கரண்ட் கட்டே….

கரண்ட் கட்டே….

தமிழகத்தில் ஒவ்வொரு குடிமகனுடைய தலையாய பிரச்சினையாக கரண்ட் கட் உருவெடுத்துள்ளது. இதுக்கான காரணகாரியத்தைப் பற்றி நாம் மூக்கை நுழைக்காமல், என்ன செய்தால் இந்த சூழ்நிலையை எதிர்கொள்ளலாம் என ரூமைவிட்டு வெளியே வந்து (கரண்ட் இல்லீங்கணா…) யோசிக்க வைத்ததில் வேர்வை சிந்த சில யோசனைகள்…

1. கரண்ட் போச்சே … (வடை போச்சே ன்னு சொல்ற மாதிரி) கவலைப்படுவதோ, எரிச்சல்படுவதோ கோபப்படுவதோ, அக்கம் பக்கம் இதைப்பற்றி பேசிபேசி டென்ஷன் ஆவதை முடிந்தவரைத் தவிர்க்கவும்.. (உடம்புக்கு ரொம்ப நல்லது)
போனாப் போகுது, காற்றாவது (வீட்டிற்கு வெளியில்) இருக்குதேன்னு சந்தோஷபடுங்க

2. பகல் என்றால், வீடாக இருந்தால் எப்பொழுது கரண்ட் போகும், எப்பொழுது வரும் என ஒருவாரம் கவனித்து கொட்டை எழுத்துக்களில் எழுதி ஒட்டிவிடவும். இதனால், கரண்ட் இருக்கும்பொழுது செய்ய வேண்டிய வேலைகளை அந்தந்த நேரத்திற்குள் முடிக்கலாம். (மாவட்டுவது, தண்ணீர் தொட்டி நிரப்புவது போன்று…)

3. கடையாக இருந்தால், தொழிலுக்கு மின்சாரத்தை பயன்படுத்தி செய்ய வேண்டிய வேலைகளை அந்தந்த நேரத்தில் விரைவாக செய்து முடிக்க உதவும்.

4. கரண்ட் இல்லாத நேரத்தில், மார்க்க்ட் செல்வது, கோயிலுக்கு செல்வது, கடைக்குத் தேவையான சாமான்களை வாங்குவது, தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவது (தோட்டம் இருந்தால்… ) போன்ற அவுட்டர் பணிகளை முடிக்கலாம்.
5. குறைவான வசதியானவர்கள் கூட… எல்இடி மூலம் இயங்கும் சிறிய டார்ச்லைட் 10ரூபாயில் இருந்து கிடைக்கிறது வாங்கி இரவில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
6. வசதியானவர்கள் யூபிஎஸ் பேட்டரிகளை தரமானதாக வாங்கவேண்டும்.. சீசனைப் பயன்படுத்தி பலர் இந்தத் தொழிலில் இறங்கிவிட்டதாலும்… நீண்ட நேரத்திற்கு தாக்கு பிடிக்க வேண்டிஇருப்பதால் விலை மற்றும் தரத்திற்கு கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும் இல்லையென்றால் ஒரு மாதமோ இரண்டு மாதமோ முதலுக்கே மோசம் வந்துவிடும்.
7. மொட்டை மாடியில் நன்றாக தூங்க ஏற்பாடு செய்து கொள்ளலாம்.
8. குடும்ப உறுப்பினர் வேறு மாநிலத்தில் பணிபுரிந்தால் கொஞ்ச நாளைக்கு வெளிமாநிலத்திற்கு டோரா போட்டு விடலாம்.
9. மின்சாரத்தை சிக்கனப்படுத்தி நாட்டுக்கு கொஞ்சம் போல உதவலாம்..
10. சோலார் பவர்.. கொஞ்சம் கூடுதல் செலவு தான் இருந்தாலும் முயற்சி செய்து பார்க்கலாம். (சுமார் 60000லிருந்து யூனிட்க்கு தக்க அளவிற்கு செலவாகுமாம்… காண்டாக்ட் அட்ரஸ் வேனும்னா… இமெயில் பன்னுங்க .. sivaparkavi@hotmail.com)

அவ்வளவு தாங்க… இன்னும் ஏதாவது இருந்தால் நீங்களே எல்லாருக்கும் சொல்லுங்கண்ணா, கேட்டுக்கிறோம்.

More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu

7 thoughts on “கரண்ட் கட்டே….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s