மகளிர் மட்டும்… அடிமைப்பட்ட இனமா?..

மகளிர் மட்டும்… அடிமைப்பட்ட இனமா?..
makalir thinam, Womens Day on March 8

ஒரு வழியாக பிங்க் டே (அதாங்க மார்ச் 8, காலையில் எழுந்தவுடன் எனது மகள் மகளிர் டேக்கான கிப்ட் கேட்டாள், நீ மகளிர் இல்லை சிறுமி என்று கூறி சமாளித்தேன்) கடந்து போய் விட்டது. மீடியாக்களில் இந்த தினம் செய்தி தீனி போடும் விஷயமாகிவிட்டது.

1. பெண்கள் இல்லாத உலகம், வெறுமை
2. தாய்க்குப்பின் தாரம்
3. நூலைப்போல சேலை, தாயைப் போலப் பிள்ளை
4. அவரை விதைத்து சுரையா முளைக்கும்
5. தாயில்லாமல் நானில்லை
6. தாரத்திற்கு மிஞ்சியதுதான் தானம்.
7. தாய்க்கு பிள்ளை தப்பால் பிறந்திருக்கு
8. பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கனும்
9. காட்டுல புலி வீட்டுல எலி
10. ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே
11. அழகு ஆபத்து
12. அழகைவிட அறிவே சிறந்தது
13. சீறும் புலியை நம்பு, அழும் பெண்ணை நம்பாதே
14. பெண்களே இந்த நாட்டின் கண்கள்
இப்படி பல விஷயங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

பொதுவாக பெண்கள்தான் குடத்தில் இட்ட குத்துவிளக்கு போல் ஒரு குடும்பத்தின் வெற்றி மற்றும் தோல்விக்கு காரணமாகவும் அமைகிறார் என்பது எனது பொதுவான கருத்து. உடல்ரீதியாக பல வலிகளை பொறுத்து, பிறரைச் சார்ந்து எவ்வளவு உயர்வான இடத்தில் இருந்தாலும் கூட, அவரது கணவரையோ, மகனையோ சார்ந்து இருக்கும்படியானலும் கூட தனது தனித்துவத்தை தற்காலத்தில் பலரும் உயர்வாக இருக்கும்படி பார்த்துக் கொள்வது ஒரு நல்ல முன்னேற்றம்.
இரண்டாவது முக்கியமான மாற்றம் சமூகத்தில் நிகழ்ந்தது, பாலியல் ரீதியான எதிர்பார்ப்புகள், எதிரிணக் கவர்ச்சி ஆகியவை பெரும்பகுதி குறைந்து, பொருளாதார ரீதியான ஒட்டுதல்களே பெரும்பாலும் நிகழ்வது மகளிரைப் பொறுத்தவரை ஒரளவிற்கு வெற்றியே.
பெண்மையை போற்றுவதும் சாலச்சிறந்தது. நம்ம அண்ணாச்சி சித்தூர் முருகேசன் ஜோதிடம் 360 டிகிரி புக்குல கூட பெண்கள் இல்லைன்னா… http://anupavajothidam.blogspot.com/ ஒன்னுமில்லைன்னுதான் எழுதியிருக்காரு.. அதே நேரம், ஒரு சில பெண்களின் மனம் குண நலண்கள் குறிப்பாக பெரிய குடும்பங்களில் அந்த அமைப்பையும் சிதைத்து பலகாலம் கட்டிக்காத்த பெயர்கள் கூட அழிந்துபோய்விடக்கூடியதாக இருக்கிறது. டாஸ்மார்க்கில் தண்ணியடிப்பவர்களில் கணிசமான எண்ணிக்கை உயர்வுக்கு கூட பெண்கள் ஏதாவது ஒரு வகையில் காரணமாக இருப்பதாக தெரியவருகிறது.
மனம் ரீதியாக பெண்களின் குணநலன்கள் சூழ்நிலையின்பால் வளர்த்தெடுக்கப்படுகிறது, (அவர்களுக்கு பெரும்பாலும் அனுபவஅறிவு குறைவாகவே இருக்கிறது கண்கூடு). பெண்களால் நன்மையடைய கூடுமானவரை பெண்களை நல்லவிதமான அனுகுமுறையை கடைப்பிடிக்கலாம், (தவறிழைக்கும் பெண்களை தவிர்க்கவோ உதாசீனப்படுத்தவோ செய்யலாம்)
எதுவாயினும், பெண்மையைப் போற்றுவோம். வாழ்க மகளிர் தினம்… மகிழ்ச்சியே அமைதியான உலகிற்கு வழி, அதற்கு உதவும் மகளிர்க்கு வாழ்த்துக்கள்.

More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu

5 thoughts on “மகளிர் மட்டும்… அடிமைப்பட்ட இனமா?..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s