மெரினா .. திரை விமர்சனம்

மெரினா .. திரை விமர்சனம்
MERINA .. TAMIL FILM REVIEW

பசங்க பாண்டியராஜ் படத்தைப் பார்க்க மிகுந்த எதிர்பார்ப்புகளுடன், வித்தியாமான போஸ்டர்கள் நகரெங்கும் வியாபிக்க மக்கள் கும்பலாக தியேட்டருக்கு போகிறார்கள்…. கும்பலோடு கும்பலாக நாமும் படம் பார்க்க போவோம் வாங்க…

1. ஆரம்பத்திலேயே, ஒரு மார்ச்சுவரி வேன் சென்னை ரோடுகளில் வேகமாக பயணிக்கிறது… ஒரு வேளை கிளைமாக்ஸ் காட்சியை முதலில் காண்பித்து பின்பு கதைசொல்லும் ஆங்கிலப் படம் மாதிரியிருக்மோ…என எதிர்பார்ப்பை கிளப்புகிறார். ஆனால், ஒரு பொடியன் தென் தமிழகத்தில் இருந்து, ஓடி வந்து வேன் டிரைவரிடம் சில்லறை கொடுத்து சென்னையில் இறங்குவதை காண்பிக்கிறார்கள்.

2. அதற்கடுத்த கட்டங்களில் சென்னையில் பல இடங்களில் சுற்றிய சிறுவன், கடைசியில் மெரினா பீச்சுக்கு வந்து, பல விஷயங்களைப் பார்க்கிறான்..
3. மெரினா கடற்கறை மிகவும் அழுக்காகவும், குப்பைக் கூளங்களாகவும், நேரில் பார்ப்பதை விட மோசமாக இருக்கிறது.
4. அங்கே, ஒரு கிழவருடன் நட்பு, மற்றும் மற்றுமொரு சிறுவனுடன் நட்பு என பசங்க ஒரு குரூப்பாக திரிகிறார்கள். தினந்தோறும் பலவித அனுபவங்களைச் சந்திக்கிறார்கள். காதலர்களை வெய்யிலில் காய்ந்து கடலை போடுவதை கொச்சையாக காண்பிக்கிறார்கள்.
5. பசங்க குரூப் கிரிக்கெட் விளையாடுவது, உச்சா போவது, பாட்டிலை உடைப்பது, குதிரை ஒட்டுவது என மிகமிக நீளமாக விளையாடுகிறார்கள்… நம்மையும் சோதிக்கிறார்கள். அதிலும் குதிரைப் பந்தயம் மிக நீளம்.

