செம உறாட் மச்சி.

செம உறாட் மச்சி.
Hot hit friends..

பதிவுலக அன்பர்களே, நண்பர்கள், நண்பிகளே, உடன்பிறவா சொந்தங்களே, பார்வையாளர்களே, பதிப்பாளர்களே, பின்னுட்டம் இடுபவர்களே, உறிட் அடிப்பவர்களே மற்றும் ஏனைய பண்பாளர்களே அனைவருக்கும் வணக்கம்.

இன்றுடன் சுமார் 90 நாட்கள் இருக்கும், இந்த பதிவு பட்டறை ஆரம்பித்து, அப்பப்பா, உலகெங்கும் உள்ள தமிழ் உள்ளங்கள் 67 நாடுகளில் இருந்து 11000 உறிட்ஸ் அடித்து, இன்றைய எனது 50வது பதிவுகள் வரை ஆதரவளித்து வரும் தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் நன்றி, வணக்கம்.

ஆயிரக்கணக்கான பதிவுகள் அதிலும் தமிழ் பதிவுகள் ஆங்காங்கே கட்டவிழ்த்த காளை போல் அங்கும் இங்கும் காணக் கிடைக்கிறது. இருப்பினும், ஒரு சிலதை மட்டும் தமிழன் தன் நுண்ணறிவால் அறிந்து அதை மட்டும் படித்து சிலாகிப்பது தனித்துவம் வாய்ந்தது.

டாப் பதிவுகள்.
…………..

வாடியா, இந்திய செக்ஸ் வில்லேஜ்.. பின்னனி
கேரளவை அழகுப்படுத்த செக்ஸ் ஒர்க்கர்கள்….
இந்தியா பெயருக்கே ஆப்பு வைத்த கேரளா ….
கல்லு ரி மாணவிகளா இப்படி…
புடவை கட்டும் பெண்களுக்கு ….பிரச்சினை வந்துடுச்சு !?

More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu

ஆங்கிலத்தை விட தமிழ்தான் பெஸ்ட்….

ஆங்கிலத்தை விட தமிழ்தான் பெஸ்ட்….
Tamil is Better than English

எண்னும் எழுத்தும் தமிழ் எனத்தகும், எண்னென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கும், என்ற திருக்குறளின் வாயிலாக எண்ணையும், எழுத்தையும் கண்ணாக போற்றி இருப்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை தமிழ் கணிதத்தை படிப்பவர்கள் உணர்ந்திட முடியும்.

உலக மொழிகளில் கிரேக்கம்/லத்தீன், உறீப்ரு, தமிழ், சமஸ்கிருதம், சீனா உள்ளிட்ட 10க்கும் குறைவான மொழிகளே செம்மொழி அந்தஸ்தை பெற்றுள்ளன. கல்தோண்றி மண்தோன்றா காலத்தில் தோன்றி பல மொழிகளுக்கு தாயாக இருந்து வரும் தமிழ்மொழியில் எண்னுக்கு தனி இலக்கணம் அளிக்கப்பட்டுள்ளது. நமது சிந்தனையாளர்கள் உலக தொலைநோக்கு திட்டங்களுக்குகெல்லாம் அடித்தளம் போன்றவர்கள், முதன்முதலில் கணக்கிடும் முறையை உலகிற்கு கற்றுத்தந்த இந்தியர்களுக்கு நாம் என்றும் கடமைப்பட்டுள்ளோம். இந்தியர்கள் பூஜ்ஜியத்தை கண்டறிந்திருக்காவிட்டால் அறிவியலும், விஞ்ஞான வளர்ச்சியும் பலபரிமாணங்களை எட்டி இருக்க முடியாது என்று பலமேலைநாட்டவர்கள் தெரிவிக்கிறார்கள்.

நியூட்டன், தாலமி, கலிலியோ, கெப்ளர் போன்ற மேலை நாட்டு அறிவியல் அறிஞர்களின் கோட்பாடுகள் தோன்றுவதற்கு முன்பாக ஆயிரம் ஆண்டுக்கு முன்பே கோள்களின் இயக்கத்தையும், அதன் தொலைவையும் வான சாஸ்திர நிபுணர் ஆரியப்பட்டர் தனது ஆரியப்பட்டீயம் புத்தகத்தைல் எழுதி உலக விஞ்ஞானத்திற்கு அடித்தளம் அமைத்துள்ளனர்.

