சப்பை மேட்டரு….ஒரு சிலருக்கு .. (பார்ட் ஒன்று)

சப்பை மேட்டரு….ஒரு சிலருக்கு .. (பார்ட் ஒன்று)
kannadasan songs for life reference

அந்தகாலத்தில் கண்ணதாசனால் இயற்றப்பட்ட பாடல்களின் ஒரு சில வரிகள்… இப்பொழுதும் ஒரு சிலருக்கு பொருத்தமாக இருப்பது கண்கூடு..

1. தங்கதுரை திரைப்படத்தில் இருந்து

திருநீறு பூசிக் கொண்டு
சிவன் பேரைச் சொல்லிக் கொண்டு
மது உண்டு மங்கை கொண்டு
வாழ்கின்ற மனிதர் உண்டு
அவர் மேலே பக்தி கொள்ளும்
அடியார்கள் மிகவும் உண்டு
ஆடென்றும் மந்தையென்றும்
அவரைத்தான் சொல்வதுண்டு.

2. உறவு சொல்ல ஒருவன்

கேளு பாப்பா ஆசையின் கதையை
ஆசையாலே வீழ்ந்தவர் நிலையை
பணத்தில் ஆசை பதவியில் ஆசை
பருவ நாளில் காதலில் ஆசை
நூறு கிடைத்தால் ஆயிரம் கேட்கும்
ஆயிரம் கிடைத்தால் அதைவிடக் கேட்கும்
ஆசை எங்கே முடிந்தது கண்ணே
ஆண்டவன் கூட ஆசையின் பின்னே

3. வாணி ராணி

எவனெவன் மனதில்
என்னென்ன இருக்கும்
எவனுக்கடா தெரியும்
இன்றைய மனிதன்
நாளைய திருடன்
அவனுக்குத்தான் புரியும்.

4. மக்கள் குரல்

குவியுங்க காசு பணம் கோடி .. அது
கோடி வரை சேர்ந்து விட்டால்
கோயிலுக்குள்ளே இருக்கும்
ஈஸ்வரனும் உங்களுக்கு ஜோடி

5. என் மகன்

நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்
உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப் பார்த்துச் சொல்லுங்கள்
கொள்ளையடிப்போன் வள்ளலைப் போலே
கோவிலை இடிப்போன் சாமியைப் போலே
வாழ்கின்றான்..
ஊழல் செய்பவன் யோக்கியன் போலே
ஊரை ஏய்ப்பவன் உத்தமன் போலே
காண்கின்றான்.

6. சூரிய காந்தி

பூஜைக்காகப் போறவா போல்
ஆப்பளை போவான் .. அங்கே
பூஜை தேடி பொம்மனாட்டி நேரத்தில் வருவா
சாமியக் கண்டாளா .. அவ
பூஜையைக் கண்டாளா .. வந்த
மூர்த்தியக் கண்டாளா .. பையன்
மூஞ்சியக் கண்டாளா…

7. என் மகன்

அழகாகத் தோன்றும் ஒரு கருநாகம் கண்டேன்
அநியாயம் செய்பவருக்கும் மரியாதை கண்டேன்
அதிகாரக் கூட்டம் ஒன்று சபையேறக் கண்டேன்
தவறென்று என்னைச் சொல்லும் பரிதாபம் கண்டேன்.

8. எங்க ஊர் ராஜா

யாரை நம்பி நான் பொறந்தேன்
போங்கடா போங்க .. என்
காலம் வெல்லும் வென்ற பின்னே
வாங்கடா வாங்க
நெஞ்சமிருக்கு துணிவாக
நேரமிருக்கு தெளிவாக
நினைத்தால் முடிப்பேன் சரியாக
நீ யார் நான் யார் போடா போ..

9. அரங்கேற்றம்

சத்திர சோத்துக்குக் காத்திருப்பார்
இவர் காத்திருப்பார் .. பிறர்
சாப்பிட்ட இலையிலும் சாப்பிடுவார்..
மாப்பிள்ளை படித்தது வேதமடி வேதமடி .. அவர்
மனதில் இருப்பது பூதமடி
உதட்டில் புன்னகை வேஷமடி .. நான்
உள்ளதைச் சொன்னால் ரோஷமடி.

10. கறுப்புப் பணம்

கையிலே பணமிருந்தால்
கழுதை கூட அரசனடி
கை தட்ட ஆளிருந்தால்
காக்கை கூட அழகனடி
பொய்யிலே நீந்தி வந்தால்
புளுகனெல்லாம் தலைவனடி
பூசாரி வேலை செய்யுட்ம
ஆசாமி சூரனடி.

11. தங்கத்துரை

ஊரான் சோறு உலவுது பாரு
ஊருக்குள் சாமிக்கு என்ன பேரு
ஆளா இவரு அதிசயம் பாரு
யாரையும் சரி பண்ணப் பார்ப்பாரு
எங்கேயும் வருவாரு ஏதாச்சும் பெறுவாரு
முடிச்சையும் போட்டு பிரிச்சும் வைப்பாரு
அறிவுக்கும் இவருக்கும் தகறாறு.
.. 1 part remains

More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s