திருநங்கைகளுக்கு (அலி) எப்படி இருக்கும்….?

திருநங்கைகளுக்கு (அலி) எப்படி இருக்கும்….?
Third Gender

சிறுபிராயம் முதற்கொண்டே, அலிகளைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் … ஆனால், அதற்கான வாய்ப்புகள் இல்லாமல், அவர்களை சமூகம் ஒதுக்கி வைத்து இழிநிலையில் வைத்திருப்பதை மட்டுமே தெரிந்து கொள்கிறோம்.
கடைசியில் நம்ம கி.ராவின் கதைசொல்லியை படிக்க நேர்ந்தது.. நம் கேள்விகளுக்கு சில விடைகள் கிடைக்க வாய்ப்பு…

பால்உறுப்புகளைப் பொறுத்தவரை, ஆனாகவோ, இல்லை பெண்ணாகவோ தனித்தன்மையுடன் இருப்பதில்லை. அதுவே பிரச்சினை… அலிகளை மூன்று பிரிவினராகப் பிரிக்கலாம்
1. பக்கத்திற்கு ஒன்றாக இரு பால் சுரப்பிகளின் நுண்கூறுகளும் உடையவர்கள்
2. ஒரு விரையண்டகம் ஒரு பக்கத்தில் ஒரு சிரை அல்லது ஒரு அண்டகம் மற்றொரு பக்கத்திலும் அவ்வாறே இருக்கிறது.
3. ஒரு பக்கம் ஒரு விரையும், மற்றொரு பக்கம் அண்டகமும் இருக்கிறது.

இருப்பினும் இவர்களுடைய புறஇனப் பெருக்க உறுப்புகள் வளர்ச்சி குன்றிக் காணப்படுகிறன்றன. பலருக்கு நீர்த்தாரையின் வெளித்துவாரம் ஆண்குறியின் நுனியில் இல்லாமல் அடிப்பகுதியில் இருக்கிறது. விரைப்பை சரியாக மூடாமல் பெண்குறியின் உதடுகளைப் போன்ற தோற்றத்தைத் தரும். எல்லாருககும் கருப்பை இருக்கும். க்ளைடோரிஸ் சாதாரணமாக இருக்கும். யோனி குறைந்த நீளம் உடையதாகவும் உள்ளே மொட்டையாக முடிவதாகவும் இருக்கும். விரைகளைத் தவிர எந்த அக இனப் பெருக்க உறுப்பும் இருக்காது, தோற்றம் உடலில் கொழுப்பு படியும், முறை, மார்பக வளர்ச்சி, முகத்தில் முடி வளர்வது இல்லை, போன்றவைகள் பெண்களைப் போலவே அமையும்.

கட்டுரையிலிருந்து…

அலிகள் பிரச்சினை ஒரு வகையில் முழுக்க மருத்துவ மற்றும் குற்றவியல் பிரச்சினை. அலிகள், திருவிழா என்ற பெயரில் சமயப் பூச்சும் ( கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா, விழுப்புரம் சித்ரா பவுர்ணமி அன்று வருடந்தோறும் நடப்பது ) கொடுப்பதால், இதற்கு புனிதத்துவம் கிடைத்து விடுகிறது. சட்ட ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் அனுகப்பட்டு முடிவுக்குக் கொண்டுவரப் படவேண்டிய ஒரு மனித சோகம் இங்கு மத ரீதியாக நிரந்தரப்படுத்தப்படுகிறது. அலிகளை விபசாரத்தில் ஈடுபடுத்திப்பட்டு மிகக் கேவலமாக சுரண்டப்படுகிறார்கள். இதைப்பற்றியெல்லாம் இங்கு யாருக்கும் அக்கறை இல்லை. பொதுமக்களுக்கு அலிகள் ஒரு கேலி அல்லது கேளிக்கைகான பொருள், அறிவாளிகளுக்கு, ஆய்வுக்கு ஒரு நல்ல சப்ஜக்ட்.

சமூகப் பொறுப்பு சிறுதும் இல்லாத நம்முடைய பத்திரிகைகளுக்கு அலிகள் திருவிழா ஒரு மீடியா இவெண்ட். அரசியல்வாதிகளோ இட ஒதுக்கீடு, மூன்றாவது இனம் என்றெல்லாம் பேசி அலிகளின் நியாய அநியாயத்தைக் கேள்விக் குள்ளாக்க யாரும் தயாராக இல்லை.

என்ன தீர்வு…

1. விரைத்தறிப்பு முதலிய குற்றங்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
2. அலிகளின் திருவிழாக்களை தடை செய்ய வேண்டும்?
3. பால்பாகுபாடுக் கோளாறுகளோடு பிறக்கும் குழந்தைகள் அறியாமைக்குப் பலி ஆகிவிடக் கூடாது. ( இது அலிதான் என பெற்றோறோ முடிவு செய்யக் கூடாது)
4. அலிசடங்குகளை நிறுத்தி மருத்துவமணைக்கு கூட்டி சென்று சிகிக்சை செய்ய வேண்டும்.
5. உரிய சமயத்தில் சிகிச்சை அளிப்பதன் மூலம் முற்றிலும் இல்லாவிட்டாலும் பெருமளவிற்கு ஆனாகவோ, அல்லது பெண்ணாகவோ சரியான வாழ்க்கை வாழ வகை செய்ய முடியும்.
6. இதனால், மூன்றாவது இனம் உருவாக வேண்டிய அவசியம் இல்லை.
7. சைனாவிலும், மேலை நாடுகளிலும் என்றோ முடிவுக்கு கொண்டுவரப்பட்டுவிட்ட ஒரு சமூகத்துனை நமது நாட்டிலும் முடிவுக்கு வரவேண்டும்.