மேற்கண்ட பட்டியலில் கண்டபடி ஒன்று முதல் மகாயுகம் எனப்படும் எண்களுக்கு ஈடான ஆங்கில சொல்லே இல்லை என்பதே, தமிழ்மொழியானது, ஆங்கிலத்தைவிட பெஸ்ட் என்பதற்கு சான்று.

.. தினத்தந்தி 26.2.12 செய்திகளுடன் சிவபார்க்கவி

More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu

காதலில் சொதப்புவது எப்படி… விமர்சனம்

காதலில் சொதப்புவது எப்படி… விமர்சனம்
KADALIL SOTHAPUVATHU EPPADI TAMIL FILM REVIEW

கல்வி பயிலும் இடத்தில் காதல் எனப்படும் இனக்கவர்ச்சியை தற்காலக் கல்லுரி மாணவ மாணவிகள் எவ்வளவு எளிதாகவும், ரொம்ப மெட்சூரிட்டியாகவும் திறம்படக் கையாள்கிறார்கள் என்பதை சீனுக்கு சீன் கதைசொல்லும் உத்தியாக மிக எளிமையாக படம் பிடித்திருக்கிறார்கள்.

படத்தில் பல்வேறு ஜோடிகளும், அவர்களுக்கிடையே உள்ள பிரச்சினைகளும் தான் படம் நெடுக்க..

1. சித்தார்த்..அமலாபால் ஜோடி சேர்வதும், பிரிவதும் பிறகு
சேர்வதும் தான் முழுக்கதை

2. சுரேஷ் (பழைய 80ஸ் சுரேஷ்தாங்க) மற்றும் ஒரு துணை நடிகை ஜோடியும், (அமலாபாலின் அப்பா அம்மா) விவாகரத்து வரைக்கும் போய், பிறகு கமலின் வளையோசை பாடலை பாடி மீண்டும் சேர்வது ஜோர்.

3. சித்தார்த்தின் எளிமையான நடவடிக்கை, பெண்களின்
மனநிலை, மொக்கை போடும் நண்பர்கள், கூட இருந்தே பிரச்சினையை உருவாக்கும் நண்பர்கள், என 10 பேர் கூட்டமாக சொதப்பு சொதப்பு சொதப்பி படத்தை முடிக்கிறார்கள். படத்தில் யாருக்கும் மேக்கப் என்ற பேச்சுக்கோ, காஸ்ட்யூம் ரிச் என்ற பேச்சுக்கே இடமில்லை சாதாரண பொட்டிக்கில் கிடைக்கும் துணிகளை அனைவரும் அணிந்து வருகிறார்கள்.
சில இடங்களில் லிப்ஸ்டிக் இல்லாத அமலாபால், மற்றும் பிற பெண்களை பார்க்க சகிக்கலை.

4. இருப்பினும், புதிய இயக்குநரின் யூடியுப் பிட்டை டெவலப் செய்து சிறப்பாகவே செய்திருப்பதாகப் படுகிறது.

மொபைலில் பேசும்போது எதிர்முனை கோபத்தை கிளறினால் படீர் என தேங்காய் உடைப்பது போல் மொபைலை உடைப்பது, மொபைலை மறந்து வீட்டில் விட்டு நாள் முழுக்க உறவினர் வீட்டில் ஏதோ இறந்த வீட்டிற்கு வந்தது போலும் மீண்டும் வீட்டிற்கு மாலை வந்தவுடம் பறந்து போய் மொபைலை எடுப்பதும், நாமெல்லாம் மொபைல் இல்லாத உலகை சிந்திக்க கூட முடியாது போலிருக்கே..

நீதி. இந்த தலைமுறை பசங்க பொண்னுங்களுக்கு காதல் என்பது அல்வா சாப்பிட்டு போவது போலவும், மறுநாள் அல்வா பிடிக்காமல் பால்கோவாவிற்கு மாறிக்கொள்வது போலவும் உள்ளது. இந்நிலைத் தொடருமானால், எதிர்கால சந்ததியினர் மேல்நாடுகளைப் போலவே அப்பா, அம்மா,குடும்பம் என்பது போன்ற அமைப்புகளே சிதைந்து விடும் அபாயம் உள்ளது.

More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz

இந்தியா பெயருக்கே ஆப்பு வைத்த கேரளா ….

