லஷ்மி வாசம் … உள்ளே / வெளியே
Lakshmi Kadatsham
லஷ்மி வாசம் … உள்ளே
அழகு, தைரியம், வேலைத் திறமை கொண்டவன், வேலை செய்து கொண்டிருப்பவன், கோபமில்லாதவன், தெய்வ பக்தி உள்ளவன், நன்றி மறவாதவன், ஐம்புலன்களையும் அடக்கியவன், எப்போதும் சாத்வீகக் குணம் கொண்டவன் இப்படிப்பட்டவர்களிடம் நான் நிலையாக வசிக்கிறேன்.
தர்மம் தெரிந்தவர்கள், தர்மத்தைக் கடைபிடிப்பவர்கள், பெரியோர்களைத் துணையாக்க கொண்டவர்கள், அடக்கம் உடையவர்கள், அடுத்தவர் மனைத அறிகின்றவர்கள், காலத்தைக் கொஞ்சம் கூட வீணாக்காதவர்கள், தானத்திலும், துய்மையிலும் ஊக்கம் உடையவர்கள், தத்துவ ஞானத்தை விரும்புகின்றவர்கள், பசுக்கள், பிரம்மத்தை அறிந்தவர்கள், பக்தி உள்ளவர்கள், வீடுகளையும், பாத்திரங்களையும் சுத்தமாக வைத்துக் கொண்டு, பசுக்களையும், தானியங்களையும் ஊக்கத்துடன் கவனிக்கும் பெண்கள் முதலியவர்களிடம் நான் எப்போதும் வசிக்கிறேன்.
அடக்கத்தோடு பெரியோர்களுக்குப் பணிவிடை செய்வதில் ஊக்கம் உள்ளவன், துய்மையான மனம், பொறுமை, அடக்கம், சத்தியம், இயற்கையிலேயே நல்ல குணம், மனம், சொல், செயல் இம்மூன்றிலும் துய்மை உள்ளவன், தேவர்களையும், பிரம்மத்தை அறிந்தவர்களையும் பூஜிக்கும் பெண் முதலியவர்களிடம் நான் இருக்கிறேன். எப்போதும் உண்மை பேசுபவர்கள், பார்வைக்கு இனிமையானவர்கள், அழகும் குணமும் உள்ளவர்கள், கற்புள்ளவர்கள் மங்கலகரமான ஆசாரங்கள் உள்ளவர்கள், துய்மையான அலங்காரம் கொண்டவர்கள் இப்படிப்பட்ட பெண்களிடம் நான் இருக்கிறேன்.
வாகனங்கள், கன்னிப் பெண்கள், ஆபரணங்கள் யாகங்கள், மழை பொழியும் மேகங்கள், பூத்த தாமரைக் கொடிகள், யானைகள் மாட்டுக் கொட்டில்கள், அரசர்களின் சிம்மாசனங்கள், கரு நெய்தல், பூக்களும் தாமரைப் பூக்களும் உள்ள குளங்கள் முதலிய இடங்களில் நான் வசிக்கிறேன். கரையிலுள்ள மரங்கள் தண்ணீரில் தழைத்திருப்பதால் அழககாக விளங்குபவை மற்றும் பூக்களால் அர்ச்சனை செய்து கொண்டும் இருக்கும் வீடுகளில் நான் நிலையாக வசிப்பேன்.
லஷ்மி …. வெளியே
தொழில்களைச் செய்யாதவன், நாத்திகள், நன்றி கெட்டவன், ஒழுக்கம் கெட்டவன், கொடும் செயல்கள் உள்ளவன், அடக்கம் இல்லாதவன், பெரியோர்களிடம் பொறமைப்படுபவன் முதலியவர்களிடம் நான் இருக்க மாட்டேன். பராக்கிரமம், உடல் வலிமை, மன உற்சாகம், கௌரவம் முதலியவைகளில் குறைந்து போய், எல்லாவற்றுக்கும் துயரப்படுபவன் முதலியவர்களிடம் நான் இருக்க மாட்டேன்.
மேலும், மேலும் மனதால் யமனைக் கருதாதவர்கள், இயற்கையாகவே மனச்சோர்வு உள்ளவர்கள், அல்பத்தில் திருப்தி அடைபவர்கள் முதலியவர்களிடன் நான் ஒரு போதும் நிலைத்திருப்பதில்லை.
பொருட்களைக் காப்பாற்றாதவள், ஆராய்ந்து செய்யாதவள், எப்போதும் கணவனுக்கு விரோதமாகவே பேசுபவள், அடுத்தவன் வீட்டில் நோக்கம் உள்ளவன், நாண்மில்லாதவள், இப்படிப்பட்ட பெண்ணை விட்டு நான் விலகுகிறேன். ஆசை உள்ளவள், காரியத்தில் திறமை இல்லாதவள், கர்வம் கொண்டவள், சுத்தமில்லாதவள், கலகத்தில் ஊக்கம் உள்ளவள், துக்கத்திலேயே விருப்பமுள்ளவள், எப்போதும் படுத்திருப்பவள், இப்படிப்பட்ட பெண்ணிடம் நான் இருக்க மாட்டேன்.