல்வது.?

• தீபாவளி வந்துடுச்சு வழக்கம்போல.. காசு உள்ளவன் செலவழிக்க பறக்கிறான்.. காசு இல்லாதவன் கடன் கொடுக்க யார் கிடைப்பான்னு அலையறான்.

• டைம்பாஸ் ..ன்னு ஒரு 66 பக்க குட்டி குமுதம் டப் கணக்காக அந்தக்கால சுவாரசியமான குமுதம் போல் வந்திருக்கு.. பார்த்தேளே.. நன்னதான் இருக்கு.

• டெங்கு தமிழகம் எங்கும் பட்டையக் கிளப்பிக்கிட்டு இருக்கு.

• ரெயில் டிக்கட் விலை ஏறுதாம்… மீண்டும் பஸ்ஸேதானா?

• படித்ததில் பிடித்தது. தமிழ்மகன் என்பவர் எழுதிய ஒரு கதை… (குட்டியாக உங்களுக்கு) தமிழ்நாட்டில் உள்ள ஒருவருக்கு இரவு போன் வருகிறது.. அதில் பிரான்ஸ் நாட்டில் வாக்கப்பட்டுப் போன ஒரு அப்பாவிப்பென் கணவரின் குடி மற்றும் அடித்துஉதைத்தலால் மனம்வெம்பி பேசி கவுன்சிலிங் பெறுகிறார். மனைவியும் லோசாக குடித்திருக்கிறாராம்.. கவுன்சிலிங் தந்த நபர் பொறுமையாக அவரை சமாதானப்படுத்தி பிடிக்கலேனே வெளியேறிவிட தெரிவிக்கிறார்.. கொங்சநேரம் கழித்து போன் வருகிறது. எடுத்து பேசும் பொழுது அந்தநபர் சொல்கிறார் நீங்க சொன்ன அறிவுரைப்படியே 14 வது மாடியில் இருந்து குடித்துவிட்டு படுத்துக்கிடந்த கணவரைத் ஜன்னல் வழியாக வெளியேற்றிவிட்டேன்.. என்று…

• மாற்றான்… அப்பப்பா ஒரேநேரத்தில் இதே போல இரண்டு படங்கள் மற்றொன்று சாருலதா… இரண்டு வித்தியாசமான சூர்யாவை இணைத்திருப்பார்கள் என்று போனால் அப்படியெல்லாம் இல்லை.. சோம்பலான சூர்யா, ஜாலியான சூர்யா என இரண்டு ஒட்டி பிறந்த குழந்தைகள்.. அவர்களுக்குள்ளேயே ஈகோ… எனர்ஜியான் என்ற பால் பவுடரில் கலக்கப்பட்ட பின்விளைவுகள் ஏற்படும் ஊக்கமருந்து… அந்த ஊக்கமருந்து கண்டுபிடிக்க காரணம்.. விஞ்ஞானிகள்.. பாதிப்புகள் என சமீபத்தில் வந்த ஒலிம்பிக் போட்டியை பார்த்துக்கொண்டே கதை அமைத்திருக்கிறார்கள்.

• கேவிஆனந்த்.. மெனக்கெட்டு படம் எடுத்திருக்கிறார்.. படம் ரஷ்யா, இந்தியாவில் ராஜஸ்தான் தமிழ்நாடு என சுற்றிசுற்றி வருகிறது… சூர்யாவிடம் இருந்த துறுதுறுப்பு எங்கே போனது… ரொம்ப போராக இருக்கிறது… கதாநாயகி சும்மா சோப்பு டப்பா மாதிரி வந்து போகிறார்.. பாட்டுக் கூட ஒன்னு நல்லாருக்கு படம் ரொம்ப நீளமாக… போய்க்கிட்டே இருப்பதுதான் ஒரே குறை..

தலைப்பைப்பற்றி… சாதரணமாக ஆடு வளர்த்து வித்தால் அதன் விலை ஒருவருக்கு குறைவாகத்தான் இருக்கும்.. அதே நேரத்தில் ஆட்டுவித்தால் (அதிகாரத்தால்) பிறரை இம்சித்து பணம் பெற்றால் காசு கூடத்தான் இருக்கும். ( அய்யோ… கொல்றீங்களே…ன்னு சொல்வது கேட்குது…)

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB

கிழட்டு முகமூடி …. திரை விமர்சனம்

கிழட்டு முகமூடி …. திரை விமர்சனம்
mukamoodi .. Tamil Film Review..

