கலகலப்பு @ மசாலா கபே .. Tamil Film Review

கலகலப்பு @ மசாலா கபே .. Tamil Film Review
மற்றுமொரு போலீஸ்சே திருடும் கதை.. சிரிக்க சிரிக்க படமெடுக்க வேண்டும் என்று சுந்தர் சி. ஆசைக்கேற்ப கும்பகோணத்தை கதைக்களனாக மாற்றி, இரண்டு இளம் கதாநாயகிகளான அஞ்சலி, ஓவியாவை ஆடைஅவிழ்த்து அரைகுறை அந்தக்கால சில்க், அனுராதா டைப்பில் மார்பு பிளவுகள் போதும் போதும் என தெரியும் அளவிற்கு கவர்ச்சிப் படையலுடன் வெளிவந்திருக்கிறது கலகலப்பு.

புதுமையாம், ஒரே பாட்டில் இரண்டு ஜோடிகள் பாடிக்கொண்டு டான்ஸ் ஆடுவது…

படத்தில் ஒரு பழைமையான ஓட்டல், விலைமாதர்கள், மாமாக்கள், போலீஸ் டம்மிகள், பலசாலி ஆனா இல்லை என்று வடிவேலு ஆரம்பித்த பயில்வான் காட்சிகளை மறுபடியும் சந்தானம் தனது வெர்சனில் நடித்திருக்கிறார். நாய் முக்கியமான பாத்திரமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

பழையபட பாணியில் கிளைமாக்ஸ் இருப்பினும் தியேட்டரில் பெரும்பாலோனர் சிரித்து விடுகிறார்கள்.. படத்தில் குறிப்பிடும்படியாக கும்பகோணத்தை சுற்றி படம் எடுத்த விதம், காமெடிகள் பழையது என்றாலும் புதியதாக தோன்றுகிறது. தேர்தலில் ஜெயிக்க இலவசமாக பால் வழங்க ஒரு வேட்பாளர் தயார் என்றால், அவரை தோற்கடிக்க இலவசமாக டாஸ்மார்க் சரக்கை வழங்க மற்றுமொரு கோஷ்டி தயாராகவும், இந்த ஐடியா காரணமாக ஜெயித்தும் விடுவார்கள் போலிருக்கிறது. ஆணியே புடுங்க வேணாம்ன்னு வசனம்வேற…. விமல், சந்தானம், இளவரசன் நடிப்பு தேவலாம்.. ஆனா இன்னொருத்தர் பன்றாரு பாருங்க ஓரே மாதிரி நடிப்பு (அதாங்க நம்ம தமிழ்ப்பட உறீரோ) அதைத்தான் தாங்க முடியலை…

ஒரு பழைய கால ஓட்டல், அதை சோதனை செய்யும் சானிடரி இன்ஸ்பெக்ட்ர் அஞ்சலி, ஓட்டல் சொந்தக்காரர் ஓவியா, பழைய டப்பா ஸ்கூட்டர் அதை வைத்து அஞ்சலி மேல் மோத காதல் ஆரம்பம்.. பின்னர் கல்யாண சண்டை.. வைரங்கள் சென்னையில் இருந்து திருச்சிக்கு கடத்தப்பட்டு, பல பேர் கையில் மாறி மாறி கடைசியில் அது போக வேண்டிய இடத்திற்கு போய் சேர்ந்து விடுகிறது இது தான் கதையின் ஓன்லைன். மொக்கைப்படம்ன்னு சொல்ல முடியாது…. பார்க்கலாம் ரகம்தான்.
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz

Advertisements

4 thoughts on “கலகலப்பு @ மசாலா கபே .. Tamil Film Review

  1. கலகலப்பு பார்த்தேன் சிரித்தேன். திரையரங்கில் கைதட்டி நிறைய இடங்களில் சிரிக்கும் ரசிகர்களைப் பார்த்ததும் எனக்கும் மகிழ்ச்சியாகிவிட்டது. ஒரு முறை பார்க்கலாம். படம் குறித்த நல்ல விமர்சனம். எனக்கு சிவா நடிப்பு பிடித்திருந்தது.

  2. முதல்ல Cliché -க்கும் Cleavage -க்கும் difference தெரிஞ்சுட்டு அப்புறம் விமர்சனம் எழுதறது நல்லது. இல்ல தமிழ் வார்த்தைகளையே பயன்படுத்துவது சாலச்சிறந்தது.

    • பிழையை கூட்டிக்காட்டியதற்கு நன்றி கருங்குயில்…. திருத்தப்பட்டது…

      மற்றபடி, விமர்சனம் செய்வதில் ஏதும் தவறில்லையே…

      சிவபார்க்கவி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s