தோணி .. திரைப்பட விமர்சனம்.

தோணி .. திரைப்பட விமர்சனம்.
TONI – TAMIL FILM REVIEW

நீண்ட நாளைக்குப்பிறகு ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தை தற்காலத்தில் படும் கஷ்டங்களை, அதுவும், லஞ்சம் வாங்ககாத அரசு ஊழியரின் குடும்பத்தில், ஒரு பெண் குழந்தை, ஒரு ஆண் குழந்தையை வளர்க்க (அம்மா வேறு இறந்து விட்டார்) அப்பா பிரகாஷ்ராஜ் படும் கஷ்டங்களையும், தற்காலப் பள்ளிக் கூடங்கள் பசங்களைப் படி படின்னு போட்டு உயிரெடுப்பதையும், அவர்கள் உண்மையான ஆசைப்படும் துறையில் ஜொலிக்க படிப்பு ஒரு தடையாக இருப்பதையும் ரொம்ப க்யூட்டாக காண்பித்திருக்கிறார்கள்.

அருமையான காலனி வீடுகள் அக்கம்பக்கம் நண்பர்கள், ஒரு சஸ்பெக்ட் செய்யப்படும் பெண். புயலுக்கு முந்திய பாண்டிச்சேரியின் பூங்காங்களில் படமெடுக்கப்பட்டது.. ( எவ்வளவு இழப்பு சே…), ஊறுகாய் விற்று சைடில் சம்பாதிக்கும் பிரகாஷ்ராஜ், சீப் அன்ட் பெஸ்ட் பொருட்களை நாடுவதும், பெஸ்ட் ஆக இருக்கும் பொருள் சீப்பாக இருக்காது, சீப்பாக இருக்கும் பொருள் பெஸ்ட் ஆக இருக்காது என நண்பர் கூறுவது டச்சிங். மேனாஜராக வரும் ஆந்திர சிரிப்பு நடிகரின் நடிப்பும் அருமை.

0. பிரகாஷ்ராஜ் மற்றும் அவர்களின் நண்பர்களின் கச்சேரி, மொட்டைமாடியில் (டிரிங்ஸ் பார்ட்டிதான்) எதர்த்தமான எடுத்துக்காட்டு
1. கந்துவட்டிக்குக் கொடுக்கும் வில்லன், பிறகு மனசு மாறி உதவிகள் செய்வது நன்றாயிருக்கு ( நிஜத்தில் இப்படி நடக்குமா?)
2. இளையராஜாவின் இசை ஆங்காங்கே தாலாட்டுப் பாடுது, ஒரு பாடலையும் பாடியிருக்கிறார்.
3. பிரபுதேவாவும் ஒரு பாடலுடன் ஆடலையும் போட்டிருக்கிறார்.
4. போட்டியான உலகில், நாம் எதார்த்தமான வாழ்க்கையை விட்டு பொய்யான, ஒரு சிலருக்கு ஒத்துவராத வாழ்க்கையை வாழ்ந்து வருவதை நன்றாக பதிவு செய்திருக்கிறார்கள்.
5. பையன் கிரிக்கெட்டில் மிக ஆர்வம், தந்தையும் பையனுக்கு தேவையான எல்லா உதவியும் செய்கிறார். நாசர் கிரிக்கெட் கோச், பையனை பெரிய ஆளாக உருவாக்க உதவுகிறார். ஆனால், பள்ளிக்கூடத்தில் படிப்பில் மிக சுமார் ஆகையால் வெளியேற்ற அறிவுறுத்தப் படுகிறார். அதைக்கேட்டு பொங்கி எழுந்து பையனை அடிக்கப் போய், மண்டையில் பலமாக அடிபட்டு பையன் கோமாவிற்கு செல்கிறார்… அதன் பிறகு நீயா, நானா டிவி புரோகிராம் மூலம் வெளி உலகிற்கு தான் அடைந்த கஷ்டங்களையும், பள்ளிக் கூடத்தின் டார்ச்சரையும் வெளிப்படுத்துகிறார். அதனால், பலருடைய அனுதாபத்தையும், உதவிகளையும் பெறுகிறார். பையன் குணமடைய ஒரு சிறப்பு டாக்டர் உதவ இருக்கும் நேரத்தில், கேட்ட லோன் தொகை கைக்கு வராமலும், வேலையில் சஸ்பெண்ட் ஆகக்கூடிய சூழ்நிலையில், முதலமைச்சரின் கூட்டத்தில் எதிர்பாராதவிதமாக கவனத்தை கவர்ந்து, உதவிகளைப் பெற்று பையனை மீண்டும் கிரிக்கெட் பிளேயராக உருவாக்குவதே.. முழுக்கதை.

பசங்களைப் படிங்க.. படிங்கன்னு ரொம்ப டார்ச்சர் செய்யும் பெற்றோர் மற்றும் பள்ளிக்கூடங்களுக்கு இது ஒரு எச்சரிக்கை.

More than a Blog Aggregator

Thiratti.com Tamil Blog Aggregator

Thenkoodu

valaipookkal.com Tamil Blogs

http://www.tamil10.com/files/hotlink.php

Udanz

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s