நன்றி.. கி.ரா..கதைசொல்லி..2
More than a Blog Aggregator

Thiratti.com Tamil Blog Aggregator

Thenkoodu

ஆறாவது ஆணிடம் ஆசைப்பட்ட திரௌபதை…

ஆறாவது ஆணிடம் ஆசைப்பட்ட திரௌபதை…
DROWPATHI LIKES THE 6TH MEN … MAHABHARAT

அந்த ஆறாவது ஆள் யார்? கர்ணன் தான்.

முதன் முதலில், சுயம்வரம் நடந்த சபையில் வில்லை வளைத்துக் குறியை அடிக்க எழுந்தவன் கர்ணன்தான். அவனைப் பார்த்ததுமே இவன்தான் எனது புருசன் என்று திரப்பதி மனசில் துர்மானமாகிவிட்டது. அவன் அரச குமாரனில்லை தேரோட்டி மகன் என்றிருந்ததால் அவனுக்கு வில்லைத்தொட அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் கர்ணனே அவள் மனசில் இருந்தான் கடைசிவரையிலும், அர்ச்சுனன் எழுந்து பந்தயத்தில் வென்று பாஞ்சாலியைக் கைப்பிடித்து அழைத்து வந்தான் தாய் குந்தியிடம். அம்மா ஒரு கனி கொண்டு வந்திருக்கிறேன் என்றதும் அதை அய்வருமே சேர்ந்து உண்டு அனுபவியுங்கள் என்று சொல்லிவிட்டாள். மாதா சொன்னது மகேசன் சொன்னதாக ஏற்று அய்வருமே அவளை மணந்து கொண்டார்கள். இது திரவ்பதிக்கு இணக்கமில்லை. அதனால் அவள் ஒரு தந்திரம் செய்தாள்.

அரசு குமாரர்கள் அணியும் ஒரு ஜோடு செருப்புகளை யாருக்கும் தெரியாமல் கொண்டு வரச் செய்து வைத்துக் கொண்டாள். விளக்கு வைத்ததும் தனது அறை வாசல்படியருகே அந்தச் செருப்புகளை வைத்துவிடுவாள். அய்வரில் யார் வந்தாலும் மற்றவரில் யாரோ ஒருவர் உள்ளே இருக்கிறார்கள் என்று திரும்பி விடுவார்கள். விடிகாலைப் பொழுதுதில் அந்தச் செருப்புகளை எடுத்து யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்து விடுவாள். இப்படியே தினமும் செய்தாள் இது சரியாக வராது என்று அறிந்து கொஞ்ச நாளைக்கெல்லாம் பஞ்சபாண்டவர்கள் ஆளுக்கொரு பெண்னைப் பார்த்துக் கலியாணம் செய்து கொண்டார்கள். அந்தப் பெண்களிடம் பிறந்தவர்களே உப பாண்டவர்கள் என்று யுத்தம் முடியும் தறுவாயில் பேசப்படுகிறவர்கள்.

கர்ணனையே மனசில் கொண்ட திரப்பதி கடைசிவரை கன்னி கழியாதவளாக வாழ்ந்து தெய்வமானதாகக் கதை.

More than a Blog Aggregator

Thiratti.com Tamil Blog Aggregator

Thenkoodu

மசாலா வேட்டை … சிக்கிச்சா.?

மசாலா வேட்டை … சிக்கிச்சா.?

பெங்கலுக்கு வந்த நண்பனுக்கு எதிரியாக வேட்டையையும் ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.. லிங்குசாமியின் ரன் படத்தில் வரும் பல காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகளை திரும்பவும் ரீமேக் செய்து எடுத்திருக்கிறார் இருப்பினும் இந்த முறை பல டெக்னிக்கல் முன்னேற்றம் தெரிகிறது. படம் ஆரம்பித்தவுடன் தவறிப்போய் ஒஸ்தி படத்தின் முதல் ரீலை ஒட்டிவிட்டார்களோ என என்னும் அளவிற்கு டிட்டோ சீன்கள்… மற்றபடி வழக்கம் போல் அண்ணன் தம்பி கதைதான்.. கொஞ்சம் கொஞ்சம் மாற்றம்..

