சப்பை மேட்டரு….ஒரு சிலருக்கு .. (பார்ட் இரண்டு)

சப்பை மேட்டரு….ஒரு சிலருக்கு .. (பார்ட் இரண்டு)
kannadasan songs for life reference

அந்தகாலத்தில் கண்ணதாசனால் இயற்றப்பட்ட பாடல்களின் ஒரு சில வரிகள்… இப்பொழுதும் ஒரு சிலருக்கு பொருத்தமாக இருப்பது கண்கூடு..

13. ஜெனரல் சக்ரவர்த்தி

ஐயா ஒரு வகை மைனரடி .. இவர்
ஆத்திரப் படுவதில் மேஜரடி
கையும் காலும் துடிக்குதடி .. இவருக்கு
கல்யாணம் ஆகலை தெரியுதடி
காதலைத் தேடிப் போறாரோ .. இல்லை
கப்பலைப் பிடிக்கப் போறாரோ
பாவம் மனசு பதறுதடி
பக்குவமாக வழி விடடி.


14. சூரியகாந்தி

பரமசிவன் கழுத்திலிருந்து
பாம்பு கேட்டது.. கருடா சௌக்கியமா? யாரும்
இருக்குமிடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்யமே.. கருடன் சொன்னது
அதில்.. அர்த்தம் உள்ளது.
உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
உலகம் உன்னை மதிக்கும் உன்
நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
நிழலும் கூட மிதிக்கும்.

15. நான் நானேதான்

கண்ணொன்று கானும் வாய் ஒன்று பேசும்
இரட்டை வேடமடா
காற்றுள்ள போதே தூற்றிக் கொள் .. என்பது
மனிதனின் பாடமடா
பெண் வெறி கொண்டவன் எவனாலும்
தாயே தாரமடா.. இந்த
பேதைகளை நாம் நினைப்பது கூட
நெஞ்சுக்குப் பாரமடா.

16. பணம்

எங்கே தேடுவேன்.. பணத்தை
எங்கே தேடுவேன்.
பூமிக்குள் புகுந்த புதையலானோயோ
பொன்னகையாய் பெண் மேல்
தொங்குகிறாயோ
சாமிகளடிதனில்
சரண் புகுந்ததாயோ
சந்தியாசி கோலத்தோடு
உலவுகின்றாயோ..
எங்கே தேடுவேன்.. பணத்தை
எங்கே தேடுவேன்.

17. மக்கள் குரல்

வட்டமிடும் ஆள் மீது
சந்தேகம் தோன்றிவிட்டால்
திட்டமிட்டு தீர்ப்பதும் உண்டு .. அது
யாருன்னு பாக்குறீங்க நீங்க .. ஐயா
நீங்க ஒன்னும் அப்படி இல்லீங்க..

18. புன்னகை

காமத்தில் கண்கள் கெட்டால்
ஞானியின் பெயரும் முட்டாள்
மோகத்தில் பிறரைத் தொட்டால்
உன் தாயே நேர்மை கெட்டாள்
ஆணையிட்டேன் நெருங்காதே
அன்னையினம் பொறுக்காதே
ஆத்திரத்தில் துடிக்காதே
சாத்திரத்தை மறக்காதே
எரிமலையைத் தீண்டாதே.

19. விஸ்வரூபம்

என்னை யாருன்னு நினைச்சே
பண மூட்டையை விரிச்சே
ஏரைப்புடிச்சே .. இந்த ஊரைப் பிடிப்பேன்
எடுத்தரை எல்லாம் நடத்தி முடிப்பேன்
கையோடு கள்ளமில்லே.. இந்த
வாயோடு பொய்யுமில்லே
தைரியமிருக்கு சத்தியத்தைக் காப்பேன்
தாயாரின் பாடமய்யா.. இது தாயாரின் பாடமய்யா.

20. 47 நாட்கள்

தொட்டாக்கச் சுட்டுப்புடுவேன்
இந்தியப் பொன்னுங்க
சொன்னாலும் வார்த்தை ஒன்னு
தமிழில் சொல்வேங்க
சூடான வார்த்தை எங்கள் தமிழில் தானுங்க.

21. என்ன முதலாளி சௌக்கியமா?

பாலுண்டு தேனுண்டு பன்னீரில் நீராடி
காரேறு திருமேனி சௌக்கியமா
பொன்னென்ன மண்ணென்ன
செல்வங்கள் என்னென்ன
எல்லாமும் இப்போது சௌக்கியமா?

22. துர்கா தேவி

நான் ஆயிரம் கண் காளி
உனை ஆட்டி வைக்கும் நீலி .. என்
பேரு சொல்லி யாரு வந்தா
காத்து நிற்கும் தோழி.

23. கஸ்தூரி திலகம்

ஆட்டம் முடிஞ்சுதா ராஜா
அறிவு வந்ததா ராஜா
கோட்டை சரிஞ்சுதா ராஜா
கூட்டம் கலைஞ்சுதா ராஜா
என்ன ராஜா சங்கதி என்ன
இப்ப நினைச்சு என்னத்தைப் பண்ண?

.. நன்றி.. கண்ணானகண்மனி, அனுராதா ரமணன்
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s