6. இடையே, ஒரு சிறுவனைத் தேடி இரு போலிஸ்காரர்கள் திண்டுகல்லில் இருந்து வருகிறார்கள்.. கடைசியில் போலிஸ் அதிகாரியின் மகனை கல்லால் அடித்த குற்றத்திற்காக, மகனின் விருப்பமான 15 கொட்டுக்களை கொட்ட வென மெனக்கெட்டு பல ஆயிரம் செலவில் திண்டுக்கல்லுக்கு அழைத்து செல்லப்படுகிறான்.
7. இடையே இந்தியா, இலங்கை கிரிக்கெட் மேட்ச்யையும் புகுத்தி காட்சிகள்..
8. அன்னம்மா என்ற சிறுமியை வைத்து ஆடவைத்து பிழைக்கும் திடகாத்திர அப்பா.
9. வீட்டைவிட்டுத் துரத்தப்பட்ட கிழவர், பிச்சையெடுத்து பை நிறைய பணம் வைத்திருப்பதும், அன்னம்மாவை காப்பாற்ற பணஉதவி செய்வதும், பின்னர் பையனின் வேண்டுகோள்படி ஊதுகோல் விற்று பிழைப்பதும், ஊருக்கு செல்ல முடிவெடுத்த நாளில் … முடிவை சந்திப்பதும்.. அப்பப்பா உண்மையிலேயே சின்னப்பசங்களுக்கான படம்தானோ என யோசிக்க வைக்கிறது.
10. இடையே, உம்மென அமர்ந்து இருக்கும் ரசிகர்களை ரசிக்க வைப்பது, மரக்கட்டையால் ஆன ஆப்பை கொரியரில் அனுப்பி வைப்பதும், சிவகார்த்தி, ஓவியாவின் எஸ்எம்எஸ் சண்டைகளும்தான்.
11. பெரிய பசங்க போடும் வீலிங் ( பைக் சாகசம்.. ) செய்வதை ஓவியா பார்த்து ரசிப்பதாக தப்பாக நினைத்து, சிவகார்த்தி பல ஆயிரம் செலவில் செட்டப் செய்வது ரசிக்கலாம்.
12. பசங்க படத்தில் வீசிய மண்வாசனை, மெரினாவில் வீசும் அழுகிற பொருட்களின் வாசனை … பாண்டியராஜ் ஒரு சீனில் பச்சைக் கொடியை அசைத்து வெளியே போக தயாராக இருங்க மக்களே என சொல்வது போல் இருக்கிறது… இன்னும் பாண்டியராஜ் இடம் நிறைய எதிர்பார்க்கிறோம்…இல்லையா…?
13. பிண்ணனியில் பல பழைய பாடல்களைப் பொருத்தமாக பயன்படுத்தியிருப்பது நல்ல உத்தி என்றாலும், தனது மகள் உடல்நலமில்லாது இருக்கும்போது, அப்பா எவ்வாறு உருக்கமாக ஒரு பழையப் பாடலைப் பாடுகிறார் என்பது கொஞ்சம் அநாகரிமாகத் தோன்றுகிறது.
14. ஓவியாவின் அம்மா, ஒரிரு காட்சிகளில் தோன்றினாலும் மனதில் நிற்கிறார்.. 1098 சைல்டு லைன் மற்றும் அவர்களின் பிரச்சாரத்திற்காக 20 நிமிடத்திற்குமேல் படத்தில் ஒதுக்கியது.. மிக அதிகம்.
15. பைத்தியகாரனை அருகில் வைத்துக்கொண்டே சிவகார்த்தி, ஓவியா காதல் சம்பாஷனை நடைபெறுவதும், அதைக் கேட்டு பைத்தியம் அடிக்கடி சிரிப்பதும்… என்ன நடக்குது இங்கே?
16. காதல் சம்பாஷனைகளுக்கு இடையே சங்கு வாங்கிக்க சொல்லி கட்டாயப்படுத்தும் சிறுவன்… நல்ல ரசனை
17. ஓவியா காதலை விட்டுப் பிரிவதும், சிவகார்த்தி வேறஒரு பிகர் செட் செய்வதும், ஓவியா புதிய கணவனுடன் பீச்சுக்கு வந்து, நான் எப்போதோ சின்னவயதில் அப்பா அம்மாவுடன் வந்த பீச் என பீலா உடுவதும், சிவகார்த்தியின் குண்டு நண்பர் காதலை ஆரம்பத்தில் இருந்து எதிர்ப்பதும், கடைசியில் அவரும் ஒரு பிகரை செட் செய்து பீச்சுக்கு வருவதும்.. ரியல் லைப்…
18. போலிஸ் தொல்லையை அவ்வளவாக படம் பிடிக்க வில்லை என்றே தோன்றுகிறது.. ஒரு சீனில் அனாதை பிணத்தை சிறுவர்களிடம் ஒப்படைத்து விட்டு எஸ்கேப்.. ஆகிறார்கள்.

டிஸ்கி.1 ஒரு திரைப்படத்தைப் பற்றி பத்திரிக்கை .. மீடியா ஊடகங்கள் எவ்வாறு உரிமையுடன் விமர்சனத்தை வைக்கிறார்கள் என்பதுபோல், பிளாகர்களுக்கே உரிய சுதந்திர உணர்வுடன் பதிவுகள் எழுதப்படுகிறது. தனிப்பட்ட முறையில் சம்பந்தப்பட்ட கலைஞர்கள் தங்களின் முன்னேற்றத்திற்கான அளவுகோலாக பயன்படுத்திக் கொள்ளவும் வேண்டுகிறேன்.

டிஸ்கி..2 சமீபத்தில் டி.ராஜேந்தரின் வீராசாமியை விமர்சனம் செய்ததற்காக, கொலைவெறியுடன் யூடியூப் மூலம் டி.ஆர் ஆனந்த விகடனை (இவங்க யாரு படங்களுக்கு மார்க் போட, என்னைப்போல சூப்பர் உறிட் படம் எடுக்கத் தெரியுமா?… ) எனப் போட்டுத் தாக்கியதை கேட்டதற்கிணங்க டிஸ்கி ஒன்று வழங்கப்படுகிறது.
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu

2 thoughts on “மெரினா .. திரை விமர்சனம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s