தமிழை ..வளர விட்டோமா ..? TAMIL

தமிழை ..வளர விட்டோமா ..? TAMIL

இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே… தமிழ் உலகிலேயே சிறப்பான ஒரு மொழி… ஆனால், தமிழ் பேசும் சமுதாயம் இந்த தமிழை வாழ வைக்கவோ… வளர விடவோ என்ன செய்ய வேண்டும்… ஆவியின் இந்த வார இலவச ஆப்பர்… நீயா? நானா? கோபிநாத் அவர்களின் உரையை கேட்க நேர்ந்தது.

தமிழ்கூறும் நல்லுலகம் தமிழில் மட்டும் பேசுவதாலயே, எழுதுவதாலேயே மொழியின் வளர்ச்சி இருக்காது. உதாரணத்திற்கு, உலகிலேயே அதிகம் பேசும் மொழி சைனீஸ் ஆனால் உலகளவில் பார்த்தால் பெரும்பாலும் சைனீஸ் மொழியில் ஒரு சிறிய எழுத்திற்கு கூட அர்த்தம் தெரியாது. காரணம், சீனா காரர்களின் மொழி தேசம் விட்டு தேசம் வளர வாய்ப்பில்லாமல் அந்த நாட்டிற்குள்ளேயே.. கவிழ்த்து வைத்த கூடைக்குள் இருப்பது போல் நீண்டநாட்கள் வாழ்ந்ததே…

அதற்கு எதிர்மாறாக..ஆங்கிலேயர்களோ தங்களது வணிகத்திற்கு ஆங்கிலத்தை பயன்படுத்தி உலகம் முழுவதும் சென்று பயன்படுத்தியதினால் இன்று உலகின் மூலை முடுக்கெல்லாம் ஆங்கிலம் ஒரு பொது மொழி போன்று தழைத்தோங்குகிறது.

அதேபோல், தமிழை உலகின் மூலை முடுக்கெல்லாம் பரவச் செய்ய வேண்டும், அதற்கு பிறமொழி பேசுபவர்களை தமிழில் பேசவோ / எழுதவோ அல்லது வியாபாரத்தில் தமிழை பயன்படுத்தும் வகையில் எழுத்துக்களை பயன்படுத்துவதே தமிழை வளர்க்க நாம் செய்யும் முயற்சியாகும். வெறுமனே, தமிழர்களும், தமிழ்நாட்டிலும் ஒரு சில வெளிநாடுகளில் சிறிய அளவில் தமிழ் பேசி எழுதினாலும், குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டியது போதும்… வெளிஉலகில் அனைத்து நாடுகளிலும் பரவலாக உள்ள நமது தமிழர்கள் தங்களால் முடிந்த அளவு ஒரு சில தமிழ்பதங்கள், வார்த்தைகள், எழுத்துக்கள் என பயன்படுத்தி பிறரையும் பயன்படுத்துமாறு சூழ்நிலைகளை ஏற்படுத்துவது அவசியம்.

எனவே, அண்ணாச்சி சொன்னது போல், தமிழில் உள்ளவற்றை பிற தேசங்களிலும் கொடிகட்டிப் பறக்க பிற மதம் / மொழி / இனம் சார்ந்தவர்களை தமிழை எளிதாக பயன்படுத்தும் வகையில் நாம் வகை செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்தால் குறிப்பிட்ட காலத்திற்குள் தமிழ் எங்கும்… எப்போதும் நாம் விரும்பும் வகையில் வளர்ந்து விடும.

More than a Blog Aggregator

Thiratti.com Tamil Blog Aggregator

Thenkoodu

valaipookkal.com Tamil Blogs

http://www.tamil10.com/files/hotlink.php

Udanz

TAMIL .. HOW TO SPREAD OVER WORLD…

Advertisements

3 thoughts on “தமிழை ..வளர விட்டோமா ..? TAMIL

  1. தாய்மொழியைக் காப்பாற்றும் பொறுப்பு ஆட்சியாளர்களுக்கு உண்டு: கருணாநிதி.

    இனத்தின் அடையாளங்களை மறந்துவிடக் கூடாது- தினமணி ஆசிரியர்.

    தமிழர்களிடம் இருக்கும் ஒரே ஆயுதம் எழுத்துதான்: உதயச்சந்திரன்.

    நல்ல வேண்டுகோள்!!! இந்தியாவில் தாய் மொழியை மதிக்காத/ நேசிக்காத ஒரே இனம் தமிழினமாகத் தான் இருக்கின்றது- குறிப்பாக நம் இளைய தலைமுறை தமிழ் மக்கள். அவர்கள் இப்படி ஆனதிற்கு நாமே பொறுப்பு. குழந்தை யாருக்கு சொந்தம்
    என்ற போட்டியில் குழந்தை வஞ்சிக்கப்பட்டு/ கவனிக்கப்படாமல்/ வளராமல் இருக்கிறது என்பதை அனைவரும் உணரவேண்டும். சக்களத்திகள் சண்டை போட்டது போதும். தமிழ்க் குழந்தையை காப்பாற்றுங்கள்.ஊரு ரெண்டு பட்டதால் யாருக்கு லாபம்???? வாழ்க இன ஒற்றுமை!!!

  2. ஆங்கிலம் தெரிந்தால் வேலை எனும் நிலையை மாற்றி தமிழ் தெரிந்தால் வேலை என்று வருகிறதோ அன்று அயல்நாட்டாரும் தமிழ் படிக்க வந்து விடுவார்கள். மொழி வளர்ப்பு என்பதை தாண்டு தமிழ் ஒரு வேலைவாய்ப்பு மொழியாக வந்தால்தான் தமிழ் மேலும் செம்மையடையும் என்பது என் எண்ணம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s