இந்தியா பெயருக்கே ஆப்பு வைத்த கேரளா ….
Made in Kerla …. not in India
இந்தியா பல்வேறு மாநிலம், மொழிகள் பேசப்பட்டு வந்தாலும், இந்தியா என்ற மந்திரச் சொல் கேட்டால் அனைவரும் கட்டுண்டு தங்களுக்குள்ளே உள்ளே உள்ள பேதங்களை மறந்து, ஒற்றுமை ஓங்க பாடுபடுவது நிஜம்.

அப்படியிருக்கையில், இங்கே பாருங்களேன் ஒரு அதிகப் பிரசங்கித்தனத்தை… ஏற்கனவே, தமிழ்நாட்டுக்கு வாழ்வாதாரமான முல்லைப்பெரியாரை இடித்து 667 கோடியில் புதிய அணை கட்டத் திட்டம் தீவிரமாக தயார் செய்து வரும் வேளையில்….

கேரளாவில் தயாராகும் தேங்காய் நார் அலங்கார பொருட்களுக்கு வெளிநாடுகளில் விற்பனை செய்ய தொழில் அமைப்பு ஒன்றுடன் இணைந்து அரசு அனைத்து பொருட்களையும், மேட் இன் கேரளா (made in kerala)ன்னு பெயர் வைக்கப் போறாங்களாம். இதனால், கேரளாவிற்கு அமோக விற்பனையாகும் தெரிவிக்கிறாங்க…. இதுல வேற, இந்த பொருட்கள் எல்லாம் கீரின், கலப்படம் இல்லாதது, சுற்றுச்சூழலுக்கு ஏற்றது, சுகாதாரமானது, தங்கமானது, வெள்ளியானதுன்னு ஏகப்பட்ட பில்டப்.. இதெல்லாம் மார்ச் 10ல் நடைபெறும் மாநாட்டில் இருந்து மேட் இன் கேரளா வெளியாகப் போகுந்துங்க…

அதுசரி, கேரளா இந்தியாக்குள்ளே தானே இருக்கிறது.. இப்படியே போனால், உலக அரங்கில் மேட் இன் சிவகாசி, மேட் இன் கொருக்குப்பேட்டை, மேட் இன் புதுப்பட்டி ன்னு ஆரம்பிச்சிருவாங்களோ….
– டைம்ஸ் ஆப் இந்தியா செய்திகளுடன் சிவபார்க்கவி

More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz

வாடியா, இந்திய செக்ஸ் வில்லேஜ்.. பின்னனி

வாடியா, இந்திய செக்ஸ் வில்லேஜ்.. பின்னனி
sex village wadia, gujarat

இந்தியா சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகளில் முதல் முறையாக குஜராத் மாநிலம் , வாடியா கிராமம், பாலன்பூர் அருகில் (விபச்சாரத்திற்கு பெயர் போனது) தற்சமயம் ஒரு சமூக மாற்றத்திற்காக தயாராக உள்ளது. அதாவது, இளைய தலைமுறையினரைச் சேர்ந்த பெண்களுக்கு ஒரு மிகப்பெரிய மாஸ் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. வழக்கமாக, இளம்பெண்கள் அனைவரும், பருவம் வந்தவுடன் விபச்சாரத்தில் தள்ளப்பட்டு வந்தனர்.

கடந்த மார்ச் 11,2011 அன்று 15 பெண்களுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு, சுமார் 1500 விபச்சாரிகள் திருமண விழாவில் கலந்து கொள்ளவும், கிராமத்தார்களின் உதவியுடன் புரோக்கர்களின் எதிர்ப்புகளுடனும் நடந்தேறியது. இளம் பெண்களும், முதல் முறையாக தொழிலை மேற்கொள்பவர்களுக்கும் நல்ல விலைக் கிடைத்தது என்றும், இதனை இழக்க விரும்பாத புரோக்கர்கள் நிகழ்ச்சி நடத்துபவர்களை மிரட்டியதும், போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விச்சார்ட்டி ஜாட்டி சமுதி சமார்தான் மன்ச் நிறுவனத்தைத் சேர்ந்த சர்தா பார்ட்டி அவர்கள் கடந்த மூன்று வருடங்களாக விபாச்சாரிகளை சந்தித்து, மனசு மாற்றி அவர்களின் வாரிசுகளை விபச்சாரத்தில் தள்ளாமல் காப்பாற்ற வழிபிறக்க செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான பெண்கள் சாரனிய கம்யூனிட்டியை சேர்ந்தவர்களாகவும், அவர்களின் அப்பா பெயர் தெரியமல் இருப்பதால் ராஜஸ்தான் மற்றம் சௌராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்கள் இப்பெண்களை மணக்க பெரும் தயக்கம் காண்பிப்பதாகவும், மணமகன்களை சமாதானப்படுத்தி இந்த இனத்திற்கு செய்யும் மிகப்பெரும் உதவி எனக்கூறி சம்மதிக்க வைத்ததாகவும் இதனால் 750 குடும்பங்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் 100 குடும்பங்கள் விபச்சாரத்தை பிண்ணனியாக கொண்டவையாகவும், இதன் மூலம் படிப்படியாக விபச்சாரம் குறைந்து சமூக மாற்றம் ஏற்படும் எனவும் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள். இக்குடும்பங்களை சேர்ந்த ஆண்கள் மாமா வேலைசெய்தே பிழைப்பு ஓட்டுவதாகவும், அவர்களுக்கும் தேவைப்படும் உதவிகள் செய்து வேறு வேலை செய்ய உதவப்படும் எனத் தெரிவிக்கிறார்.

