3++ .. திரைவிமர்சனம்
3 Tamil Film Review
கொலைவெறி கூட்டம் இல்லாவிட்டாலும், அந்த பாட்டு உறிட் அடிச்சதனால ஒரு சில இளம் பெண்கள் கூட 3 படத்தைப் பார்க்க வந்திருந்தனர். ஆரம்பத்திலேயே அதிர்ச்சியடைய வைக்கும் தனுஷ் இறந்து நடுவீட்டில் அனைவரும் சோகமாக அமர்ந்திருப்பதும், படிப்படியாக அவர் +2 படிப்பதில் இருந்து சுருதியை காதலிப்பதும், பின் 5 வருடங்கள் கழித்து இரு வீட்டார் எதிர்க்கவில்லையானலும் உடன்பாடில்லாமல், ஒரு பப்பில் வைத்து பழங்கால முறைப்படி தாலிகட்டி பொண்டாட்டியாக ஆக்கிக் கொள்கிறார்.
இருவரும் மிக மிக இளமை துள்ளல் ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படுகிறது. ஐஸ்வர்யா..வின் உழைப்பு வீண்போகவில்லை.. மாப்பிள்ளை அதாங்க தனுஷ் சும்மா புகுந்து விளையாடிக்கிறார் கமல் பெண்ணிடம்… றைடெக் பேமிலி தனுஷ், மிடில்கிளாஸ் பேமிலி சுருதி இருப்பினும், வாழ்க்கை மிகவும் றைடெக் அபார்மெண்ட், நண்பர் சிவகார்த்திகேயன் மற்றும் செந்தில் (கேரக்ட்ர் பெயர்), இளமையில் சேர்ந்து ஆட்டம் போடுவதும், பின்னர் கடைசிவரை செந்தில் தனுஷ் (ராம்) கூடவேயே அவருடைய வீட்டில் ஒவ்வொருநிமிடமும் தனுஷ்க்கு பாதுகாப்பாக.. சுருதியே ஒருமுறை செந்திலை திட்டியும், நண்பருக்காக உயிரையும் கொடுப்பான் நண்பன் என்பதனை இந்தப் படத்தின் றைலைட்டாகக் கூறலாம்.
மேலும், காதல் மற்றும் கணவன் மனைவியிடையே ரொம்ப அன்யோன்யம், உதாரணமாக கணவன் முகத்தில் இரத்தத்தைப் பார்த்தவுடன் மனைவி மயக்கமாதல் போன்றவைகளால் அவர்கள் படும் வேதனைகளும் முடிவும்தான் படத்தின் முக்கிய அம்சம்.
மற்றபடி, இசை, கேமிரா மற்றும் அனைத்துக் கலைஞர்கலையும் மேக்ஸிமம் வேலை வாங்கியிருப்பது தெரிகிறது. பிரபு மற்றும் பானுபிரியா ஜோடி ஒரு சில காட்சிகளிலேயே வந்திருந்தாலும், நன்றாக பொருந்தியிருக்கிறார்கள். பணக்கார குடும்பமாக இருந்தாலும் ஒரு காட்சியில் பானுப்பிரியா 100ரூபாய் நைட்டியை அணிந்து கொண்டு மோசமாக காட்சியளிக்கிறார்.
ரகுவரன் மனைவிதான் சுருதியின் அம்மா (மேக்கப் ரொம்ப மோசம், அமெரிக்கா போகப்போறவர்மாதிரியே தெரியவில்லை), 15 வருடங்களாக அமெரிக்கா போக விசாவிற்கு அலைந்து கிடைந்தவுடன், சுருதி மட்டும் அமெரிக்கா செல்ல விரும்பாமல், (காதல் தான் காரணம்… தனுஷ்விடம் நான் அமெரிக்கா போறேன் சொல்ற அன்னைக்கு இரவுதான்… பீச்சில் அந்த கொலைவெறி குத்துப் பாட்டு நன்றாக படம் பிடித்திருக்கிறார்கள் ). இடையே பேய் படத்திற்கு வந்துட்டமோ என்ற பீலிங்கும் எழுந்தாலும், தற்கொலைக்குத் தூண்டும் மனநோயை அழகாக படம் எடுத்திருக்கும் விதம் பாரட்டத்தக்கது.
தனுஷ் அடுத்தக் கட்ட நடிப்பிற்கு சென்றுவிட்டார்… சிவாஜி அளவிற்கு பேசப்படலாம். நண்பராக நடித்த செந்தில் மற்றும் சுருதியின் நடிப்பும் படத்தில் குறிப்பிடத்தக்கது. (குறிப்பாக ரொமான்ஸ் ). தனுஷ்க்கு அதிர்ஷ்டம்தான் ஒரு பக்கம் ரஜினியின் பெண்ணை திருமணம் செய்து கொண்டும், திரைப்படத்தில் கமலின் பெண்ணை திருமணம் செய்தும் ஒருவழிபன்னுகிறார், மச்சம்தான்.