இந்தியாவிற்கே முதலிடம்….

இந்தியாவிற்கே முதலிடம்….

நான்கு வழிச்சாலைகளில் விரைந்து ஓடும் கார்கள், பேருந்துகள், சரக்குந்துகள்… சிறிய வாகனங்கள் தலைதெறித்து ஓடிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவின் நான்கு திசைகளிலும்… எப்பொழுதும் எங்கேயும்…

ஆனால், சமீபத்திய உலக சுகாதார நிறுவனம் சொல்லியிருக்கிறது… உலகிலேயே விபத்தினால் இறப்பதும் / காயம் அடைவதும் மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்திய நாடே முதலிடம் வகிக்கிறது. அவங்க சொல்றாங்க

வருடத்திற்கு 1,50,0000 பேர் இறக்கிறார்கள்
3,00,0000 பேர் கைகால்களை இழக்கிறார்கள்
1.20 மில்லியன் பேர் காயம் அடைகிறார்கள்.
( Thanks. : DC, CBE )

விபத்து நிகழ்ந்தால் அதனால் பாதிக்கப்பட்டவரின் குடும்பம் மிகுந்த துன்பத்திற்கும், பல வருடங்கள் அவருடைய வாரிசுகளையும் பாதிக்கும்…இல்லையா..

என்ன செய்யலாம்…https://sivaparkavi.wordpress.com/ ?

1. அனைத்து வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாடு அவசியம் ( சட்டப்படியும் / தனிப்பட்ட ஓட்டுநர்களின் மனதில் பதியும்படியும் செய்ய வேண்டும் )
2. தனிப்பட்ட வாகனங்கள் வைத்திருப்பவர்கள் கடைசி நேர பரபரப்பைத் தவிர்த்து கொஞ்சம் அட்வான்ஸ்ஆக கிளம்பி செல்ல வேண்டும்.
3. குறிப்பாக இரவில் அதிகாலை சுமார் 3 மணியில் இருந்து 5 மணிவரைக்கும் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி ஓட்டுனர்களை ஓய்வு எடுக்க சொல்ல வேண்டும்.
4. சாலையில் பழுதாகி நிற்கின்ற வாகனங்களின் மீது மோதிதான் பெரும்பாலான விபத்துக்கள் நிகழ்கின்றன. எனவே 108 அவசர ஆம்புலன்ஸ் சர்வீஸ் போன்று, சாலைப்பழுதுநீங்கும் தனியார் பங்களிப்புடன் 109 சர்வீஸ் ஆரம்பித்து, பழுதான வண்டியை பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்தி செல்ல வைக்கலாம்.
5. பயணங்களை கூடுமானவரை தவிர்க்க, வீடியோ கான்ப்ரென்ஸ், வீடியோ காலிங் போன்ற வசதிகளுடன் போன் மூலமே பெரும்பாலான பணிகளை முடித்துக் கொள்ளுதல்.
6. எதிரில் வரும் வாகனம் வேகமாகவோ, அல்லது நிலை தடுமாறி வருகிறது என எண்ணினால் கௌரவம் பார்க்காமல் சாலையை விட்டு இறங்கி வழிவிட்டு விடவும்.
7. அவ்வாறு அதிவேகமாக செல்லும் வாகனத்தின் நம்பரைக் குறித்துக் கொண்டு, சிரமம் பார்க்காமல் 100க்கு போன் செய்து விபரத்தினை தெரிவித்தால் போலீசார் கூடுமானவரை விபத்து ஏதும் நிகழா வண்ணம் செயல்பட ஏதுவாகும்.
8. பொதுமக்கள், நமக்கென்ன என்று இல்லாமல் விபத்தை நேரில் சந்திக்க நேர்ந்தால் உடனுக்குடன் அவர்களைக் காப்பாற்ற அனைத்து விதமான உதவிகளையும் உடனே செய்யவேண்டும்.
9. டோல் பிளாசா போன்றவற்றில் கூடுதல் பணியாளர்களை நியமித்து ஒவ்வொரு வாகனத்தினையும் கூடுதல் எடை / விளக்குகள் எரிகிறாதா / காற்று உள்ளதா / டயர்கள் பழுதடைந்துளளதா என சோதித்து முத்திரையிட்டு (3 நிமிடங்களுக்குள் ) அனுப்பலாம்.
10. புதிய வாகனங்களுக்கு வேகத்தினை குறைத்து பம்ப்களை அடைத்து ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவு செய்யலாம்.
11. கூடுமானவரை லைசென்ஸ் வழங்கும் முறைகளில் ஊழல் இல்லாமல் லஞ்சம் இல்லாமல் கண்டிப்பான நடைமுறைகளைப் பின்பற்றலாம்.
12. மொத்தத்தில் நமக்கு இன்று ஏதேனும் பிரச்சினை ஏற்படும் என உள்ளுனர்வு சொன்னால் உடனே பயணத்தை தவிர்க்கலாம்.
13. குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு கடுமையான தண்டனை மற்றும் ஓட்டுனர் உரிமத்தைப் பறித்தல் அவசியம்.
14. விபத்தில் சிக்கியவர்களுக்கு எவ்வளவு விரைவில் சிகிச்சை மற்றும் விபத்து நிவாரணங்களைக் கிடைக்க ஆவண செய்யலாம்.
15. கவனத்தை திசைதிரும்பும் நோட்டீஸ்போர்டுகள் பிளக்ஸ் போன்றவைகளை கண்காணித்து அகற்றுதல்

போன்றவைகள் விபத்திலிருந்து தப்பிக்க உதவும்..

இது பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கும் இ/மெயில் மூலம் அனுப்பி உதவலாம் தானே…

அன்புடன்.. சிவபார்கவி.

More than a Blog Aggregator

Thiratti.com Tamil Blog Aggregator

Thenkoodu

valaipookkal.com Tamil Blogs

http://www.tamil10.com/files/hotlink.php

Udanz

Advertisements

4 thoughts on “இந்தியாவிற்கே முதலிடம்….

  1. Across the board Indians lack discipline. It is not taught in schools and homes anymore. The society is in decline and chaos prevails everywhere. Secondly, people don’t respect others. Everyone should recognize the other person on the road has the same rights as he/she. In addition, I wonder why people hate each other so much!
    As far as accidents are concerned people have become immune to other’s sufferings. Civility is lacking totally. Look at the foot paths / side walks. Encroachments everywhere!! As long as change does not start from home there is no way this country can survive in the future.
    I often ponder, slowly China would conquer India. And, that won’t be such a bad idea. They know how to discipline the masses. My solution, make military training compulsory. 2 years of service after 12th std and before college. It will make people patriotic citizens and discipline would not be a problem at all.

  2. உங்களுடைய எழுத்துக்கள், வலைப்பூவின் டெம்ப்ளேட் எல்லாம் அருமையாகத்தான் இருக்கிறது… ஆனால் wordpress பதிவர்களை பின்தொடர்வதில் சில தொழில்நுட்ப சிக்கல்கள் உள்ளனவே…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s