கடலுர்க்கு மட்டும் கருணை காட்ட மாட்டேன்கிறோம்…ஏன்?

கடலுர்க்கு மட்டும் கருணை காட்ட மாட்டேன்கிறோம்…ஏன்?

2004ல் சுநாமி தாக்கியபோது, கடலோரத்தில் உள்ள பலர் பாதிக்கப்பட்டனர் சுமார் 10000க்கு மேல் இறந்து போயினர், உடமைகளை இழந்தனர். அந்த அளவிற்கு இல்லையென்றாலும், இந்த முறை, தானே புயல் கடலுர் மற்றும் உள்புற மாவட்ட கிராமங்களை புரட்டி போட்டதை மீடியா கவனத்திற்கு அதிகளவில் கொண்டுவராமல் புத்தாண்டு கொண்டாட்டங்களில் மூழ்கிப்போனோம். புத்தாண்டு தின முன்தினம்டாஸ்மார்க் விற்பனை 142கோடியாக இருதினங்களில் உயர்ந்தது…

அங்கே, உண்மையில், 1000 கணக்கானோர் வீடுகளை, உடமைகளையும் இழந்து அடுத்த வேளை உணவு மற்றும் குடிநீர்க்காக அல்லாடுவதாக செய்திகள் தெரிவிக்கிறது. மாவட்ட நிர்வாகம் திறம்பட செயல்பட்டாலும் இன்னமும் நிலைமை சீராகவில்லை. குடிநீர் பாட்டில் ரூ.100க்கும், செல்போன் ரீசார்ஜ் செய்ய ரூ.10 ம் வசூலிக்கப் படுவதாகத் தெரிகிறது. நெய்வேலியில் பல லட்சம் மரங்கள் விழுந்து விட்டதாகவும், அம்மாவட்ட மக்களின் வாழ்வாதாரமான முந்திரி தோப்புகளும், பலா மரங்களும் அழிந்து விட்டதை பலரும் வேதனையுடன் தெரிவிக்கிறார்கள். இதுவரை 40க்கும் மேற்பட்டவர்கள் இறந்தாகத் தெரிகிறது. அரசு இயந்திரம் மற்றும் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டும், அமைச்சர்கள் நேரடி கண்காணிப்பில் ஈடுபட்டும் இயல்பு நிலை இன்னும் திரும்பவில்லை. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் டிவியின் மூலம் வெளிஉலகில் நடப்பது தெரியாதால் விஷமிகளால் நிலநடுக்கம் வருகிறது என புரளி கிளப்பி மக்களை உறங்க விடாமல் வீதியில் நிறுத்தியிருக்கிறதாக செய்தித்தாள்கள் தெரிவிக்கின்றன.

சுநாமியின் போது, தமிழக மக்கள் அனைவரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து அந்தப் பகுதி மக்கள் விரைவில் தங்கள் சோகங்களை மீட்க உதவியது. ஆனால், இப்போது, அதிக அளவில் தொண்டு நிறுவனங்கள் கூட கண்டு கொள்ளாமல் விடப்பட்டது மிகப்பெரிய சோகம்…. தனிப்பட்ட உதவிகள் செய்ய எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை…

More than a Blog Aggregator

Thiratti.com Tamil Blog Aggregator

Thenkoodu

valaipookkal.com Tamil Blogs

http://www.tamil10.com/files/hotlink.php

DISCLAIMER : COMPLIED WITH PRINT MEDIA

CUDDALORE THANE STORM AFFECTED AREA

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s