நீங்கள் கோடீஸ்வராக வேனுமா..? இல்லை…

நீங்கள் கோடீஸ்வராக வேனுமா..? இல்லை…

2012ல் உலகம் சந்திக்கும் மிகப்பெரிய சவால், ஒவ்வொரு வரும் ரிச்சாக (பணக்காரராக) ஆக வேண்டும் என்பது.. அதிலும், குறைவான வேலை செய்து விரைவில் பணக்காரராக ஆகி, அனைத்தையும் அனுபவிக்க வேண்டும். ஏனெனில், குடிக்கும் நீர் முதற்கொண்டு பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலைமையும், உழைப்பை கொடுப்பவர்கள் எதிர்பார்த்த வசதியை அடைவது குறைவதும், உடல்உழைப்பு குறைந்தவர்கள் மிக வசதியாகவும் வாழ்ந்து வருவது கண்கூடு…

சரி… அனைவருக்கும் இந்த மாதிரி கோடீஸ்வரராகவோ அல்லது போதும் என்றஅளவிற்கு செல்வமோ அல்லது வசதி வாய்ப்புகளோ இல்லையென்றால் என்னசெய்வது… அதற்குத்தான் இந்தப்பதிவு…

1. அதிசயப்படுங்கள்… இந்த பொருள் என்னுடையது.

நீங்கள் ஒரு பிளாட் வாங்கினாலோ, கார் வாங்கினாலோ அல்லது எந்தவித பொருள்களைப் பெற்றாலோ.. வசதியைப் பெற்றாலோ முதலில் அதிசயப்படுங்கள் ஆஉறா இந்த வசதி.. இந்தப்பொருள் என்னுடையது.. ஏனெனில், கண்டிப்பாக இந்தப் பொருள் பிறரால் அனுபவிக்க இயலாது. அதுமட்டும் இல்லாமல், இந்தவசதியோ.. பொருளோ பிறரில் பெரும்பான்மையோருக்கு கிடைக்கவில்லை என்பதை நினைத்து முதலில் பெருமிதப்படுங்கள். (அது சாதாரணமான வாடகை வீடாக இருந்தாலும், மேன்ஷன் அறையாக இருந்தாலும், டிவிஎஸ்50 ஆக இருந்தாலும் கூட)

2. அனைத்தையும் இழந்தாலும் …
ஒருவேளை ஒரு சிலருக்கு இது நேரலாம், நாம் மிகவும் நேசித்த பொருள்களோ .. வீடோ .. கடையோ… வேலையோ… மனைவியோ.. மக்களோ.. சொத்தோ.. அனைத்தும் வாஷ் அவுட் ஆகக்கூடிய நிலைமை ஏற்படும்… அந்தச் சூழ்நிலையில் கூட மகிழ்வுடன் இன்னமும் நம்மை இந்த உலகம் கைவிடவில்லை, இந்தக்கூறை (வானம் .. காற்று.. நிலம்… நீர்.. நெருப்பு) நமக்காக உள்ளது என எண்ணம் கொள்ளுதல்.

3. வசதிகள் இல்லாமல் வாழ்வது…
நமக்கு நாமே இந்த வசதி இருந்தால் மட்டுமே வாழ இயலும், இல்லையென்றால் முடியாது என எந்த வசதியையோ…(உதாரணமாக செல்போன்… ஏசி… போன்றவைகள்…) நாம் நினைத்தால் அதனை, தயவுசெய்து தவிர்த்து விட்டு வாழ்ந்து பார்ப்பது.

4. மகிழ்வுடன் வாழ்வது….
எப்பொழுதும் ஒருவிதமான மகிழ்ச்சி பொங்க வாழ்வது, கரண்ட் கட்டானால் கூட மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு பரவாயில்லை இவ்வளவு நேரம் இருந்ததே என யாரையும் திட்டாமல் ஏற்றுக்கொள்ளும் மனநிலையை உருவாக்கிக் கொள்வது… (இதுபோல், தெருவில் சண்டை, வண்டியை மோதியவர்கள், சேவைக்குறைவு… நிறைய சொல்லலாம்)

5. ஆசிர்வாதத்துடன் வாழ்வது
சொந்தபந்தங்கள், முதியவர்கள் மட்டுமல்லாமல் பார்ப்பவர்கள் எல்லாரிடத்திடலும் கூடுமானவரை ஆசிர்வதிக்கப்பட்டவராக நடந்துகொள்வது.. ஆசிர்வாதங்கள் பெறும் வகையில் நம்முடைய அன்றாட செயல்களை செய்யும் வண்ணம் (விட்டுக்கொடுத்தோ.. எதிர்பார்க்கமால் உதவியோ…) நம்மை மாற்றிக்கொள்வது.

6. கடைசியாக பரிசு கொடுங்கள்.. பெறுங்கள்
ஒருவருக்கு நீங்கள் பரிசாக எதைக் கொடுத்தாலும், அவரிடத்தில் ஒரு சிறிய அளவிற்கேனும் அன்புடன் நடந்து கொள்வதாகவே அர்த்தம். பெருமளவில் அனைவருக்கும் பரிசுகளை அளியுங்கள்… பெருமளவில் பரிசுகளை தானகவோ அளிக்கும்படி நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.

என்ன ரொம்ப கஷ்டமா…? அப்ப நீங்க எப்படி பலரின் மனதில் நல்லவராக .. குணம் மிக்கவராக.. மில்லியனராக தோன்றுவது..
கஷ்டப்பட்டாவது.. மேற்கண்ட அனைத்தையும் கடைபிடியுங்கள்.

இந்த சமூகத்தில் பணத்தை அளக்கும் அளவுகோலைவிட, மணத்தை அளக்கும் அளவுகோல் உண்மையில் மிகப்பெரியது.. எனவே மணத்தில் கோடீஸ்வரராக உலாவருங்கள்…

(தலைப்புகள் மட்டும்.. நன்றியுடன்..ரீடர்ஸ் டைஜ்ஸ்ட் .. உடன் சிவபார்க்கவி)
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu

2 thoughts on “நீங்கள் கோடீஸ்வராக வேனுமா..? இல்லை…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s