கீசகனைப் போட்டுத்தள்ளிய பாஞ்சாலி….

கீசகனைப் போட்டுத்தள்ளிய பாஞ்சாலி….
panjali dropped Keesagan….

பாஞ்சாலியை, பஞ்ச பாண்டவர்களின் துணைவி, கீசகன் அரண்மனையில் பார்த்தவுடன், ஆசனத்திலிருந்து குதித்து எழுந்து, கடலில் கரை சேராமல் தவிப்பனுக்கு கப்பல் கிடைத்தது போல் பாஞ்சாலியைப் பார்த்துக் கீசகன் களிப்படைந்தான். அவளுக்கு நல்வரவு கூறி, என்னை அடைந்து எல்லாப் போகங்களையும் பெறுவாய், காதுக்குக் குண்டலம், உடுக்கப் பட்டாடை, கழுத்தில் அணியத் தங்கமாலை எல்லாம் கொடுக்கிறேன். என்னுடன் இந்தப் படுக்கையில் உட்கார்ந்து இனிய இந்தக் கள்ளைக் குடி, நான் உனக்கு ஏற்ற கணவன், இப்படிவா என்றான். பாஞ்சாலி பல விதமாக மறுத்துக் கூறிப் பார்த்தாள். அவன் சற்றும் கேட்காமல் அவளுடைய வலக்கையைப் பற்றினார், அப்பொழுது பாஞ்சாலி கையை உதறினாள், தான் கள்ளுக்குகாகக் கொண்டுவந்த பாத்திரத்தைக் கீழே வைத்துவிட்டு விராடனது சபையை நோக்கி ஓடினாள். அப்போது கீசகன் அவளுடைய தலை மயிரைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளிக் காலால் உதைத்தாள்.

பாஞ்சாலி விராட மன்னனைப் பார்த்து, கீசகன் செய்த அநீதியை எடுத்துரைத்தாள், அரசனுடையயை கடமைகளை எடுத்துக் காட்டி தக்க தண்டனை விதிக்கும்படி கேட்டாள். விராடன் கீசகனிடம் பயந்தவனாய், உங்கள் இருவருக்கும் தனிமையில் என்ன நடந்ததோ? என்று மறுதலித்தான்.

பாஞ்சாலி கோபம் கொண்டவளாக, கீசகனை போட்டுத் தள்ள திட்டம் போடுகிறார், பீமனை பிறர் அறியாதபடி எழுப்பி, பிரச்சினையை சொல்லி, இந்த கீசகனை போட்டுத்தள்ளாவிட்டால் தான் உயிரை மாய்த்து கொள்வதாகத் தெரிவித்தாள். அதைக்கேட்ட பீமன், கவலைப்படாதா பாஞ்சாலி, கீசகனிடம் நல்ல வார்த்தை சொல்லி இரவில் நர்த்தனசாலையில் நீ அவனுக்காகக் காத்திருப்பதாக தெரிவி. மற்றவர்கள் அறியாதபடி தனியாக அங்கே வரச்சொல் நான் அங்கே உன்னுடன் வந்து அவனைக் கொன்றுவிடுகிறேன் என்று வாக்களித்தான்.

இரவில் பீமன் நர்த்தன சாலைக்குப் போய்ப் படுக்கையில் படுத்திருந்தான். அவனுடன் சென்ற பாஞ்சாலி ஒருபுறம் ஒதுங்கி நின்று கொண்டிருந்தாள். படுக்கையில் இருந்த பீமனைப் பாஞ்சாலி என்று எண்ணிக் கீசகன் ஆசை வார்த்தை கூறி அருகில் வந்தான். பீமன் அவனைக் கட்டி உருட்டிக் கொன்றான்.

…. மகாபாரதத்தில் இருந்து சிவபார்க்கவி.
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s