1. அமலாபால், சமீரா ரெட்டிக்கு கருப்பு உடையணிந்து தென்காசி சாரல் வீதிகளில் பாடவிட்டிருக்கிறார்கள்.. கண்னுக்கு குளிர்ச்சி
2. ஆர்யா/மாதவன் ஜோடி அழகாக ஒட்டுகிறது. கூடவே சைட்அடிக்கும் பாட்டு… பொண்னுங்கள்லாம் இளமை
3. காரைக்குடியின் வீதிகளில் ஜீப் மற்றும் பைக் அருமையாக பயணிக்கிறது.
4. சமீரா ரெட்டி மஞ்சக்குளிச்ச காட்சியை பார்க்கலாம் என ஜொள்ளுபவர்களுக்கு 2 செகண்ட் மட்டுமே பார்க்க வாய்ப்பு… மீதியை அந்தப்படம் வெளியிட்ட ஆனந்தவிகடன் இதழைப் பார்த்துக் கொள்ளலாம். (வெளியிட்டு ஒரு வருடம் இருக்கலாம் )

5. அமலாபால் அழகு கூடிக்கொண்டே போகிறது.
6. எதிரிகளை ஒரே அடியில் நிலைகுலைந்து போகச் செய்யும் வித்தை எந்த பள்ளியில் சொல்லிக்குடுங்கிறாங்களோ, படம் முழுக்க வில்லனைத்தவிர பெரும்பாலும் ஒரே அடியில் சுருண்டுவிடுகிறார்கள்.
7. சோப்பளாங்கி போலீஸ் அடிவாங்கி, தம்பியை கண்னு முன்னால் அடிவாங்குவதைக் கண்டு பொங்கி, தானும் ஆக்டிவ் போலீஸ்ஆக மாறுவதைக் கண்டு தமிழ் உலகம் புல்லரித்து போகிறது.. (இருக்கட்டும் இருக்கட்டும் பாசிட்டிவ் ஆகத்தானே காட்டுறீங்க…)
8. கேமரா அழகாக சுழலுகிறது… எடிட்டிங் சூப்பர்
9. பாடல்கள் அருமையாகப் படம் எடுத்திருக்கிறார்கள்.. அதிலும் பப்பப்பரப்பா பாடல்… வெறும் சாதா மூங்கில் கூடையைப் பிய்த்து கலர்அடித்து ஆற்று மணலில் ஸ்பீடாக மூவ்மெண்ட் அமைத்திருப்பது நல்ல கற்பனை..
10. நடனம் ராஜீ சுந்தரம், ஒரு சீனில் கூட கும்பலில் தலைக்காட்டுகிறார். பிருந்தா நடன அமைப்பும் உண்டு.
11. லாஜிக் மிஸ்டேக் அவ்வளவா தலைக்காட்டாமல் கொண்டு சென்றவர்களுக்கு, போலீஸ் ஸ்டேஷனையே துவம்சம் செய்தும், மொத்த டிபார்ட்மெண்டும் மாதவன் எஸ்ஐ தவிர யாருக்கும் அக்கறை இல்லாதுபோல் காட்டியிருப்பது கொஞ்சம் ஓவர்.
12. ஆங்காங்கே, வில்லன்களைக் காட்டிலும், இடது வலதுகளை சின்ன டெக்னிக் மூலம் போட்டுத் தள்ளுவது சூப்பர்.
13. கிளைமாக்ஸ் கொஞ்சம் நீளம் தான்.. அதிலும், போட்டுத்தள்ளு/தள்ளாதே என பெரிய சண்டையே மாதவனுக்கும் ஆர்யாவிற்கும் நடக்கிறது..
14. இடையே அமெரிக்க மாப்பிள்ளையை வைத்து, அமலாபால், ஆர்யா ஜோடி மவுத்கிஸ் அடித்து ஊர் சுற்றுவது, அமெரிக்க மாப்பிள்ளையை திருமணத்தன்று ஊரைவிட்டுத் துரத்தி இயற்கையாகவே, ஆர்யாவை அமலாபாலுக்கு திருமணம் முடிக்க அக்கா சமீரா கெஞ்சுவது பார்வையாளர்களுக்கு சுவாரசியம்.
15. கடைசியில், வில்லனின் போட்டியாள் போட்டுக்கொடுத்து பிரச்சினை உருவாகிறது… ஆனால், அந்த போட்டியாள் வில்லன் என்ன ஆனார்… தெரியவில்லை.

இந்த கரம் மசாலா வேட்டை, பொங்கல் விருந்துடன் சேர்த்து பரிமாற வேண்டிய கூட்டுக்காய்.. அவசியம் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும்….

VETTAI Tamil Film Review – Mathavan / Arya / Amala Paul / Sameera Reddy / Lingusamy / UTV / Uvan Shankarraja

More than a Blog Aggregator

Thiratti.com Tamil Blog Aggregator

Thenkoodu

valaipookkal.com Tamil Blogs

Udanz

அச்சச்சோ..இதைச் செய்ய மறந்திட்டோமே…

அச்சச்சோ..இதைச் செய்ய மறந்திட்டோமே…

பெற்று வளர்த்த அன்னையருக்கும் ஒரு தினம் உண்டு, செல்லம் கொடுத்து வளர்த்த அப்பாவிற்கு கூட ஒரு நாள் ஒதுக்கப்பட்டுள்ளது… என்னவொரு மேலை நாட்டுக் கலாச்சாரம்… இப்படி காதலருக்கு ஒருதினம், மனைவியருக்கு ஒரு தினம்… கடன்காரருக்கு ஒரு தினம் என்று வருடம் முழுவதும், மதுரையில் திருவிழா கொண்டாடுவது போல், உலக மேன்மக்கள் தினந்தோறும் ஒரு நாளை சிறப்பாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்… சரி போனாப்போவுது நமக்கென்ன… ஆனால், நம்மளாள (இந்தியாவில் இதை மட்டும் விட்டு வைத்து) இந்த நாள மட்டும் கொண்டாட முடியாம போனதற்கு என்ன காரணம், மறந்திட்டோமா…