… டைம்ஸ்ஆப்இந்தியா 18.2.12 செய்திகளுடன் சிவபார்க்கவி
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz

திருநங்கை (அலி) களை இதுக்காகவாவது பயன்படுத்து…?

அலிகளை இதுக்காகவாவது பயன்படுத்து…?
Ali – Third Gender – Social Reforms..

சமீபத்தில் சத்தம் இல்லாமல் சமூகபுரட்சி ஒன்று நடைபெற்று வருகிறது. பாலினச் சிறுபான்மையினர் எனப்படும் அரவானிகள், பெண் பாலியல் தொழிலாளர்கள் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்கும் ஒரு முயற்சியாக, திருச்சியில் அழகுக் கலைப்பயிற்சி சனிக்கிழமை அளிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் முதல் முறையாக நடைபெற்ற இந்தப் பயிற்சியை சேப் அமைப்பு நடத்தியது. திரு. ஜெயஸ்ரீ, ஐ.ஏ.எஸ்.,மாவட்ட ஆட்சியரின் உரையில், வாழ்க்கையில் முன்னேற இதை ஓர் அடித்ததளமாகக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். சென்னையைச் சேர்ந்த ஜாஸ்மின் காஸ்மெடிக்ஸ் என்ற நிறுவனத்தின் பயிற்சியாளர்கள் செல்வேந்திரன், தாகிர் ஆகியோர் இந்தப் பயிற்சியை அளித்தனர். பயிற்சியில் 16 அராவாணிகள், 17 ஓரினச் சேர்க்கையாளர்கள், 7 பெண் பாலியல் தொழிலாளர்கள் என மொத்தம் 40 பேர் பங்கேற்றனர்.

ஒரு நாள் முழுவதும் நடைபெற்ற பயிற்சியின் நிறைவில் இவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்தப் பயிற்சி குறித்து சேப் அமைப்பின் தலைவி பி. கஜோல் கூறியது.

ஒரு நாளில் ஒரு பயிற்சியை அளித்து அதில் பங்கேற்ற 40 பேரும் வாழ்வில் முன்னேற்றம் அடைந்து விடுவார்கள் என்றுகூட நான் சொல்ல மாட்டேன், இது எங்களைப் போன்ற சமூகத்தில் ஒரு மாற்றத்திற்கான வாய்ப்பே. இதில் பலர் தங்கள் வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொண்டு, இது பற்றிய தகவல்கள் பரவும் பொழுது சமூகத்தில் அடுத்தடுத்தப் பயிற்சிகளில் மற்றவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பர் என நம்புகிறேன். அரசுத் தரப்பில் இருந்தும் அழகு நிலையங்களைத் தொடங்க வங்கிக் கடனுதவி அளிக்கப்படுகிறது. பயன்படுத்திக் கொள்வது நம்கையில் தான் இருக்கிறது என்றார் கஜோல்.

… நன்றி, திணமணி பிப்.11

More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
http://www.tamil10.com/files/hotlink.php
Udanz

தோணி .. திரைப்பட விமர்சனம்.