அருமையான கான்செப்ட் மிக நன்றாக வந்திருக்க வேண்டிய படத்தை போட்டு, பழைய மாவைவிட்டு கிண்டி கிண்டி மிக மோசமாக உருவாக்கியிருக்கிறார்கள். ஜீவா ஒரு விளையாட்டு வாலிபன், மற்றவர்கள் மாதிரி 9 டூ 5 அலுவலகம் சென்று விட்டு, 7 மணி சீரியல் பார்த்து வழக்கமான வாழ்க்கை வாழ விரும்பாதவன், எதையாவது சாதிக்க விரும்புகிறான். அவனது நண்பர்கள் குழாம் குங்குபூ கற்றுத்தரும் ஒரு மாஸ்டரிடம் ஒருசில வித்தைகளைக் கற்றுக் கொள்கிறார்கள். படத்தில் சைனா படம்போல் குங்பூவை எதிர்பார்த்தீர்களானால் நீங்கள் பனால், சும்மா டான்ஸ் பிராக்டிஸ் பன்னுவது போல் ஒரு சில பைட் மூவ்மெண்ட்களை மட்டும் பிராக்டிஸ் செய்து குங்பூ பைட்டர் போல் பில்டப் செய்யப்பட்டிருக்கிறது.

இடையில் பழைய தமிழ் படமான சத்திரியனைக் காப்பியடித்து வில்லன் / கதாநாயகன் பிளாஷ்பேக்.. ( அப்பா சாமி ரொம்ப அறுவைடா…). நகரில் நடக்கும் தொடர் கொள்ளை அதுவும் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து கொலை மற்றும் கொள்ளை நடக்கிறது. அதை செய்வது டிராகன் குங்பூ டிரையினிங் வைத்திருக்கும் நால்வர் அதிலும் நரேன் தான் முக்கிய வில்லன். (இவர் போலிஸ் புல்லுறுவி) இடையில் நடக்கும் ஒரு சில விஷயங்களால், நாசர் மருத்துவமனையில் அட்மிட், கதாநாயகியின் சில்மிஷம்… எல்லாம் ஏற்கனவே பல தமிழ்ப்படங்களில் வந்த காட்சிகளையே திரும்ப திரும்ப எடுத்திருக்கிறார்கள்.

நண்பனின் சாவு மற்றும் சாதிக்க வேண்டும் என வெறி கொண்டு, இரண்டு தாத்தாக்களால் விஷேச முகமூடி மற்றும் உடையை அணிந்து கொண்டு வில்லன்களை பிடித்து துவம்சம் செய்வதே முகமூடி…
அப்பாடா பெரும்பாலான காட்சிகள் இராத்திரியிலேயே எடுக்கப்பட்டிருக்கிறது… அதனால் பல காட்சிகளில் என்ன நடக்கிறது என்பது கூட சரியாக புலானாக மாட்டேன்கிறது. இசையும் சுமார்தான்… கதாநாயகி மட்டும் பலப்பலன்னு மின்னுகிறார் (நடிப்பில் அல்ல) ஜீவா உங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறோம். இந்த மாதிரி சில்லரை அயிட்டங்களைத் தவிருங்களேன்.

கிழட்டு முகமூடியால் சிறப்பாக எண்டர்டய்ன் பண்ணவோ, சண்டைகளால் சிலிர்ப்பூட்டவோ, செம திரில்லராகவோ, சஸ்பென்ஸ் கில்லராகவோ, நட்பை பெருமைப்படுத்தும் படமாகவோ எதுவாகவும் ரகம் பிரிக்கஇயலாது… பெட்டர்லக் அடுத்துமுறை…
Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB

கோவில் வழிபாடு … நன்மை பயக்குமா? நேர விரயமா?

கோவில் வழிபாடு … நன்மை பயக்குமா? நேர விரயமா?
kovil / Temple visit is really good or not? what is behind the Temple’s Visit.
தற்காலத்தில், கோவிலுக்கு செல்லுவது பொதுவாக ஒரு சுற்றுப்பயணம் மற்றும் சந்தோஷமாக செல்லும் இடமாகவும், இஷ்டப்பட்டால் போகலாம், இல்லையானல் போக வேண்டாம் என இருவேறு கருத்திற்கு உட்பட்டு செல்கிறார்கள் பெரும்பாலும். கொஞ்ச காலம் வரைக்கும் (சுமார் 20/30 வருடங்களுக்கு முன்பு வரை கூட கோவில் செல்வது மிகவும் கட்டாயம் போலவும், சாமி, பூதம் போன்றவைகள் நம்முடைய இருப்பதாகவும் அவர்களுக்கு கட்டுப்பட்டே இந்த பூமியில் அனைத்தும் நடப்பதாகவும் கிட்டத்தட்ட ஒவ்வொருவரும் வளர்க்கப்பட்டிருக்கிறோம்.