அதாங்க, ஜனவரி 8 அன்று உலகம் டவுசர் அவுக்கும் நாள், ஆனும் பொன்னும் டவுசரை விட்டு கடாசிவிட்டு உறாயாக வெறும் உள்ளாடையினுடையே பொதுஇடங்களுக்கும், அலுவலகத்திற்கும் சென்றிருக்கிறார்கள்…இது நமக்கு தெரியாம போச்சே…. உலகில் லண்டன், மெக்ஸிகோ, நியூயார்க் போன்ற நகரங்களில் ஒட்டுமொத்த ஜனமும் இதைக் கடைபிடித்திருக்காக… போட்டோவெல்லாம் எடுத்து எம்எஸ்என்ல் போட்டிருக்காங்க பார்த்துங்குங்க…

No Pant Day on 8th January 2012 was celebrated all over world

More than a Blog Aggregator

Thiratti.com Tamil Blog Aggregator

Thenkoodu

valaipookkal.com Tamil Blogs

http://www.tamil10.com/files/hotlink.php

Udanz

Map

சில்லறைத் தட்டுப்பாட்டுத் தமிழகம்…..

சில்லறைத் தட்டுப்பாட்டுத் தமிழகம்…..
Demand of Coins and Rupees all around Tamil Nadu

பார் போற்றும் தமிழகம்…(பொங்கல் கொண்டாட ரூ.286 கோடிகளில் டாஸ்மார்க் விற்பனை சென்ற வருடத்தினைக் காட்டிலும் 36 லட்சம் அதிகம்). பல கோடிகளாகப் பரவலாக மீடியாவிலும், மக்களும் சில காலம் ( வெறும் பேச்சு மட்டும் தான்… யாரோ ஒரு சிலரே அந்த கோடிகளுக்கு அதிபதி)
பேசி.. பேசி… நாட்டில் ஒரே சில்லறைப் பஞ்சம் வந்துவிட்டது. எங்கு சென்றாலும் விலைவாசி உயர்வு காரணமாக எந்தப் பொருளும் கண்டிப்பாக அந்த பழைய விலைக்கு கிடைக்காது… போஸ்டல் ஸ்டாம்புகளைத் தவிர… (கேவலமாக பராமரிக்கப் படும், பஸ்ஸ்டாண்ட் கழிப்பிடம் கூட ரூ.5 கேட்கிறது.. மோட்டார் சைக்கிளை ஒரு நாள்முழுதும் இரவு 12 வரை மட்டும் நிறுத்தி வைக்க ரூ.10 )

சாதரணமாக டீ குடிக்க சென்றால் கூட ரூ.5க்கு அனைத்து இடங்களிலும் கிடைத்து வந்தது… இப்பொழுது ரூ.6, 7, 8 அல்லது பத்து என இடத்திற்கு தகுந்தாற்போல் விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், பத்து ரூபாய் குடுத்து ஒரு டீ குடித்தாலோ மீதி ரூ.4 கொடுக்க இயலாமல் கடைக்காரர் சிரமப் படுகிறார். ஒரு சிகரெட் வாங்கிக்க சொல்லியே, அல்லது மீதியை பிறகு வாங்கிக் கொள்ளுங்கள் என சொல்வது வழக்க மாகிவிட்டது. இதனால் ஒரு டீக்காக சாதரணமாக ரூ.10 செலவிட வேண்டிய அவசியம் தமிழனுக்கு ஏற்பட்டு விட்டது.

பஸ்ஸில் செல்ல முன்பெல்லாம் பிரச்சினை இல்லை இப்பொழுது ரூ.3 குறைந்தபட்சம் டிக்கட்டுக்கு ரூ.10 கொடுத்தால் கண்டக்டரின் ஏச்சு பஸ்ஸைவிட்டு இறங்கும் வரையில் நீடிக்கிறது. இதனாலேயே பஸ்ஸைக் கண்டாலே ஒரு விதமான பயம் தொற்றிக்கொள்கிறது. (அவரும் என்ன செய்வார் ஒரு நாளைக்கு.. சுமார் 600 பயணிகளுக்கு சில்லறை வழங்க எங்கோ போவார்.) காயின் போன்களில் தொலைபேசுவதை விட மொபைல் போனின் பேசினால் குறைவு என்பதால் காயின் போன்களும் காலாவதியாகிவிட்டது. இதனால், சில்லறைகளை ரூ.100க்கு ரூ.5 வீதம் கமிஷன் மூலம் வழங்க வழியில்லை.
வங்கிகளும் மூட்டை மூட்டையாக சில்லறைகளை பெருநிறுவனங்கள் பெற்றுக் கொண்டு சென்றுவிடுவதால், சிறு வணிகர்களுக்கு ஏமாற்றம்தான். சில்லறை இல்லாவிட்டால், அந்த வியாபாரத்தைக்கூட வேண்டாம் என சொல்லி விடுகிறார்கள்.

இதற்கு என்னதான் தீர்வு.