தோணி .. திரைப்பட விமர்சனம்.
TONI – TAMIL FILM REVIEW

நீண்ட நாளைக்குப்பிறகு ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தை தற்காலத்தில் படும் கஷ்டங்களை, அதுவும், லஞ்சம் வாங்ககாத அரசு ஊழியரின் குடும்பத்தில், ஒரு பெண் குழந்தை, ஒரு ஆண் குழந்தையை வளர்க்க (அம்மா வேறு இறந்து விட்டார்) அப்பா பிரகாஷ்ராஜ் படும் கஷ்டங்களையும், தற்காலப் பள்ளிக் கூடங்கள் பசங்களைப் படி படின்னு போட்டு உயிரெடுப்பதையும், அவர்கள் உண்மையான ஆசைப்படும் துறையில் ஜொலிக்க படிப்பு ஒரு தடையாக இருப்பதையும் ரொம்ப க்யூட்டாக காண்பித்திருக்கிறார்கள்.

அருமையான காலனி வீடுகள் அக்கம்பக்கம் நண்பர்கள், ஒரு சஸ்பெக்ட் செய்யப்படும் பெண். புயலுக்கு முந்திய பாண்டிச்சேரியின் பூங்காங்களில் படமெடுக்கப்பட்டது.. ( எவ்வளவு இழப்பு சே…), ஊறுகாய் விற்று சைடில் சம்பாதிக்கும் பிரகாஷ்ராஜ், சீப் அன்ட் பெஸ்ட் பொருட்களை நாடுவதும், பெஸ்ட் ஆக இருக்கும் பொருள் சீப்பாக இருக்காது, சீப்பாக இருக்கும் பொருள் பெஸ்ட் ஆக இருக்காது என நண்பர் கூறுவது டச்சிங். மேனாஜராக வரும் ஆந்திர சிரிப்பு நடிகரின் நடிப்பும் அருமை.

0. பிரகாஷ்ராஜ் மற்றும் அவர்களின் நண்பர்களின் கச்சேரி, மொட்டைமாடியில் (டிரிங்ஸ் பார்ட்டிதான்) எதர்த்தமான எடுத்துக்காட்டு
1. கந்துவட்டிக்குக் கொடுக்கும் வில்லன், பிறகு மனசு மாறி உதவிகள் செய்வது நன்றாயிருக்கு ( நிஜத்தில் இப்படி நடக்குமா?)
2. இளையராஜாவின் இசை ஆங்காங்கே தாலாட்டுப் பாடுது, ஒரு பாடலையும் பாடியிருக்கிறார்.
3. பிரபுதேவாவும் ஒரு பாடலுடன் ஆடலையும் போட்டிருக்கிறார்.
4. போட்டியான உலகில், நாம் எதார்த்தமான வாழ்க்கையை விட்டு பொய்யான, ஒரு சிலருக்கு ஒத்துவராத வாழ்க்கையை வாழ்ந்து வருவதை நன்றாக பதிவு செய்திருக்கிறார்கள்.
5. பையன் கிரிக்கெட்டில் மிக ஆர்வம், தந்தையும் பையனுக்கு தேவையான எல்லா உதவியும் செய்கிறார். நாசர் கிரிக்கெட் கோச், பையனை பெரிய ஆளாக உருவாக்க உதவுகிறார். ஆனால், பள்ளிக்கூடத்தில் படிப்பில் மிக சுமார் ஆகையால் வெளியேற்ற அறிவுறுத்தப் படுகிறார். அதைக்கேட்டு பொங்கி எழுந்து பையனை அடிக்கப் போய், மண்டையில் பலமாக அடிபட்டு பையன் கோமாவிற்கு செல்கிறார்… அதன் பிறகு நீயா, நானா டிவி புரோகிராம் மூலம் வெளி உலகிற்கு தான் அடைந்த கஷ்டங்களையும், பள்ளிக் கூடத்தின் டார்ச்சரையும் வெளிப்படுத்துகிறார். அதனால், பலருடைய அனுதாபத்தையும், உதவிகளையும் பெறுகிறார். பையன் குணமடைய ஒரு சிறப்பு டாக்டர் உதவ இருக்கும் நேரத்தில், கேட்ட லோன் தொகை கைக்கு வராமலும், வேலையில் சஸ்பெண்ட் ஆகக்கூடிய சூழ்நிலையில், முதலமைச்சரின் கூட்டத்தில் எதிர்பாராதவிதமாக கவனத்தை கவர்ந்து, உதவிகளைப் பெற்று பையனை மீண்டும் கிரிக்கெட் பிளேயராக உருவாக்குவதே.. முழுக்கதை.

