வந்துடுச்சு அடுத்த சேர்க்கை….
Admission.. is ready
ஒவ்வொரு வருடம் போனால், அந்தந்த வீட்டில் உள்ள வாண்டுகள், சிறுசுகள் தாங்கள் அகாடமி எனப்படும் பள்ளிக்கூட, கல்லூரி வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தப்படுதலும், வசதியில்லாதவர்கள் கல்விக்கட்டணங்களை செலுத்துவதற்கு படும்பாடு, எந்த கோர்ஸ் எடுப்பது, எந்தக் கல்லூரியில் இடம் பிடிப்பது என அந்தசின்னஞ்சிறுசுகளின் வாழ்க்கை பொருளாதாரம் மற்றும் தெரிந்தெடுக்கும் படிப்பைப் பொறுத்தும் அமைகிறது.
இதற்கென பெற்றோர்கள் பீரிமியர் இன்ஸ்டியூட் எனப்படும் மிக முக்கியமான கல்விநிறுவனங்களில் இடம் பிடிக்க தவம் செய்வதும், இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியவையாக, தங்களின் குழந்தைகளின் விருப்பம் மற்றும் எந்தத்துறையில் ஆர்வம் ஆகியவற்றைப் பற்றி எந்தவிதமான கேள்வியும் கேட்டுப் பெறாமல் தாங்களாகவே இதைப்படி நல்லாருக்கும் என்ற ரீதியில்
பெற்றோர்களின் விருப்பத்தை குழந்தைகளிடம் திணித்து இதை படித்தே ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்தி சேர்த்து விடுகிறார்கள்.
தற்காலத்தில், பணம் என்பது மிக முக்கியமானது மற்றும் பத்தும் செய்கிறது, எனவே ஒவ்வொருவரும் விரைவில் பணம் சம்பாதித்து வாழ்க்கையில் செட்டிலாகிவிடவே விரும்புகிறார்கள். ஆனால், தனிப்பட்ட வாழ்க்கையின் விருப்பு வெறுப்பை வெறும் பணம் சம்பாதிக்க வேண்டி கைவிட்டுவிடுகிறார்கள்.
இந்த அகாடமி ரேஸில் முன்னிலையில் இருப்பது, பிள்ளைகளை டாக்டராக்கிவிடுவது என ஒவ்வொருவரும் நினைப்பது. இதில் மிகவிரைவில் பணம் சம்பாதிக்க முடியும் என நினைக்கிறார்கள். மேலும், அதற்கடுத்தபடியில் இருக்கும் பொறியாளர்கள், மென்பொறியாளர்கள் இவற்றில் ஒரு சில பெற்றோர் கொஞ்சம் கூட பிள்ளைகளின் விரும்பம் இல்லாமல் படிக்க நிர்பந்தப்படுத்தப்படுவதால் விளைவுகள் பலவாறு உருவாகிறது.
நடைமுறையில் குழந்தைகளின் விருப்பு வெறுப்பு அறிந்து தேவையான படிப்புகளை தெரிந்தெடுத்து படிக்க வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுப்பதே சிறந்த வழிமுறையாகும். அப்பொழுது தான், அவர்களை சிறந்த பொறுப்பான, வாழ்க்கையின் பிடிப்பை உணர்ந்து நடந்து கொள்ளும் குடிமகனாக உருவாக்கப்படுவார்கள்.
ஏனெனில், பணம் தான் அனைத்துவிதமான பாவங்களைச் செய்யத் தூண்டும் தூண்டுகோல். இதை மறந்துவிடக்கூடாது.
submit_url = “”