1. பொருள்களின் விலையை கூடுமானவரை 5ன் மடங்குகளாக வைத்திருக்கவும். உதாரணமாக டீயின் விலை ரூ.5 வடையின் விலை ரூ.5
2. ரிசர்வ் பேங்கிடம் சொல்லி ரூ.6, ரூ.7, ரூ.8 போன்ற எண்களில் ரூபாய் வெளியிடக் கேட்டுக் கொள்ளலாம்.
3. லோக்கல் ஆள்களாக இருந்தால் 10 டீ / 20 டீ போன்று மொத்தமாக வசூல் செய்துவிட்டு கழித்துக் கொள்ளலாம்.
4. பேருந்து கட்டணங்களைப் பெற்றுக்கொண்டு மீதிக்கு காயின்கள் (அவர்களே தயார் செய்தது) வழங்கினால், அதை மற்றொரு பேருந்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். (பயங்கர நிர்வாக சிக்கல் எழும்…இல்லையா)
5. அல்லது, டெபிட் கார்டு போல் சிறிய செலவினத்தையும் நாம் கழித்துக்கொள்ளும் வகையில் கார்டுகள் வெளியிடலாம்.
6. மீதி சில்லறையை எதிர்பார்க்காமல், ரூபாயை வழங்கிவிட்டு நடையைக் கட்டலாம். ( அப்பாடி…)
7. வழக்கமாக வழங்கும் சாக்லேட்டுக் பதில், பேருந்திலேயே ஒரு சிறிய ஸ்டோர் வைத்து மீதிக்கு தக்க பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
8. காய்கறிக் கடைகள் போன்றவைகள் தாங்கள் விற்பனைசெய்யும் பொருட்களை ரவுண்ட் தொகை வரும்படி விற்கலாம். உதாரணமாக 320 கிராம் கேரட் ரூ.10

More than a Blog Aggregator

Thiratti.com Tamil Blog Aggregator

Thenkoodu

valaipookkal.com Tamil Blogs

http://www.tamil10.com/files/hotlink.php

Udanz

Map

ஆல் இஸ் வெல் .. நண்பன்

ஆல் இஸ் வெல் .. நண்பன்
Nanban Film Review

நீண்ட நாளைக்குப் பிறகு ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு காலேஜ்மாம் என்ற ரீதியில் மிக நீளமான ஒரு தமிழ் படத்தை வழங்கியிருக்கிறார் சங்கர். ஆரம்பத்தில் ராகிங் நடப்பது அதிலும், பேண்டை அவிழ்த்து ஜட்டியுடன் சீனியர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது கொஞ்சம் முகம் சுளிக்க வைக்கிறது. அதே போன்று சீன்களே படம் முழுவதும் சில இடங்களில் வருகிறது.

விஜய் பாரிவள்ளல் என்ற மாணவனாக கல்லுரிக்குள் நுழைந்த நாள் முதலே அந்த கல்லுரியில் ஒவ்வொரு செயலுக்கும் இடக்கு மடக்கு பண்னுவதாகப் கல்லுரி முதல்வர் சத்யராஜ் நினைத்து பல இடைஞ்சல்களைத் தருகிறார். இவர் இரண்டு கைகளில் இரண்டு வேளைகளை ஒரே நேரத்தில் செய்பவர் மற்றும் தினம் 7 நிமிடம் மட்டும் சேவிங் செய்ய டைம் ஒதுக்குபவர்.

நினைத்த மாதிரியே ஜீவாவின் வறுமை குடும்பம், ஸ்ரீகாந்தின் நடுத்தரக்குடும்பம் மகனை ஒரு என்ஜினியராக்கியே தீர வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது… ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் முதலில் வருவதற்கு மாணவரிடையே நடைபெறும் போட்டி, சத்யன் மனப்பாடம் செய்து அனைத்துக்கும் முதலாக வருவது என நன்றாக செய்திருக்கிறார், பிறறைவிட அதிக மார்க்க எடுக்க வேண்டும் என்பதற்காக பரிட்சை அன்று முதல் நாள் இரவு அனைத்து ரூம் வழியாக ஒரு மாதிரிப் புத்தகங்களை தள்ளிவிட்டு கவனத்தை சிதைப்பது கவனத்தை கவர்கிறது. புராஜெக்ட் நீட்டிப்பு கிடைக்காததால் மண்டையைப் போடும் சக மாணவன். சத்யன் மூலமாக பிரின்ஸிபால் மற்றும் கல்வி அமைச்சரை கலாய்த்ததால் சத்யன் போடும் சபதம் போன்றவைகளும், பிரின்ஸிபாலின் இரண்டாவது பெண்னையே விஜய் டாவடிப்பது எனத் ஒன்றுஒன்று விட்டு காட்சிகள் தொடர்கிறது. பாரிவள்ளல் ஒரு மழைபுயல் நாளில் பிரின்ஸிபாலின் பெண்னுக்கு பிரசவம் பார்த்தல், வினாத்தாளை நண்பனுக்காக திருடி மாட்டிக் கொள்வது, சேவற்கொடி செந்தில் (ஜீவா) அப்பாவை பிழைக்க வைக்கிறது போன்றவை காட்சிகளில் ரசிக்கதக்கவை.