பசங்களைப் படிங்க.. படிங்கன்னு ரொம்ப டார்ச்சர் செய்யும் பெற்றோர் மற்றும் பள்ளிக்கூடங்களுக்கு இது ஒரு எச்சரிக்கை.

More than a Blog Aggregator

Thiratti.com Tamil Blog Aggregator

Thenkoodu

valaipookkal.com Tamil Blogs

http://www.tamil10.com/files/hotlink.php

Udanz

இது ஒரு இரத்தக்கதை….

இது ஒரு இரத்தக்கதை….
Blood Donation



சில வாரங்களுக்கு முன் நண்பர் ஒருவர், பின்னுட்டம் மூலம், இரத்தத்தானம் வழங்வது குறித்து பதிவுகள் இட அன்புடன் கோரியிருந்தார். ரத்த தானம் பெறுவதற்க்கும் கொடுப்பதற்கும் அணுகவும் http://www.shareblood.in அன்னாரது ஆசையை நிறைவேற்ற இந்த கதையை திணமணிக்கதிரில் இருந்து அப்படியே சுடச்சுட… சொந்தக்கதை… இதுவரை கட்டுரையாளரும், 2 முறை இரத்தத்தானம் வழங்கியிருக்கிறார்…

நன்றி.. திணமணிக்கதிர்

More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu

தன்மதிப்பு தெரியாமலா வாழ்கிறார்களா ? தமிழர்கள்

தன்மதிப்பு தெரியாமலா வாழ்கிறார்கள்.. தமிழர்கள்
TAMIL – 3
அண்மையில் முத்தமிழ்சங்க விழாவில் நடைபெற்ற கருத்தரங்கத்தின் போது இந்த விவாதம் நடைபெற்ற விவாதத்தின் வழியாக திரு. குமரி அனந்தன் அவர்களின் வாய்மொழியாக தன்மதிப்பு தெரியமால் வாழ்கிறான், தமிழன் என போற்றுகிறரா, திட்டுகிறாரா தெரியவில்லை…

ஒரு பிச்சைக்காரன் ஒருவன் ஒரே இடத்தில் நின்று கொண்டு பிச்சையெடுத்துக் கொண்டிருந்தான், அவன் இறந்ததும், அவன் நின்ற இடத்தில் வைரப் புதையல் ஒன்று கிடைத்தது. அதுபோலத்தான் தமிழன், தன்னுடைய மதிப்பு என்ன என்று தெரியாமல் தன்னுடைய மொழியின் மதிப்பு தெரியமால் இருந்து கொண்டிருக்கிறான். வெளிநாட்டினர் யாரேனும் சொன்னால்தான் தெரிகிறது.

உயிர்எழுத்து, மெய் எழுத்து ஆகியவை உலகிலுள்ள 6050 மொழிகளில் தமிழைத் தவிர வெறெந்த மொழிகளிலும் இல்லை. உலகின் சிறந்த மொழிகளாகக் கருதப்படும் 17 மொழிகளில் தமிழும் ஒன்று. தமிழுக்கு மட்டும்தான் 103 அடைமொழிகள் உள்ளன. இயல் தமிழ் இயல்பாக வரக்கூடியது. இசைத் தமிழில் தாலாட்டையே மறந்துவிட்டோம். கடந்த 60 ஆண்டுகளாக திரைப்படம் தமிழகத்தைச் சூழ்ந்து இருக்கிறது.

அம்மாவை மம்மி என்கிறோம், மம்மி என்றால் எகிப்தில் இறந்தவர்களை பாடம் செய்து வைத்திருக்கும் முறை, பெற்றவளை செத்தவளாக அழைத்து வருகிறோம்.
திருவண்ணாமலையில் ரமணருக்கும் முன்பாக சேஷாத்திரி என்பவர் தமிழ்ப்பணி செய்து வந்தார், ராமானுஜம் இந்த உலகப் பெருமையை மீட்டுத் தந்த தமிழர், உலகக் கணித மேதையாகப் பாராட்டப்படுகிறார். கோயில் பிரகாரங்கள் நல்ல உடற்பயிற்சிக்களம். பிறப்பு இறப்பு முதல் இறப்பு வரை தமிழின் பெருமை வெளிப்படுகிறது.

