நம்மாளுங்க இதப் பார்ப்பாங்களா..சந்தேகம் தான்

மக்களிடையே ஒருவரிடம் வாங்கிய பொருளை / பணத்தை திருப்பி கொடுக்காவிட்டால் காந்திகணக்கில் வைத்துக் கொள்.. என்ற சொலவடை அனைத்து இடங்களிலும் காணக்கிடைக்கும்.
இந்த முறை, நடுத்தர வர்க்கம் கிரடிட் கார்டு, பர்சனல் லோன், வீட்டு லோன், டூவீலர் லோன் எனப்பல லோன்களை வாங்கி விட்டு கட்ட முடியாமல் தவிக்கும்பொழுது லோன் வழங்கிய ஒரு சில வங்கிகள் (ஒசிஒசி, குட்டி, எப்டிஎப்சி, கோஸிஸ் ) தனியார் குண்டர்களை வைத்து எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தி லோனை வசூல் செய்வதை அப்படியே சித்தரித்திருககிறார்கள்.

நடுத்தர குடும்ப காலேஜ் அக்கவுண்ட் புரபசர், அவரது மணைவி, மகள் மற்றும் மச்சானுடன் அழகாக / ரசனையுடன் குடும்பம் நடத்தி வருகிறார். மச்சான் எம்பிஏ முடித்தவுடன், சாப் சர்ட்டிபிகேஷன் பரிட்சை எழுத 2 லட்சம் தேவைப்படுகீறது. உடனடியாக வழங்க அப்பிளிகேஷனில் 47 கையெழுத்துமட்டும் வாங்கி, பேங்க் ஏஜண்ட்கள் கமிஷனுக்காக பல பொய்களையும், பொய்யான சான்றிதழ்களையும் செட்டப் செய்து உடனடியாக விசாரனை செய்து கொண்டிருக்கும் பொழுதே, லோன் தொகை டிடியாக வழங்கப்பட்டு விடுகிறது.

லோன் தொகையை சிறிது சிறிதாக ஒழுங்காக செலுத்தியும், வட்டித்தொகையும் செலுத்தியும், பேங்கால் ஒரு சில மாதாந்திர பிடித்தங்களைப் பிடிக்காமல் இழுத்தடிக்கப்பட்டு, வட்டி, அபராதம், பிடித்தம், சர்வீஸ் சார்ஜ் என கந்து வட்டிக் கணக்காக 1.10 இலட்சம் கூடுதலாகக் கட்ட வேண்டும் என நோட்டிஸ் அனுப்பி, போனில் மிரட்டி, நேரடியாக மிரட்டி என அல்லல் படுத்துகிறது ஒசிஒசி பேங்க்.

ஒரு திருமண நாளில் கணவன், மனைவி குடும்பத்துடன் சந்தோமாக கோவிலுக்கு செல்லும்போது, கலெக்ஷன் ஏஜன்சி தலைவர், நேரடியாக லோனை வசூலிக்க வீட்டுக்கு வந்து நடுரோட்டில் அவமானப்படுத்துவதால், அவமானம் தாங்காமல் குடும்பம் முழுவதும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்கிறது. விஷயம் அறியாத கதாநாயகன் (புதிய வரவு…)
வீட்டுக்கு வந்தவுடன் இறந்த சொந்தங்களைப் பார்த்து கதறி… இடையே ஒரு கதாநாயகியுடன் ரவுசு விட்டு, பிறகு கதாநாயகி போலிஸ் இடம் மாட்டி விடுவதைக்கண்டு வெறுத்து ( 3 டூயட் பாடல்கள் பாடி) கதாநாயகியுடன் டூ விடுகிறார். ஆனால், வெறுத்து ஒதுக்கிய கதாநாயகியோ கதாநாயகனை நினைத்து உருகி வழிகிறார். ஆனால் கடைசிவரை சேரவில்லை.

கதாநாயகன், ஓசிஓசி பேங்கை பழிவாங்க முடிவு செய்து, ஒரு புராஜக்ட் இல்லாத ஐடி நிறுவனத்தை டேக் ஓவர் செய்து, அனைத்து பணியாளர்களையும் கையெழுத்து போட வைத்து 2 கோடி கடன் வாங்கி பின்னால் அனைத்து பணியாளர்களையும் வேலையில் விட்டுத் துரத்தி கடன் பொறுப்பில் இருந்து விடுவித்து, 1.5 கோடியை வரியாக செலுத்தி பொய்யாக 200 கோடி டர்ன் ஓவர் நடந்தாக நம்ப வைக்கிறார். மற்றொரு எக்ஸ்போர்ட் கம்பெனி ஆரம்பித்து, ஓசிஒசி பேங்கை தானகவே, முன்வந்து லெட்டர் ஆப்கிரடிட் மூலம் 80 சதவீதம் மொத்த கடன் 360 கோடியாக பெற்று கம்பெனியை இருந்த இடம் தெரியாமல் ஆக்கி, முதலில் டேக்ஓவர் செய்த கம்பெனி பெற்ற லாபம் எனக் கூறி ஒரு டிரஸ்ட் ஆரம்பித்து, தனியார் வங்கிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு சங்கம் ஆரம்பித்து அவர்களது துயர்களைத் துடைக்கிறார்.

மும்பையில் இருந்து ஓசிஓசி பேங்க் அதிகாரி, தமிழகம் வந்து, 360 கோடி வசூலாகாமல் கடன் கொடுத்ததை கண்டறிந்து வசூல் செய்ய, பாங்க் அதிகாரிகளுடன் பலபல பிரச்சினைகளை சந்தித்து, நீதிமன்றத்தில் பல்வேறு வாதங்களை எடுத்து வைத்து, வங்கி தான் கொடுத்த வழக்கை வாபஸ் வாங்க வைத்து, கதாநாயகனை அடித்து துன்புறுத்தியதற்காக நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவிடுகிறது. ( நீதிமன்ற காட்சிகள் அருமை.. ரியல் நீதிமன்ற நடவடிக்கைகளை காட்சிகளாக வைத்திருக்கிறார்கள்.)

கடைசியில் அண்ணா உறாசரே யின் டில்லி சிறையில் இருந்து வெளிவரும் காட்சியுடனும், தேசப் பக்தி பாடலுடன் படம் நிறைவடைகிறது. ஒரு சில இடங்களில் படம் தொய்வடைவதை தவிர்த்து நடைமுறை வாழ்க்கையில் உள்ள அபார்ட்மெண்ட் வாழ்க்கை முறைகளையும், இண்டீரியர் டெக்ரேஷன், தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்தும் நவீன தனியார் நிறுவனங்களைப் படம்பிடித்து காண்பிக்கிறார்கள். சிறந்த ஒளிப்பதிவு, டைரக்சன், நடிப்பு என அனைவரும் சிறப்பாகவே செய்திருக்கிறதாகவேப் படுகிறது. இருப்பினும், ஸ்டார் வேல்யூ இல்லாத படமாதலால்… நம்மாளுங்க இதப் பார்ப்பாங்களா..சந்தேகம் தான். சந்தேகமில்லாமல், தமிழக மக்களின் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் ஒரு சமூக நீதிப்படம்தான்.. இது..

காந்தி மகான் கணக்கு …. விமர்சனம் Gandhi Mahan Kanakku – Tamil Film Review

More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
http://www.tamil10.com/files/hotlink.php
Udanz

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s