அரவாண் .. தமிழ்திரைப்பட விமர்சனம்.

அரவாண் .. தமிழ்திரைப்பட விமர்சனம்.
aravan .. tamil film review

திரையரங்கில் நுழைந்தவுடன் டமால் என்று ஒரு சத்தம், என்ன என்று பார்த்தால் படம் ஆரம்ப காட்சியில் இசை டீடிஎஸ் ஒலியில் ஒலித்தது. வசந்தபாலனின் 3வது படைப்பு, துணிந்து இந்த சப்ஜெக்டை தொட்டிருக்கிறார். 18ம் நூற்றாண்டின் ஆரம்பக்காலத்தில் ஏழ்மையான மலைக்காட்டில் வசிக்கும் சிற்றூர்களில் நடக்கும் கதையாகும். அந்தக்காலத்தில் மக்கள் எவ்வாறு (முரட்டுத்தனமான, உடைகள் இன்றி, எந்தவிதமான வசதிகள் இன்றி, சமூகத்தில் இறைவழிபாடு மட்டும் குறைவின்றி, ஆனால், ஒற்றுமையுடன், ஊரில் உள்ள அனைவரையும் அனைவருக்கும் தெரிந்து அன்புடன் வாழ்ந்து வருகிறார்கள். கதைப்படி காண்பிக்கப்படும் சிற்றூரைச் சேர்ந்தவர்கள் அருகிலுள்ள வசதியான கிராமங்களில் உள்ள பணக்காரர்களிடம் உள்ள பொன்..பொருள்களை களவாடி அதை குறைந்த விலைக்கு விற்று அதில் கிடைக்கும் உணவுப் பொருட்களைக் கொண்டே அனைவரும் உண்கிறார்கள்.

தமிழர்களின் வீரவிளையாட்டான, மாடுபிடி போட்டி, ஓட்டப் பந்தயம், பொங்கல் விழா போன்றவை ஆங்காங்கே சிறப்பிக்கிறது. ஆதி (இவர்தான் அரவாண்), மகாபாரதத்தில் பலி கொடுக்க அரவாண் பயன்படுத்தியது போல, ஆதியை பலி கொடுக்கும் சூழ்நிலை உருவாகிறது. பலிகொடுக்க வேண்டிய நாளில் ஆதி சூழ்ச்சியை அறிய முயற்சிசெய்கிறார், முயற்சி தோற்று பலிகொடுக்க வேண்டிய இடத்திற்கு வரஇயலாமல் தலைமறைவாகிறார். இவருக்கு பதிலாக அவர் நண்பர் பலியாகிறார்.

ஒரு சிறிய சஸ்பென்ஸ் கதையுடன் பின்னி பிணைந்து பெடல்எடுக்கிறது. படமாக்கிய விதம் மிக அருமை. கதாநாயகி அளவுடன் ஆதியுடன் கொஞ்சிகுலாவுகிறார். ராசா கதாபாத்திரமும், சின்ன ராணியும் குறைவான காட்சிகளே படத்தில் வந்தாலும் மிக முக்கியமான ஆட்களாக ஆகிவிடுகிறார்கள். காடு, மலை, சிறு கிராமம், சந்தை என ஆர்ட் டைரக்டர் கடுமையாக உழைத்திருப்பது நன்கு தெரிகிறது.

படம் கொஞ்சம்போல் நீண்டுகொண்டே போகிறது.. இருப்பினும் ஒவ்வொரு பிரேமும் தவிர்க்க இயலாத ஒன்று என்பது நமக்கே புரிகிறது. பதினெட்டாம் நூற்றண்டின் மனித வாழ்க்கையை நமக்கு கண்முன்பாக காண்பித்த இயக்குநருக்கும் மற்ற பிற உழைப்பாளிகளுக்கும் தமிழர்கள் நன்றியை அவசியம் தெரிவிக்கலாம். இருப்பினும், சு.வெங்கடேஷனின் காவல் கோட்டம் நாவலின் ஒருபகுதியை டெவலப் செய்து இருந்தாலும், தமிழர்களை களவாடிகளாக இல்லாமல் சிறந்த உழைப்பாளிகளாகக் காண்பித்து இருக்கலாம். (உண்மையும் அது தானே.)
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz

Advertisements

8 thoughts on “அரவாண் .. தமிழ்திரைப்பட விமர்சனம்.

  1. ஹிந்தியாவே முடிவு செய்.
    தமிழ்நாடு வேண்டுமா? சிங்கள நாடு வேண்டுமா?

    ——————-
    தறுதலை
    (தெனாவெட்டுக் குறிப்புகள் – மார் ‘2012)

  2. அரவான் படம் நேற்றுத்தான் பார்த்தேன். மிகவும் பிடித்துப்போனது. அரவான் படத்தின் பெரும்பகுதி மதுரை அரிட்டாபட்டியில் எடுக்கப்பட்டுள்ளது. அரிட்டாபட்டியில் பசுமைநடை சென்றபோது படத்திற்காக போடப்பட்ட செட்டிங்களை பார்த்தேன். காவல்கோட்டத்தின் ஒரு பகுதியை மிகவும் அற்புதமாக எடுத்த வசந்தபாலனை பாராட்ட வேண்டும். பகிர்விற்கு நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s