சட்டுன்னு குனி…. திரைவிமர்சனம்
சமீபத்தில் வெளியான சகுனிப் படத்தைப் பார்ப்பவர்களை சட்டுன்னு குனியவைக்கிறார்கள். (விளையாட்டுப்போல கதைவிடுபவர்கள்), தனது பூர்வீகமான காரைக்குடி வீட்டை இடித்துவிட்டு இரயில்வே மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை நிறுத்த அன்னாச்சி (கார்த்திக்) சென்னை வருகிறார். வந்த இடத்தில் பார்ப்பவர்கள் எல்லாம் (சந்தானம் உள்பட) நம்பிக்கை விதையை விதைப்பதற்குப் பதில், கருவேப்பிலையாக பயன்படுத்தியதை அனுபவபூர்வமாக அறிந்து அவர்களின் வழியிலேயே மகாபாரதக்கதையின் சகுனியின் குறுக்கு வழி பாய்ச்சல்களின் மூலம், டம்பி பீஸ்களையெல்லாம் உச்சத்திற்கு கொண்டுவந்து,
1. இட்லிகாரம்மாவை கவுன்சிலராக்கி, மேயராக்குவது
2. தெருவோர சாமியாரை, கார்ப்பரேட் சாமியராக்குவது
3. டம்மி கட்சி தலைவரை முதல்வராக்குவது
(கூடவே சுத்தும்/உதவும் சந்தானத்திற்கு எதுவும் செய்யாதது கொஞ்சம் இடிக்குது) முடிவில் முதலமைச்சரே வீட்டை இடிக்கும் திட்டத்திற்கு மூடுவிழாசெய்து உத்தரவு நகலை இரயில்வே ஸ்டேஷன் வந்து கார்த்திக் உடன் கொடுக்கிறார்.
விறுப்பான கதையை பிய்த்து..பிய்த்து சம்பவங்களை கமல், ரஜினி, ஸ்ரீதேவி என காலத்தால் மறக்கமுடியாத சினிமா ஸ்டார்களின் பெயரால் உருவாக்கி சுவாரசியத்தை கூட்டிய டைரக்டருக்கு ஒரு சொட்டு.
கதாநாயகி ஒயிட்டோ ஒயிட், கார்த்திக்குடன் வழிவதே அவருக்கு தரப்பட்ட முக்கியவேலை, மாமியார் ரோஜா ? வில்லிமாதிரி கர்ஜினை செய்கிறார். சந்தானம் இருக்கும் காட்சிகளையெல்லாம் நீக்கிவிட்டு இந்தப் படத்தைப் பார்த்தால் ரொம்ப டென்ஷனாகிவிடுவோம்… அவ்வளவிற்கு கார்த்திக்/சந்தானம் ஜோடி செட் ஆகிறார்கள். இசை பெரியஅளவில் மனதில் நிற்காவிட்டாலும், பரவாயில்லை இரகம் தான். ஒளிப்பதிவு நன்று,
நடைமுறையில் சாமியார்கள் உருவாதல், மூட்டை மூட்டையாக பணம் கறப்பது, அரசியல் வாதிகளின் மனதை தட்டி கேள்வி கேட்பது (அரசியலில் இருப்பது மக்களுக்கு நன்மை செய்யவா என்ற கேள்விக்கு இல்லை என்பதை உண்மையாக ஒத்துக்கொள்வதும் சின்னவயதில் போராட்ட குணம் இருந்ததை ஒப்புக்கொள்வதும் … அரசியல்கட்சித் தலைவரின் சுயத்தை வெளிக்காட்டுவதாக இருந்தது). பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தும் வகையில் செல்போன் மூலம் எம்எம்எஸ் அனுப்பி அதை சிஎம் பார்க்க சொல்கிறார் என்று மீடியா மூலம் அம்பலபடுத்தி, அடுத்தநிலை தலைவர் விர்ன்னு முதல்வராவது செம கில்லாலடி..
சகுனி… நல்ல பொழுதுபோக்கு..