கல்லுரியை விட்டு பிரிந்தவுடன் விஜயின் தொடர்புஇல்லாமல் 10 ஆண்டுகள் இருப்பதும், சபதப்படி செப்டம்பர் 5 அன்று சத்யன் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்து நண்பர்கள் இருவரையும் கல்லுரியின் வாட்டர் டேங்க்க்கு வரவழைப்பது.. சுவாரசியம். மூவரும் சேர்ந்து விஜயைத் தேடுவதும், இடையில் பிரின்ஸியின் இரண்டாவது மகளுக்கு அமெரிக்கா மாப்பிள்ளையுடன் திருமணம் நடக்க இருப்பதை அறிந்து, பெண்ணையும் அள்ளிக்கொண்டு தனுஷ்கோடிக்கு பறப்பதும், இடையில் பாரிவள்ளல் என்பவர் விஜய் அல்ல என குட்டி பிளாஷ்பேக் வேறு… அப்பாடா… காரின் வேகத்திலேயே நமக்கும் விஜய் என்ன ஆனார் என அறிந்து கொள்ள ஆர்வம் தொற்றிக்கொள்கிறது.

கடைசியில் விஜய் ஆசைப்பட்டது மாதிரியே சும்மா மனப்பாடம் செய்து படிப்பதைத் விடுத்து அனைத்தையும் செய்முறை மற்றும் அறிவைப் பயன்படுத்தி உருவாக்கி தெரிந்து கொள்ளவேண்டும் என்ற தாரக மந்திரத்தை உருவாக்கி ஒரு பள்ளியின் ஆசிரியர் கம் உலகம் போற்றும் குறிப்பாக சத்யன் தேடும் நெ.1 சயின்டிஸ்ட் ஆகவும், சத்யராஜின் இரண்டாவது மகளை கைப்பிடிப்பதும் நண்பர்கள் அனைவரும் இணைவதும் 100 சதவீதம்… தமிழுக்கு புதிய வரவுதான். இடையில் மில்லிமீட்டர் என்ற கல்லுரி எடுபிடி.. சீனியர் மாணவர்களுக்கு படிப்பினை ஏற்படுத்துவது… பிரின்ஸிபாலிடம் (சத்யராஜ்) முடிந்தவரை சாப்ட்டாக எதிர்வாதம் செய்வது, ஆல் இஸ் வெல் என்று எப்பொழுதும் சொன்னால் அனைத்தும் நன்றாக நடக்கும் என்று அனைவரையும் சொல்லவைப்பது குறிப்பிடத்தக்கது.

நண்பன்… ஆல் இஸ் வெல்.
Nanban .. All is Well

More than a Blog Aggregator

Thiratti.com Tamil Blog Aggregator

Thenkoodu

valaipookkal.com Tamil Blogs

http://www.tamil10.com/files/hotlink.php

Udanz

சார்… வார்த்தையை குப்பையில் போடு…

சார்… வார்த்தையை குப்பையில் போடு…
Sir send the word to bin..

தமிழ் உலகில் சார் போடுவது ஒரு பேஷனாகிவிட்டது.. உண்மையில் அய்யா என்பது காவல் அதிகாரிகளையும், நீதிபதிகளையும் தவிர வேவொருவரை விளித்தால் அது அவரை கிண்டல் செய்வது போல் ஆகிவிட்டது. சார் … சார் என்று எங்கு பார்த்தாலும் இதே வார்த்தையே நமக்கு பரிச்சையமாகிவிட்டது. ஆனால், இந்த வார்த்தையினால் எந்த விதமான ஒட்டுதலும் இரு நபர்களுக்கு இடையே ஏற்படுவது இல்லை.

சார் வார்த்தையை நமக்கு அறிமுகப்படுத்திய ஆங்கிலேயேர்கள் வசிக்கும் இங்கிலாந்துலேயே இந்த சார் வார்த்தை புழக்கத்தில் இல்லை. அங்கேயெல்லாம், மிஸ்டர் மிஸ் போன்றவைகளே அதிகம் புழக்கத்தில் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அவர்களை அழைக்க நம்மாளுங்க துரை… துரைசானியம்மா என்று விளித்தலும் காலப்போக்கில் காணமல் போய்விட்டது.

ஒரு சில மாவட்டங்களில், பொதுவாக மற்றவரை அழைக்கும் பொழுது அண்ணா என்றும், அக்கா என்றும் வயதில் இளையவராக இருக்கும்பொழுது கன்னு என்று அன்பொழுக கூப்பிடுவதில் வல்லவராக இருக்கிறார்கள். சென்னையை பொறுத்தவரை சார் என்பதை விடுத்து சாவு கிராக்கி என திட்டாமல் இருப்பது உத்தமம்.

ஒரு கல்லுரியில் பரிட்சார்த்தாமாக, அனைத்து ஆசிரியர்களையும், அக்கா என்றும் அண்ணா என்றும் அழைத்து வருவதாகவும், இதன் மூலம் இருவர்களுக்கு இடைய பரஸ்பரம் அன்பு/ஒற்றுமை ஓங்குவதாகவும் தெரியவருகிறது. ஆகவே, தமிழ் கூறும் நல்லுகமே, சார் என்ற வார்த்தையை குப்பையில் போட்டு விட்டு அண்ணா, அக்கா என விளித்து சமூக ஒற்றுமையை வளர்ப்போமா….
நன்றி.. ஆவியில் எஸ்.ராமகிருஷ்ணனின் உரை

Tamil Revolution (by Sivaparkavi) .. 1
பார்க்க .. https://sivaparkavi.wordpress.com/2012/01/10/tamil1/
Tamil Revolution (by Sivaparkavi) .. 2
பார்க்க .. https://sivaparkavi.wordpress.com/2012/01/13/tamil2/

More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
http://www.tamil10.com/files/hotlink.php
Udanz

ஈகோ.. ல்லாம் ஒரு பிரச்சினையா ?

