உஷ்… அப்பாடா கிளம்பிட்டாப்ல டீடெய்ல் சொல்ல..

உஷ்… அப்பாடா கிளம்பிட்டாப்ல டீடெய்ல் சொல்ல..
வேலி போட விருப்பமா… பாலம் கட்ட விருப்பமா ?

நாம் பலதரப்பட்ட மக்களுடன் உறவாடினாலும் அனைத்து உறவுகளும் இனிப்பதில்லை. வாழ்க்கை பல ஏற்ற இறக்கத்துடன் நடப்பதாலும், பிறருடன் நாம் கொண்டிருக்கும் அக்கறை / உறவையும் உள்ளடக்கியது. வயதானவுடன் தான் நமக்கே உறைக்கிறது நாம் நடந்து வந்த பாதை மிகக் மிகக் குறுகியது, ஒரு சிலருக்கு பெரிய பாதையாகவும் இருக்கும், எப்படியாகினும் நாம் நம்வழியிலேயே கடந்து வந்திருப்போம். நம்மில் ஒரு சிலரே அனைவருக்கும் தெரிந்தவராகவும், நம்பிக்கையை விதைப்பராகவும், மரியாதை மற்றும் அன்புடன் பழகி வருவதைக் கண்கூடாக காண்போம்.


வாழ்க்கை சூழல் உண்மையில் பல எதிர்பாராத திருப்பங்களைக் சந்தித்திருக்கும்… வலிமிக்க உறவு / புதுப்பிக்கப் பட்ட உறவு / சண்டைபோட்டு விலக்கப்பட்ட உறவுகள் என சந்தித்து நமது தனிப்பட்ட குணநலன்களால் அவற்றால் பாதிக்கப் படாமல் இருக்க நமக்கென ஒரு உறவு தடுப்பு வேலி அமைத்திருப்போம். இதனால், நாம் நம்முடைய விரும்பம் போல் வாழ்க்கையை தனிப்பட்ட குணநலன்களுக்கேற்ப வாழ்ந்து வருவோம். இத்தகைய உறவு பாதுகாப்பு வேலி பிறருக்கும் தனிப்பட்டவருக்கும் இடையே ஒரு பாதுகாப்பு கோடு போடப்பட்டது போலும், இடையூறு இல்லாதது போன்று தோன்றினாலும்….

நாம் உறவு பாலம் கட்டியே ஆகவேண்டும், எளிமையாக நாம் விட்டுக் கொடுத்து, அல்லது உரிமையாக எடுத்துக் கொள்வதன் மூலம் நம்முடைய எந்தவிதமான தனித்தன்மையையும் இழக்கவில்லை, எளிதாக பிறரை நாம் சந்திக்கவும், ஏற்றுக்கொள்ளவும் இந்த பாலம் கட்டுதல் உதவும்.
இந்த நட்பு பாலம் கட்டினால், ஒருவருக்கு ஒருவர் உதவியாகவும், அன்பாகவும் வாழ்க்கை மேலும் இனித்திடவும் வாய்ப்பாக அமையும். அதற்கான நம்முடைய அனைத்து குணாதியங்களையும் விட்டுக் கொடுக்க வேண்டியதில்லை. ஒரு கிராமத்தில் உள்ள வீட்டைச் சுற்றிலும் அழகான வேலி அமைத்திருப்பதன் நோக்கம், பிற மிருகங்களிடம் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்காகத்தான், இருப்பினும் அந்த வீடு உலகுடன் தொடர்பில் இருந்து கொண்டே இருக்கும். நம்முடைய அனைத்து சமூக நடவடிக்கைகளிலும், தொழிற் நடவடிக்கைகளிலும் (நாம் தனியாக எந்தவொரு வேலையையும் செய்ய இயலாது ஒரு டீம் ஒர்க்காக பணிபுரிந்ததால் மட்டுமே சிறப்பாக பணிகளை விரைவில் முடிக்க இயலும்),
இந்த நட்பு பாலம் கட்டுதல் தொடர்ந்து கொண்டிருக்குமானால்
மனித நாகரிக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கவும், மனிதன் தன்னறிவு மிக்கவனாகவும் ஆக்க வல்லமையுடையது. இருப்பினும், ஒரு சிலர் தீய எண்ணம் கொண்டவர்களால், இவ்வாறு நட்பு பாலம் கட்டுவதற்கு இடைஞ்சல்கள் தோன்றவே தோன்றும். அதையும் தாண்டி, நமக்கு பாலங்கள் மட்டுமே தேவை… வேலிகள் அல்ல…

இதனால், நாம் எப்பொழுதும் நமது வெளி சூழ்நிலைகள் அமைதியாக இருக்கும் என சொல்ல இயலாது… ஆனால், எப்பொழுதும், எந்த சூழ்நிலைகளிலும் நமது உள்ளத்தை அமைதியாகவும், எதையும் தாங்கும் வல்லமையும் தரும்…

எங்க கிளம்பிட்டீங்க… பாலம் கட்டவா ? வேலி அமைக்கவா ?

( உஷ்… அப்பாடா கிளம்பிட்டாப்ல டீடெய்ல் சொல்ல…மக்கா நேரில் வாடி இருக்கு உனக்கு… என சொல்வது காதில் விழும்முன் …. எஸ்கேப் ) Fences and Bridges of Human Relationship
நன்றி .. தி ஸ்பீக்கிங் ட்ரீ.. TOI
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
http://www.tamil10.com/files/hotlink.php
Udanz

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s