நேற்று ராத்திரி … அம்மா…

நேற்று ராத்திரி … அம்மா…

அப்பப்பா ஒரே வெயில் தாங்க முடியலைடா சாமி…. போதாத குறைக்கு இந்த மின்வெட்டு வேற ஓடற பேனையும், சூடான காற்றையும் அறையில் நிரப்புவதை சடார்ன்னு நிறுத்திடுது. நேற்றைக்கு மட்டும பலமுறை மின்வெட்டு, ஒரு கட்டத்தில் இன்வெர்ட்டர் கடுப்பாகி இன்வெர்ட்டர் மோட்டில் இருந்து நார்மல் மோடுக்கு மாறவே மாட்டேன் என்று அடம் பிடிக்க.. வேற வழியில்லாமல் பேட்டரியிலேயே ஒட்ட, ஒரு கட்டத்தில் 4 மணிசுமாருக்கு பேட்டரியும் அவ்வோளதான் மச்சி.. சரக்குன்னு ஊத்தி மூடிக்கொண்டது….

நமக்கு 4 மணிக்கே முழிப்பு வந்துட்டதால.. எங்கே தூங்கினோம், இன்வெர்ட்டர் படுத்திய பாட்டால் அரை மணிக்கு ஒருதரம் எழுந்து கரண்ட் மோடுக்கு மாறியதா என பார்த்தலியே தூக்கம் போச்சு, செல் போன்லே பேசமா இளையராஜா பாட்டை போட்டுக் கேட்டுக்கிட்டே பால்கனியிலே வந்து நின்னுக்கிட்டேன். நகரமே கும்மிருட்டு… ஒரு சில வீடுகளில் இன்வெர்ட்டர் போட்டிருந்தாலும், சும்மா லைட் எதுக்குன்னு அனைச்சு வச்சிருக்காங்க… நம்ம காவல் துறை சும்மா சொல்லக் கூடாது அந்த இருட்டிலும், ஒரு காவலர் பைக்கில் பொருத்திய சைலன்ஸ் அலற விட்டு தெரு தெருவாக (பணக்காரர் குடியிருக்கும் தெருக்கும் மட்டும்) சென்று வந்து கொண்டிருந்தார்.

நேற்று சாப்பிட்டு வந்தவுடனே இருந்து, சென்னையில் பூகம்பம் பல மாடிக்கட்டிடங்கள் காலின்னு ஒரே புரளி மயம்… அங்கே ஒருவரை போனில் பிடிச்சு கேட்டாக்காக அப்படித்தான் சொல்றாங்க நான் எதுவும் பார்க்கலைன்னாரு… எல்லாரும், டிவி பார்க்க அடிச்சு பிடிச்சு போனாக்கா, இரண்டாவது முறை பூகம்பம் வந்துட்டது, எஸ்எம்எஸ் 10 வது வந்திருக்கும் சென்னைக்கு சுநாமி 4.57க்கு வருதுன்னு… ஒரே களோபரம் தான் போங்க… எப்படியாவது இந்த ராத்திரி கரண்ட் கட் பன்றதா விட்டாத் தேவலை…

More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s