ஈகோ.. ல்லாம் ஒரு பிரச்சினையா ?
Ego is not a problem at all

காலாற நடந்து செல்லும்போது, கடலை விற்கும் அன்பர் கடந்து சென்றதால், கடலை சாப்பிடும் ஆசையை கட்டுப்படுத்த இயலாமல், கடலை சாப்பிட்டதனால் இந்த இடுகை.. ஏன்னா, கடலை மடித்துக் கொடுத்த பேப்பரில் தான் இதைப் பார்த்தேன்..

உலகத்தில் எல்லாருமே ஒரே மாதிரி குண இயல்பு உள்ளவராய் இருந்தால், கலகந்தான் மிஞ்சும். ஒருவர் தன்னிடம் இருக்கும் குறைகளை, பிறரிடம் கானும்போது அவரை வெறுக்கிறார். உண்மையில், இது ஆழ்மனத்தில் உள்ள சுய வெறுப்பின் சாமர்த்தியமான வெளிப்பாடு சுய குறைகளைக் கண்டு, தன்னை வெறுக்கவிடாமல் ஒருவரது அடிமனம் அந்த குறைகளைக் கொண்ட இன்னொருவரை வெறுக்கிறது.

ஈத் தடுக்கிறது, ஈகோ அவற்றை சாமர்த்தியங்களாகக் கூட பிரதிபலிக்கும்போது, ஒருவன், அவனை ஜென்மப் பகைவனாய் கருதுகிறான். வெறுப்பதன் மூலம் இவன், தன் ஜென்மத்தில் உள்ள குறைகளை மறைமுகமாக வெறுக்கிறான். இதனால் தான் சான்றோர்கள் தன்னை உணரச் சொன்னர்கள்.

திருமூலர் .. மரத்தை மறைத்தது மாமத யானை
சாக்ரடீஸ் .. உன்னையே நீ அறிவாய்
பைபிள் .. உன்னைப்போல் மற்றவனை நேசி

என்று சொன்னதுக்கும் இது தான் காரணம், பிறரை வெறுக்கும் ஒருவன் தன்னைத் தானே சோதித்துக் கொள்ள வேண்டும்.

.. அண்ணா, பொங்கல்மலர் 82

மிகப் பரவலாகக் சமீபகாலங்களில், பொருளாதார ரீதியிலான ஈகோ பிரச்சினைகளையும், குடும்பப் பிரச்சினைகளையும் தீர்த்துக் கொள்ள பயன்படுத்திப் பார்க்கலாம்.
More than a Blog Aggregator

Thiratti.com Tamil Blog Aggregator

Thenkoodu

valaipookkal.com Tamil Blogs

http://www.tamil10.com/files/hotlink.php

Udanz

33% ஒதுக்கீடு வெற்றி…

33% ஒதுக்கீடு வெற்றி…

(கெட்டதும்)

கடலுர் மற்றும் புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான மரங்கள் கீழே விழுந்து விட்டதால், அதற்கு பதிலாக மரக்கன்றுகளை இப்பொழுது நட்டு வளர்த்தாலும் அடுத்த தலைமுறை மக்களே அதை அனுபவிக்க இயலும் எனத் தெரிகிறது. 1917ல் இதேபோல் ஒரு புயலால் புதுச்சேரியில் உள்ள மரங்கள் அனைத்தும் விழுந்துவிட்டதை பாரதியார் தனது கவிதைகளில் பதிவு செய்திருப்பதாகவும் தகவல்.

(நல்லதும்)

பசுமைப் புரட்சி.. Green Revolution Success – Tree Cultivation Scheme

தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் மொத்த நிலத்தில் சுமார் 33 சதவீதம் பச்சைபசேல் என ஆக்கும் திட்டம் உருவாக்கப்பட்டு தனியார் நிலங்களில் மரம் வளர்க்கும் திட்டம் Tree Cultivation in Private Lands (TCPL) Scheme வெற்றி அடைந்து 15.5 லட்சம் மரக்கன்றுகள் கடந்த 5 வருடங்களில் நடப்பட்டுள்ளது.

2007ம் ஆணடு முதலில் 2.20 லட்சம் மரக்கன்றுகளை சுமார் 504 றெக்டேர் நிலத்திலும், அதற்கடுத்து 1.85 லட்சம் அடுத்த ஆண்டிலும், 3.20 லட்சம் 2009/2010ம் ஆண்டிலும், 4.25 லட்சம் மரக்கன்றுகள் சுமார் 850 றெக்டேர் நிலத்தில் நடப்பட்டுள்ளதாக மாவட்ட வன அலுவலர் தெரிவிக்கிறார்.

இலவசமாக வழங்கப்பட்ட இந்த மரக்கன்றுகளை பெற்று தங்களது நிலங்களில் நட்டு வளர்க்க அனைத்து தர மக்களும் ஆர்வம் காட்டியதாகவும், அதனை நன்கு வளர்க்க நிதி உதவியும் சில இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், இத்திட்டத்தின் மூலம் 4600 விவசாயிகள் பலடைந்ததாகவும், சுமார் 45 லட்சம் ரூபாய், ஊக்க ஊதியமாக இதன் மூலம் கிடைக்கப்பெற்றதாகவும் மேலும் தெரிவித்தார்.

