ஆல் இஸ் வெல் .. நண்பன்

ஆல் இஸ் வெல் .. நண்பன்
Nanban Film Review

நீண்ட நாளைக்குப் பிறகு ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு காலேஜ்மாம் என்ற ரீதியில் மிக நீளமான ஒரு தமிழ் படத்தை வழங்கியிருக்கிறார் சங்கர். ஆரம்பத்தில் ராகிங் நடப்பது அதிலும், பேண்டை அவிழ்த்து ஜட்டியுடன் சீனியர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது கொஞ்சம் முகம் சுளிக்க வைக்கிறது. அதே போன்று சீன்களே படம் முழுவதும் சில இடங்களில் வருகிறது.

விஜய் பாரிவள்ளல் என்ற மாணவனாக கல்லுரிக்குள் நுழைந்த நாள் முதலே அந்த கல்லுரியில் ஒவ்வொரு செயலுக்கும் இடக்கு மடக்கு பண்னுவதாகப் கல்லுரி முதல்வர் சத்யராஜ் நினைத்து பல இடைஞ்சல்களைத் தருகிறார். இவர் இரண்டு கைகளில் இரண்டு வேளைகளை ஒரே நேரத்தில் செய்பவர் மற்றும் தினம் 7 நிமிடம் மட்டும் சேவிங் செய்ய டைம் ஒதுக்குபவர்.

நினைத்த மாதிரியே ஜீவாவின் வறுமை குடும்பம், ஸ்ரீகாந்தின் நடுத்தரக்குடும்பம் மகனை ஒரு என்ஜினியராக்கியே தீர வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது… ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் முதலில் வருவதற்கு மாணவரிடையே நடைபெறும் போட்டி, சத்யன் மனப்பாடம் செய்து அனைத்துக்கும் முதலாக வருவது என நன்றாக செய்திருக்கிறார், பிறறைவிட அதிக மார்க்க எடுக்க வேண்டும் என்பதற்காக பரிட்சை அன்று முதல் நாள் இரவு அனைத்து ரூம் வழியாக ஒரு மாதிரிப் புத்தகங்களை தள்ளிவிட்டு கவனத்தை சிதைப்பது கவனத்தை கவர்கிறது. புராஜெக்ட் நீட்டிப்பு கிடைக்காததால் மண்டையைப் போடும் சக மாணவன். சத்யன் மூலமாக பிரின்ஸிபால் மற்றும் கல்வி அமைச்சரை கலாய்த்ததால் சத்யன் போடும் சபதம் போன்றவைகளும், பிரின்ஸிபாலின் இரண்டாவது பெண்னையே விஜய் டாவடிப்பது எனத் ஒன்றுஒன்று விட்டு காட்சிகள் தொடர்கிறது. பாரிவள்ளல் ஒரு மழைபுயல் நாளில் பிரின்ஸிபாலின் பெண்னுக்கு பிரசவம் பார்த்தல், வினாத்தாளை நண்பனுக்காக திருடி மாட்டிக் கொள்வது, சேவற்கொடி செந்தில் (ஜீவா) அப்பாவை பிழைக்க வைக்கிறது போன்றவை காட்சிகளில் ரசிக்கதக்கவை.

கல்லுரியை விட்டு பிரிந்தவுடன் விஜயின் தொடர்புஇல்லாமல் 10 ஆண்டுகள் இருப்பதும், சபதப்படி செப்டம்பர் 5 அன்று சத்யன் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்து நண்பர்கள் இருவரையும் கல்லுரியின் வாட்டர் டேங்க்க்கு வரவழைப்பது.. சுவாரசியம். மூவரும் சேர்ந்து விஜயைத் தேடுவதும், இடையில் பிரின்ஸியின் இரண்டாவது மகளுக்கு அமெரிக்கா மாப்பிள்ளையுடன் திருமணம் நடக்க இருப்பதை அறிந்து, பெண்ணையும் அள்ளிக்கொண்டு தனுஷ்கோடிக்கு பறப்பதும், இடையில் பாரிவள்ளல் என்பவர் விஜய் அல்ல என குட்டி பிளாஷ்பேக் வேறு… அப்பாடா… காரின் வேகத்திலேயே நமக்கும் விஜய் என்ன ஆனார் என அறிந்து கொள்ள ஆர்வம் தொற்றிக்கொள்கிறது.

கடைசியில் விஜய் ஆசைப்பட்டது மாதிரியே சும்மா மனப்பாடம் செய்து படிப்பதைத் விடுத்து அனைத்தையும் செய்முறை மற்றும் அறிவைப் பயன்படுத்தி உருவாக்கி தெரிந்து கொள்ளவேண்டும் என்ற தாரக மந்திரத்தை உருவாக்கி ஒரு பள்ளியின் ஆசிரியர் கம் உலகம் போற்றும் குறிப்பாக சத்யன் தேடும் நெ.1 சயின்டிஸ்ட் ஆகவும், சத்யராஜின் இரண்டாவது மகளை கைப்பிடிப்பதும் நண்பர்கள் அனைவரும் இணைவதும் 100 சதவீதம்… தமிழுக்கு புதிய வரவுதான். இடையில் மில்லிமீட்டர் என்ற கல்லுரி எடுபிடி.. சீனியர் மாணவர்களுக்கு படிப்பினை ஏற்படுத்துவது… பிரின்ஸிபாலிடம் (சத்யராஜ்) முடிந்தவரை சாப்ட்டாக எதிர்வாதம் செய்வது, ஆல் இஸ் வெல் என்று எப்பொழுதும் சொன்னால் அனைத்தும் நன்றாக நடக்கும் என்று அனைவரையும் சொல்லவைப்பது குறிப்பிடத்தக்கது.

நண்பன்… ஆல் இஸ் வெல்.
Nanban .. All is Well

More than a Blog Aggregator

Thiratti.com Tamil Blog Aggregator

Thenkoodu

valaipookkal.com Tamil Blogs

http://www.tamil10.com/files/hotlink.php

Udanz

Advertisements

6 thoughts on “ஆல் இஸ் வெல் .. நண்பன்

  1. ஆள் மாறாட்டம் செய்து, வேறொருத்தனுக்காக படித்து பட்டம் வாங்கி பிராடு செய்வது “ஆல் ஈஸ் வெல்” அப்படீங்கிரீகளா நண்பரே?

    • சினிமாவை ரொம்ப வாழ்க்கைக்கு ஒத்ததாக நான் கருதவில்லை… பல படங்களில் வில்லன்களை வெட்டி வீழ்த்துவது சமீபகாலமாக அதிகமாகிவிட்டது… அதை நாம் ஒரு பிராக்டிக்கலாக எடுத்துக் கொள்வது இல்லையா.. உண்மையில் படத்தில் வருவது போல் சம்பவம் எங்கேயினும் நடந்திருக்கலாம்.?

      வருகைக்கும் இடுகைக்கும் நன்றி
      சிவபார்க்கவி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s