33% ஒதுக்கீடு வெற்றி…

33% ஒதுக்கீடு வெற்றி…

(கெட்டதும்)

கடலுர் மற்றும் புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான மரங்கள் கீழே விழுந்து விட்டதால், அதற்கு பதிலாக மரக்கன்றுகளை இப்பொழுது நட்டு வளர்த்தாலும் அடுத்த தலைமுறை மக்களே அதை அனுபவிக்க இயலும் எனத் தெரிகிறது. 1917ல் இதேபோல் ஒரு புயலால் புதுச்சேரியில் உள்ள மரங்கள் அனைத்தும் விழுந்துவிட்டதை பாரதியார் தனது கவிதைகளில் பதிவு செய்திருப்பதாகவும் தகவல்.

(நல்லதும்)

பசுமைப் புரட்சி.. Green Revolution Success – Tree Cultivation Scheme

தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தில் மொத்த நிலத்தில் சுமார் 33 சதவீதம் பச்சைபசேல் என ஆக்கும் திட்டம் உருவாக்கப்பட்டு தனியார் நிலங்களில் மரம் வளர்க்கும் திட்டம் Tree Cultivation in Private Lands (TCPL) Scheme வெற்றி அடைந்து 15.5 லட்சம் மரக்கன்றுகள் கடந்த 5 வருடங்களில் நடப்பட்டுள்ளது.

2007ம் ஆணடு முதலில் 2.20 லட்சம் மரக்கன்றுகளை சுமார் 504 றெக்டேர் நிலத்திலும், அதற்கடுத்து 1.85 லட்சம் அடுத்த ஆண்டிலும், 3.20 லட்சம் 2009/2010ம் ஆண்டிலும், 4.25 லட்சம் மரக்கன்றுகள் சுமார் 850 றெக்டேர் நிலத்தில் நடப்பட்டுள்ளதாக மாவட்ட வன அலுவலர் தெரிவிக்கிறார்.

இலவசமாக வழங்கப்பட்ட இந்த மரக்கன்றுகளை பெற்று தங்களது நிலங்களில் நட்டு வளர்க்க அனைத்து தர மக்களும் ஆர்வம் காட்டியதாகவும், அதனை நன்கு வளர்க்க நிதி உதவியும் சில இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், இத்திட்டத்தின் மூலம் 4600 விவசாயிகள் பலடைந்ததாகவும், சுமார் 45 லட்சம் ரூபாய், ஊக்க ஊதியமாக இதன் மூலம் கிடைக்கப்பெற்றதாகவும் மேலும் தெரிவித்தார்.

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் வன இலாகா அலுவலர்கள் மரக்கன்று வளர்ப்புகளை நேரில் பார்வையிட்டு தேவையான உதவிகளைச் செய்து வருகின்றனர். டீக், சில்வர் ஓக், மலை வேம்பு, குமுள் போன்ற மரக்கன்றுகள் நன்கு வளர சுமார் 20 ஆண்டுகள் பிடிக்கும் எனத் தெரிகிறது.

ஜப்பானை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் உதவியுடன் தமிழக அரசு பயோ டைவர்சிட்டி மற்றும் கீரினிங் திட்டம் ( Tamilnadu Bio-diversity and Greening Project ) அரசு நிதி உதவியுடன் தமிழக முதல்வரின் 64வது பிறந்தநாள் அன்று தொடங்க இருப்பதாகவும், அதற்குத் தேவையான மரக்கன்றுகளை இப்போது தொடங்கி நர்சரிகளில் வளர்க்க ஆரம்பித்துள்ளதாகவும், இம்மரக்கன்றுகளை வழங்கி வளர்க்க, ஆர்வமுள்ள கல்வி நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் விரைவில் தேர்தெடுக்கப்பட உள்ளதாகவும், இது குறித்து பல விசாரணைகள் இ/மெயில் மற்றும் நேரிடையாகவும் அறிந்து கொள்வதாகவும் தெரியவருகிறது. (Thanks… I.E.,CBE)

More than a Blog Aggregator

Thiratti.com Tamil Blog Aggregator

Thenkoodu

valaipookkal.com Tamil Blogs

http://www.tamil10.com/files/hotlink.php

Udanz

Advertisements

2 thoughts on “33% ஒதுக்கீடு வெற்றி…

  1. என் ஊருக்கு கொஞ்சம் அருகே தான் நாமக்கல் இருக்கிறது. இது வரை நான் பார்த்த நகரங்களிலேயே மோசமான தூய்மையற்ற நகரம் சென்னை. தூய்மையான நகரம் நாமக்கல். அங்கே மரங்களை நட்டு பசுமை செய்தர்வர்களுக்கு மிக்க நன்றி.

  2. அவர்கள் கடலூர் சென்று மரம் நடும் பணியை செம்மையாக செய்வார்கள் என எதிர்ப்பார்க்கிறேன். 80% வீதத்திற்கும் அதிகமான மரங்கள் புயலுக்கு பின் இல்லை என நண்பர் ஒருவர் கூறினார். மக்களுக்கு விழிப்புணர்வு செய்யும் இது போன்ற கட்டுரைகளுக்கு நன்றி.

    நிறைய எழுதுங்கள்..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s