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் வன இலாகா அலுவலர்கள் மரக்கன்று வளர்ப்புகளை நேரில் பார்வையிட்டு தேவையான உதவிகளைச் செய்து வருகின்றனர். டீக், சில்வர் ஓக், மலை வேம்பு, குமுள் போன்ற மரக்கன்றுகள் நன்கு வளர சுமார் 20 ஆண்டுகள் பிடிக்கும் எனத் தெரிகிறது.

ஜப்பானை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் உதவியுடன் தமிழக அரசு பயோ டைவர்சிட்டி மற்றும் கீரினிங் திட்டம் ( Tamilnadu Bio-diversity and Greening Project ) அரசு நிதி உதவியுடன் தமிழக முதல்வரின் 64வது பிறந்தநாள் அன்று தொடங்க இருப்பதாகவும், அதற்குத் தேவையான மரக்கன்றுகளை இப்போது தொடங்கி நர்சரிகளில் வளர்க்க ஆரம்பித்துள்ளதாகவும், இம்மரக்கன்றுகளை வழங்கி வளர்க்க, ஆர்வமுள்ள கல்வி நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் விரைவில் தேர்தெடுக்கப்பட உள்ளதாகவும், இது குறித்து பல விசாரணைகள் இ/மெயில் மற்றும் நேரிடையாகவும் அறிந்து கொள்வதாகவும் தெரியவருகிறது. (Thanks… I.E.,CBE)

More than a Blog Aggregator

Thiratti.com Tamil Blog Aggregator

Thenkoodu

valaipookkal.com Tamil Blogs

http://www.tamil10.com/files/hotlink.php

Udanz

தமிழை ..வளர விட்டோமா ..? TAMIL

தமிழை ..வளர விட்டோமா ..? TAMIL

இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே… தமிழ் உலகிலேயே சிறப்பான ஒரு மொழி… ஆனால், தமிழ் பேசும் சமுதாயம் இந்த தமிழை வாழ வைக்கவோ… வளர விடவோ என்ன செய்ய வேண்டும்… ஆவியின் இந்த வார இலவச ஆப்பர்… நீயா? நானா? கோபிநாத் அவர்களின் உரையை கேட்க நேர்ந்தது.

தமிழ்கூறும் நல்லுலகம் தமிழில் மட்டும் பேசுவதாலயே, எழுதுவதாலேயே மொழியின் வளர்ச்சி இருக்காது. உதாரணத்திற்கு, உலகிலேயே அதிகம் பேசும் மொழி சைனீஸ் ஆனால் உலகளவில் பார்த்தால் பெரும்பாலும் சைனீஸ் மொழியில் ஒரு சிறிய எழுத்திற்கு கூட அர்த்தம் தெரியாது. காரணம், சீனா காரர்களின் மொழி தேசம் விட்டு தேசம் வளர வாய்ப்பில்லாமல் அந்த நாட்டிற்குள்ளேயே.. கவிழ்த்து வைத்த கூடைக்குள் இருப்பது போல் நீண்டநாட்கள் வாழ்ந்ததே…

அதற்கு எதிர்மாறாக..ஆங்கிலேயர்களோ தங்களது வணிகத்திற்கு ஆங்கிலத்தை பயன்படுத்தி உலகம் முழுவதும் சென்று பயன்படுத்தியதினால் இன்று உலகின் மூலை முடுக்கெல்லாம் ஆங்கிலம் ஒரு பொது மொழி போன்று தழைத்தோங்குகிறது.

அதேபோல், தமிழை உலகின் மூலை முடுக்கெல்லாம் பரவச் செய்ய வேண்டும், அதற்கு பிறமொழி பேசுபவர்களை தமிழில் பேசவோ / எழுதவோ அல்லது வியாபாரத்தில் தமிழை பயன்படுத்தும் வகையில் எழுத்துக்களை பயன்படுத்துவதே தமிழை வளர்க்க நாம் செய்யும் முயற்சியாகும். வெறுமனே, தமிழர்களும், தமிழ்நாட்டிலும் ஒரு சில வெளிநாடுகளில் சிறிய அளவில் தமிழ் பேசி எழுதினாலும், குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டியது போதும்… வெளிஉலகில் அனைத்து நாடுகளிலும் பரவலாக உள்ள நமது தமிழர்கள் தங்களால் முடிந்த அளவு ஒரு சில தமிழ்பதங்கள், வார்த்தைகள், எழுத்துக்கள் என பயன்படுத்தி பிறரையும் பயன்படுத்துமாறு சூழ்நிலைகளை ஏற்படுத்துவது அவசியம்.

எனவே, அண்ணாச்சி சொன்னது போல், தமிழில் உள்ளவற்றை பிற தேசங்களிலும் கொடிகட்டிப் பறக்க பிற மதம் / மொழி / இனம் சார்ந்தவர்களை தமிழை எளிதாக பயன்படுத்தும் வகையில் நாம் வகை செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்தால் குறிப்பிட்ட காலத்திற்குள் தமிழ் எங்கும்… எப்போதும் நாம் விரும்பும் வகையில் வளர்ந்து விடும.

More than a Blog Aggregator

Thiratti.com Tamil Blog Aggregator

Thenkoodu

valaipookkal.com Tamil Blogs

http://www.tamil10.com/files/hotlink.php

Udanz

TAMIL .. HOW TO SPREAD OVER WORLD…