ஆறாவது ஆணிடம் ஆசைப்பட்ட திரௌபதை…

ஆறாவது ஆணிடம் ஆசைப்பட்ட திரௌபதை…
DROWPATHI LIKES THE 6TH MEN … MAHABHARAT

அந்த ஆறாவது ஆள் யார்? கர்ணன் தான்.

முதன் முதலில், சுயம்வரம் நடந்த சபையில் வில்லை வளைத்துக் குறியை அடிக்க எழுந்தவன் கர்ணன்தான். அவனைப் பார்த்ததுமே இவன்தான் எனது புருசன் என்று திரப்பதி மனசில் துர்மானமாகிவிட்டது. அவன் அரச குமாரனில்லை தேரோட்டி மகன் என்றிருந்ததால் அவனுக்கு வில்லைத்தொட அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் கர்ணனே அவள் மனசில் இருந்தான் கடைசிவரையிலும், அர்ச்சுனன் எழுந்து பந்தயத்தில் வென்று பாஞ்சாலியைக் கைப்பிடித்து அழைத்து வந்தான் தாய் குந்தியிடம். அம்மா ஒரு கனி கொண்டு வந்திருக்கிறேன் என்றதும் அதை அய்வருமே சேர்ந்து உண்டு அனுபவியுங்கள் என்று சொல்லிவிட்டாள். மாதா சொன்னது மகேசன் சொன்னதாக ஏற்று அய்வருமே அவளை மணந்து கொண்டார்கள். இது திரவ்பதிக்கு இணக்கமில்லை. அதனால் அவள் ஒரு தந்திரம் செய்தாள்.

அரசு குமாரர்கள் அணியும் ஒரு ஜோடு செருப்புகளை யாருக்கும் தெரியாமல் கொண்டு வரச் செய்து வைத்துக் கொண்டாள். விளக்கு வைத்ததும் தனது அறை வாசல்படியருகே அந்தச் செருப்புகளை வைத்துவிடுவாள். அய்வரில் யார் வந்தாலும் மற்றவரில் யாரோ ஒருவர் உள்ளே இருக்கிறார்கள் என்று திரும்பி விடுவார்கள். விடிகாலைப் பொழுதுதில் அந்தச் செருப்புகளை எடுத்து யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்து விடுவாள். இப்படியே தினமும் செய்தாள் இது சரியாக வராது என்று அறிந்து கொஞ்ச நாளைக்கெல்லாம் பஞ்சபாண்டவர்கள் ஆளுக்கொரு பெண்னைப் பார்த்துக் கலியாணம் செய்து கொண்டார்கள். அந்தப் பெண்களிடம் பிறந்தவர்களே உப பாண்டவர்கள் என்று யுத்தம் முடியும் தறுவாயில் பேசப்படுகிறவர்கள்.

கர்ணனையே மனசில் கொண்ட திரப்பதி கடைசிவரை கன்னி கழியாதவளாக வாழ்ந்து தெய்வமானதாகக் கதை.

More than a Blog Aggregator

Thiratti.com Tamil Blog Aggregator

Thenkoodu

16 thoughts on “ஆறாவது ஆணிடம் ஆசைப்பட்ட திரௌபதை…

 1. I think Your Whole Concept is Wrong. or CAN U give ME proof for it. Chopra’s MAHABHARATAM (Taken From Authentic Sources says tat Draupathi only stopped KARNAN and she gave birth to 5 Children for Each Pandavas (they fought in the war in died)) BOGOUS CONCEPT……… So u Belong to PERIYAR CASTE .

  This is like MASALA KisuKisu which our Papers Publish…. Bad thoughts…..

  Prove Your Point n I will suerly ACCEPT it.

 2. மகாபாரதக் கதையிலோ அல்லது வேறும் ஏதும் புராணத்திலோ, வரலாற்றுக் கதைகளிலோ இது இல்லை. முழுக்க முழுக்க ஒரு தனிநபரின் மூளையில் பிறந்த வெற்றுக் கற்பனை. சரியா?

  கற்பனைகள் எப்போதுமே கற்பனைகள்தான். அவை வரலாறு ஆக முடியாது.

 3. இது மகா அநியாயம் என்று கூவ வரவில்லை. அற்புதமான கதையமைப்பைக் கொண்டவை மகாபாரதமும், இராமயணமும். அதில் இது போல எண்ணற்ற கதைகளை கூற முடியும்.

  இறுதிவரை கர்ணனையே நினைத்து வாழ்ந்து வந்தாள் என்பது ஒன்றும் ஆபாசமாக தோன்றவில்லை,. பெரும் காதல்கதை போல உள்ளது.

 4. இது மிக தவறான விளக்கம் ..பெண்களிடம் சஞ்சலம் இருக்கும் என்பதை சொல்ல வந்தவர்கள் திரித்து விட்ட கட்டு கதை ..மகாபாரதம் ஒரு பெரிய நாவல் ..நம் இந்துக்கள் இதை கதையாக பார்ப்பது கிடையாது ..இது நம்பிக்கை ..சரி இனி பாஞ்சாலியின் கதைக்கு வருவோம் ..அவள் ..பணடவர்கள் வனவாசம் சென்ற போது ஒரு தாய் போல பணடவர்களிடம் அன்பு செலுத்தினாள் ..அவள் பாண்டவர்கள் மூலம் 5 உபட பாண்டவர்களை பெற்றாள் ..இவர்கள் அஸ்வத்தமனால் நயவஞ்சகமாக கொல்லபட்டார்கள் ..முழுதும் படியுங்கள் ..அரை குறையாக படித்துவிட்டு இந்து மதத்தை ..அதன் ஆணி வேரான பாரதத்தை இழிவு படுத்தி பேச முற்பட வேண்டாம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s