உண்மையில், அறிவியல் வளர வளர, ஒவ்வொன்றின் பின்னால் இருக்கும் உண்மை புலப்பட்டு, தற்காலத்தில் கட்டாயம் என்பதெல்லாம் இல்லாமல், முடிந்தால் போ, இல்லைன்னா போ என்று ஆகிவிட்டது. பொதுவாக மதத்தின் பெயரால் ஒரு சிறிய குரூப்பை உருவாக்கவும், அதன் மூலம் நன்மையோ / தீமையோ செயல்படுத்த பலரின் ஆக்கபூர்வமான செயல்களை பயன்படுத்திக் கொள்வதே கண்கூடு.

இன்னமும், பிராக்டிகலாக பல கோவில்கள் நமது நம்பிக்கை விதையை ஆளமாக விதைப்பதற்கும், அதனை குறிக்கோள்களை வெற்றிக்கொள்ள ஒரு முன்னிலை தேவை மற்றும் நமது சிந்தனையை ஒருமுகப்படுத்தி வெற்றியை நோக்கி அடிஎடுத்து வைக்கவே பயன்படுத்துகிறோம்.

நமது முன்னோர்களால் பல்வேறு சோதனைகள் மற்றும் நேரடியான அனுபவங்களால் ஆன்மீகத்தை வளர்த்தையும், ஆகம விதிமுறைகளை உருவாக்கி சக்திதரும் கோவில்களை உருவாக்கி வைத்திருந்தார்கள். பொதுவாக, ஒவ்வொரு கோவில்களிலும், இச்சா சக்தி, கிரியா சக்தி மற்றும் ஞான சக்திஆகியவை மிகவும் சிறப்பாக இயக்குமாறு அதன் முக்கியமான கருவறையும், அதன் சுற்றுப்புறங்களும் அமைக்கப்பட்டிருக்கும்.
இதில் இச்சா சக்தி, நமது கோரிக்கை / எண்ணம் ஆகியவைகளை உருவாக்க நமது சிந்தனைகளை ஒருமுகப் படுத்தவும், கிரியா சக்தி அதனை சிறப்பாக செயல்படுத்த தேவையான சந்தர்ப்பங்களை அமைத்துக் கொடுக்கவும், ஞானசக்தி அதற்கு மேல் ஆசிகளையும், மேற்கண்ட இரண்டு செயல்களும் சிறப்பாக செய்துமுடிக்க தேவையான அமைப்பையும் வழங்கவும் செயல்படுத்தும்…

இதில் நாம் கவனிக்க தக்க அம்சம் என்னவெனில், நமது கோரிக்கைகள் கண்டிப்பாக ஞாயமாகவும், நமது சக்தி மற்றும் செயல்திறனுக்கு உட்பட்டும் ( டாலன்ரன்ஸ் 25 சதவீதம் இருக்கலாம் அதாவது கூடவோ / குறையவோ ) இருக்கும் பட்சத்தில், அது கண்டிப்பாக வெற்றியடைந்து விடுகிறது.

இதில் ஒரு சில முரண்பாடுகளை காணலாம், அதிக உழைப்பைக் கொடுத்தும் / நேர்மையாக செயல்பட்டும் பொருள் சம்பாதிக்கவோ அல்லது வாழ்க்கையில் வெற்றிப்பாதையில் செல்வவோ இயலாமல் பலர் தவிக்கலாம், அதற்கு என்ன காரணம், தனது உடல் உழைப்பையும், நேர்மை நினைப்பையும் அவர்களால் செயல்படுத்த முடிந்ததே தவிர காலம் மற்றும் இடத்தினைப்பொறுத்து தேவைப்படும் கால வர்த்தக மாற்றங்களைச் சந்தித்து பொருளாதாரமுன்னேற்றத்தை மனதில் கொள்ளாமல் கண்மூடித்தனமாக தாம் எடுத்த தொழில் அல்லது செய்கைகளை மட்டுமே கடைப்பிடித்தாக இருக்கும்.

ஆகவே, ஒருவருடைய காலசூழ்நிலைகள் சரியாக அமைவதற்கும், அவருடைய சிந்தனைகள் பொருளாதார ஏற்றத்தை சந்திக்க வேண்டும் என்ற இச்சா சக்தியைப் பொருத்த வெற்றி அமையும், இல்லையா? அதற்கு முக்கிய கருவியாக கோவிலுக்கு செல்வது அமைகிறது…

குறிப்பு.. இது எல்லாம் நம்ம சொந்த கருத்தாக்கும்.. பின்னோட்டங்களில் இதுகுறித்து நார்நாராக கிழிக்கலாம்.
Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB