வழக்கு எண். 18/9 .. எனது பார்வையில்

வழக்கு எண். 18/9 .. எனது பார்வையில்
valakku enn 18/9

பாலாஜி சக்திவேல், ஒரு தரமான இயக்குநராக பரிணமித்து அனைவராலேயும் விரும்பி பார்க்கப்பட்ட காதல், அங்காடித்தெரு மற்றும் தற்சமயம் வழக்கு எண். 18/9. நாம் தெருவில் சாதாரணமாக கிராஸ் செய்து போகும் போது பிளாட்பாரத்தில் விற்பனையாகும் உணவு கடைகளை ஒருவித சங்கோதத்துடன் கடந்து செல்கிறோம். ஆனால், இந்த படத்தைப் பார்த்த பிறகுதான், அந்த பிளாட்பார இட்லிக்கடையிலும் ஒரு கணத்த கதைக்களம் மற்றும் சோகம் இழையோடும் கதாபாத்திரங்கள் கிடைக்கிறார்கள். (சரி சரி சீக்கிரமாக விமர்சனத்தை சொல்லு…..)

1. ஒவ்வொரு காட்சியையும் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் ஏனெனில் நீங்கள் பார்த்த காட்சியின் மறுபக்கம் ஒரு காட்சி அடுத்தடுத்து காத்திருக்கிறது. உதாரணமாக, ஒருசமயம் காட்சி நடந்து கொண்டிருக்கும்பொழுது, ஒரு ஆம்புலன்ஸ் கடந்து செல்வது, ரோட்டில் கார் செல்லும்பொழுது ஒரு காலி பாட்டில் கிடப்பது, காரைத் தள்ள சொல்லி முக்கிய கதாபாத்திரத்தை ஒருவர் கேட்டுக் கொள்வது… போன்று தொடர் காட்சிகளாக அமைத்திருக்கும் பாங்கு சூப்பர்….

2. இளவயது விடலைபசங்க மற்றும் பெண்களை கதாநாயகன், கதாநாயகியாக பொருத்தமாக காண்பிப்பது, நல்ல தேர்வு
அதிலும் அந்த கணவு கானும் விடலைகள் குடும்பம் நடத்துவது அப்பப்பா அருமையான விஷீவல்…

3.இளவயதில் படிக்கும் பசங்களை குடும்பத்தின் வறுமை சூழலால் கொஞ்சம் பணத்திற்காக வருடக்கணக்காக உழைக்க, வடநாட்டிற்கு அழைத்துத் செல்லும் ஏஜெண்ட் மற்றும் உழைப்பை உறிஞ்சும் முதலாளி, கூட பணிபுரியும் நண்பர்கள் என நெஞ்சை பிழியும் உண்மைகள்.. நம்ம வீட்டு வாண்டுகள் எவ்வளவோ கொடுத்து வைத்துள்ளார்கள் போல…

4. ரோட்டில் மயங்கிவிழுந்த பையனை சுற்றிநின்று வேடிக்கை பார்த்தும், ரோசி என்னும் விலைமாதைத்தவிர யாருக்கும் இறக்கம் இல்லாமல் கடந்து செல்வதும், சாப்பிட ஏதாவது கொடுங்க என்று யாரிடம் கேட்டும் தங்கள் டிபன்பாக்ஸ்களை இறுக்கமாக பிடித்துகொண்டு அனைவரும் நடையைகட்டுவது உறுத்தல்கள்.

5. அழுக்குத் தண்ணியை பாதாளசாக்கடையில் ஊற்றாமல் தெருவில் ஊற்ற சொல்லி முதலாளி சொல்வதும், பின்னர் பிரச்சினையாகி உடனே மீண்டும் பாதாளசாக்கடையை பயன்படுத்த சொல்வதும் எதார்த்தம்..

6.கிராமத்தில் கூத்துக்கட்டும், நபர் வேலை வாய்ப்பில்லாமல், நகரத்திற்கு வந்தும், நட்புக்காக உதவுவதும், முதலாளி திட்டியதும் ரோசமாக வேலையை உதறுவதும்… மக்களின் எதார்த்த வாழ்க்கையை பிரதிபலிக்கும் எதார்த்த சினிமா…

7.பணம் இருந்தால் கொலைகூட செய்யலாம், அதன்பின் எந்தபிரச்சினையும் எழாமல் பார்த்துக்கொள்ள அரசாங்க அதிகாரிகள் (பணம் வாங்கிக்கொண்டு) இருக்கிறார்கள் என்பதையும், எதர்த்தமான கோர்ட் சீன்களையும் இந்தப்படம் பதிவு செய்திருக்கிறது. அதிலும், அமைச்சரின் தெரிந்தவர் என்று தெரிந்தும் கட்டிங்போட பலமான ஏற்பாடுகளை படிப்படியாக செய்யும் இன்ஸ்பெக்டர்.. ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன்களிலும் நடக்கிறதை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது.

8. பகட்டு வாழ்க்கை வாழ்பவர்களின் பணத்தேவை இல்லாதால் பிறர் அனைவரையும் அவர்களின் பகடைகளாக உருட்டி விளையாடும் பணக்கார பசங்கள்.. அவர்களின் கோர விளையாட்டால் கருகும் இளம் பெண்கள்… இதுவே, கதையின் கோர்…

9. பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டு அதனால் ஒரு அப்பாவி பாதிக்கப்படுவதும், நீதி தேவைதையின் கண்கள் கட்டப்பட்டு நீண்ட நாட்களாகிவிட்டது என்று என்னும் நேரத்தில் எதற்காக பணம் பெற்றுக்கொண்டு தவறு இழைக்கப்பட்டதோ அந்த நபரே தவறின் வலியை அனுபவிக்கும்மாறு முடிவை அமைத்திருப்பது நல்ல திருப்பம்.

10. செல்லுலாய்டின் முக்கிய பதிவுகளின் வரிசையில் இந்தப் படத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்…. ஏனெனில் 60 சதவீத மக்கள் படும் அவதியின் ஒரு சிறிய பதிவு இது.

More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz

6 thoughts on “வழக்கு எண். 18/9 .. எனது பார்வையில்

 1. வணக்கம் உறவே
  உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
  http://www.valaiyakam.com/

  ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
  நன்றி

  வலையகம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s