எப்படியோ, நாமே தமிழைப் பற்றி பேசிக்கொண்டிருக்காமல், உலகளவில் முக்கிய மொழியாக உருவாக்க ஏதோ சிறிய முயற்சியை ஒவ்வொருவரும் செய்வோம் தானே….
.. திணமணி10/2/12 செய்திகளுடன் சிவபார்க்கவி

More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu

செக்ஸி அப்பிடின்னா…

செக்ஸி அப்பிடின்னா…
what about Sexy….
எச்சரிக்கை.. இது ஒரு மொக்கைப் பதிவு.. அவசர வேலை உள்ளவர்கள் உடனே திரும்பிவிடவும்.

ஒரு இளம் பெண், செக்ஸின்னா என்னா என்பதைத் தெரிந்து கொள்ள மண்டையை பிய்த்து கொண்டதை விவரிக்கிறார் கட்டுரையாளர். இனிய மாலை நேரத்தில், ஆண்களும், பெண்களும் இணைந்து தனியான அபார்ட்மெண்ட் ஒன்றில், இரவு நேர பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளனர். அப்போது, ஒருவர், நமது பார்ட்டியைப் பார்த்து, உங்களுடைய காதணி மிகவும் செக்ஸியாக உள்ளது எனப் பாராட்டுகிறார். இன்னொருவரே, அன்பே, இனிமேல் இந்த காதணியை அணியாதே ரொம்ப கேவலமாக இருக்கிறது எனவும், மூன்றாமர் தண்ணியடித்துக் கொண்டே லுக் விட்டு, காதணியிலே என்ன இருக்கிறது. அதை அணிந்து கொண்டிருக்கும் பெண்ணிடம் தான் செக்ஸி இருக்கிறது. இதை அனைத்தையும் கேட்டுக் கொண்டே, செக்ஸின்னா என்ன? அறிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறார்.

முதலாமர் சொன்ன விஷயம் உண்மையில் விலைமதிக்க தக்கது. (பாராட்டினாருல்ல..) , அதே சமயம், இவரது உறவினர் ஒருவர் முன்பொருசமயம் இந்த காதில் ஓட்டைப் போட்டு காதணி அணிவது மிகவும் அசிங்கமான செயல் எனத் தெரிவித்ததும் நினைவில் வந்தது. அதே, மூக்கு மேல் அணியும் நகையைப் பார்த்து ஒருசிலர் செக்ஸியாக இருக்கிறது என்று கூறுவது மிகவும் ஆச்சரியமூட்டக்கூடியதாக இருந்தது. இதிலிருந்து ஒவ்வொரு பையனுக்கும் செக்ஸி என்பது வித்தியாசமான பார்வை, ரசனையையுடையது என்பது தெளிவாகியது.

அதே போல், இரவு உடைகளும் மிகவும் செக்ஸியாக உள்ளதாக ஒருவரும், மிகவும் சிம்பிள் ஆக இருக்கிறது என ஒருவரும் தெரிவித்ததாகவும் தெரிகிறது. மூன்று வருடத்திற்கு முன் மிகவும் செக்ஸியாக தோற்றமளித்த ஒருவர், தற்சமயம் வெறுக்கத்தக்கவகையில் தோன்றுவதாகவும் தெரிவிக்கிறார்.
50 வயதிலும், மிக செக்ஸியாக தோன்றுவதாகவும், நமது சினிமா ஆக்டர்கள் 40 வயதிற்கு மேலும் செக்ஸியாக தோன்றுவதையும் உலகம் முழுவதும் கண்கூடாகப் பார்க்கலாம்.

கடைசியில், ஒரு மனிதன் தனது குழந்தைகளுடன் விளையாடுவது கூட செக்ஸியாகவும், 60 வயதில் தோல்கூட சுருங்காமல் இருக்கும் பெண்கள் கூட செக்ஸியாகவும், நேர்மையாக இருப்பதுகூட செக்ஸியாகவும், சிலநேரங்களில், பயங்கராமான செயல்களைச் செய்பவர்கள் கூட செக்ஸியாகவும், பொதுவாக செக்ஸி (கவர்ச்சி என்பது) அந்தந்த தனிநபர்களின் ரசனையும், சூழ்நிலைகளையும் பொறுத்து வெவ்வேறாக இருக்கும் என்ற முடிவிற்கு வந்துவிட்டார் அந்த இளம் பேரிகை. (இது எங்களுக்கு தெரியாதாக்கும்.. சொல்ல வந்துட்டாங்கடா செய்தியை….)

.. டைம்ஸ்ஆப்இந்தியா 5.2.12 நாளிதழ் செய்தியுடன் சிவபார்க்கவி.
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu