புடவை கட்டும் பெண்களுக்கு ….பிரச்சினை வந்துடுச்சு !?

புடவை கட்டும் பெண்களுக்கு …. பிரச்சினை வந்துடுச்சு !?
SAREE WEARING WOMENS / GIRLS — PROBLEM

காலம் காலமாய் மனிதகுலத்தின் கண்கள் எனப் போற்றப்படும் பெண்கள், அதிலும் இந்திய மாதர்களுக்கு ஒரு அதிர்ச்சியூட்டும் தகவலை இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் அண்மையில் எச்சரிக்கை செய்துள்ளது.

பெண்கள் என்னதான் மாடர்ன் உடைகள் அணிந்தாலும், சேலை கட்டும்போது அவர்களின் அழகே தனி, சேலை கட்டும் பெண்னுக்கொரு வாசம் உண்டு என்ற பாடல் கேட்டதுண்டு, ஆனால் தற்போது சேலை கட்டும் பெண்னுக்கு கேன்சர் வருதாம் என்பதுதான் லேட்டஸ்ட் செய்தி. தினமும் சேலை கட்டும் பெண்களுக்கு சேலைப் புற்றுநோய் என்ற புற்றுநோய் வரவாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது. கடந்த 2 ஆண்டுகளில் இடை அல்லது சேலை புற்றுநோய் பாதித்த 3 பெண்களுக்கு சிகிச்சை அளித்துள்ளோம். சேலை கட்டும் பெண்கள் உள்பாவாடையை இருக்கக் கட்டும்போது இடுப்பில் எரிச்சல் ஏற்படுகிறது. இந்த தொடர் எரிச்சலால் அந்த இடத்தில் உள்ள தோலின் நிறம் மாறுகிறது. ஆனால், இந்த விவகாரம் பெரிதாவது வரை பெரும்பாலான பெண்கள் கண்டுகொள்வதில்லை.

அதே சமயம் இந்த புற்றுநோய் கால்சட்டை மற்றும் பெல்ட் அணிவதால் வராது. அதற்கு காரணம் கால்சாட்டை பட்டன் போடும் இடமும் சரி, பெல்ட்டும் சரி அகலமாக இருப்பதால் அழுத்தம் பரவலான இடத்தில் ஏற்படுகிறது. ஆனால் உள்பாவாடை நாடா சிறியதாக இருப்பதால் அழுத்தமும் குறுகிய இடத்தில் ஏற்படுகிறது. தினமும் ஒரே இடத்தில் இறுகலாக உள்பாவாடை கட்டுவதால் அந்த இடத்தில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இந்த குறைபாட்டை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். ஆனால் இந்த புற்றுநோய் இடுப்புப் பகுதியில் இருக்கும் மெல்லிய நிண நீர்க்குழாய்களுக்கு பரவினால் கட்டியை அகற்ற வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை.

ஆகவே, தாய்மார்களே, இளம்பெண்களே, குமரிகளே, வயதான பாட்டிமார்களே தயவு செய்து சேலை கட்டும் பொழுது பாவாடை நாடாவை இருக்கி கட்டி புற்று நோயை வரவழைத்து கொள்ளாதிங்க… அல்லது, டெய்லரிடம் கூறி சிறிது பெரிதான அகலமான பட்டையானநாடாவைப் பயன்படுத்தினால், உடலின் அழுத்தம் சீராகப் பரவி உங்களை புற்றுநோயிலிருந்து தப்பிக்க வைக்கும்.

இந்தியாவின் பராம்பரியமே சேலையும், சேலைக்கட்டும் பெண்களும்தான்.. அதுக்கே ஆப்பு வந்துடுச்சே… என்ன செய்வது.. தாவணி போய் சேலையாவது மிஞ்சியது.. இப்போ இதுவும் போயிடுமா… அடக் கடவுளே…

நன்றி.. தினசூரியன், சென்னை 31.1.12 செய்தியுடன் சிவபார்க்கவி

More than a Blog Aggregator

Thiratti.com Tamil Blog Aggregator

Thenkoodu

2 thoughts on “புடவை கட்டும் பெண்களுக்கு ….பிரச்சினை வந்துடுச்சு !?

  1. பல வருடங்களுக்கு முன்னாடியே எங்க அம்மாவுக்கு இந்த விஷயம் தெரியும் போல…..எங்களுக்கு நாடா கட்டும் போது தடம் பதியும் என்று எலாஸ்டிக் வச்ச பாவாடை, உள்பாவாடை போடா சொல்லி கொடுத்திருக்காங்க…….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s