ஸ்ருதி ஆறு… சே.சே. குருதி ஆறு..

ஸ்ருதி ஆறு… சே.சே. குருதி ஆறு..
Blood Donation

லேட்டஸ்ட் பிகர் ஸ்ருதி கோலிவுட்டை கலக்குவதால், குருதி ஆறுன்னு பேரு வச்சா அது ஸ்ருதி ஆறுன்னு டைப் ஆகிடுது. குருதி.. இந்த பூவுலகில், மிக முக்கியமான அத்தியாவசியமான உயிர் வாழும் பாலினங்கள் அனைத்துக்கும் குருதி.. அதாங்க இரத்தம்.. மிகமிக முக்கியம்.. இரத்தம் இல்லாதவர்கள், இரத்த ஓட்டம் இல்லாதவர்கள், இரத்த சோகை உள்ளவர்கள் வாழ்க்கையை ஓட்டுவதே சிரமம்தான்.

ஜீன் 14, இரத்ததான விழிப்புணர்வு நாள்.. இரத்தத்தில் பலவகையும், ஒவ்வொரு வகையினருக்கும் தனித்தனி குணநலன்கள் உள்ளதாக ஒருசிலர் தெரிவிக்கிறார்கள். சாதாரணமானவர்கள் கூட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் இரத்தப் பரிசோதனை செய்து, அதில் றீமோகுளோபின் எவ்வளவு இருக்குன்னு மருத்துவர் பார்ப்பதையும் நாம் பார்க்கிறோம்.

அந்த காலத்தில், மெகா சண்டைகள் ராசாக்களுக்கிடையே நடைபெற்ற பொழுது, யுத்த பூமிகள் கால்வைக்க இயாலாத வகையில் இரத்தம் ஆறாக ஒடுமாம்… அதேபோல் காட்சியை நம்ம மேட்டூர் டேம் உள்ள முனியப்பன் கோவில் வளாகத்தில், ஆடி மாதம் திருவிழா நேரத்தில் ஆயிரக்கணக்கான ஆடுகள், கோழிகள் பலியிடுவதால் இரத்தமே அந்த குறுகிய இடத்தில் கால் வைக்க இடமில்லாமலும், நேரம் ஆக ஆக அந்தக்குருதிகள் வாடை எடுக்க வைப்பதாகவும், அதைப்பார்க்க நேர்ந்த எனது உறவினர் ஒருவர் மயக்கமடைந்து விட்டார்.

சிறிது காலத்திற்கு முன் எனது தந்தை விபத்தில் சிக்கிய பொழுது, அரசு மருத்துவமனை டாக்டர் உடனே ஆப்பரேஷன் செய்யவேண்டும் என வற்புறுத்தியும், அதே நேரத்தில் எனது உறவினர் ஒருவர் டாக்டர் எதேச்சையாக அங்கே வந்து பரிசோதித்து தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தியும், அந்த மருத்துவர் பெயர் பார்த்தசாரதி தற்சமயம் சென்னையில் வசிக்கிறார்… மிகவும் பொறுப்பாக எனது தந்தையை சோதித்து, உடனே இரத்தம் ஏற்ற வேண்டும் என்று கூறி ஒரு பெட்டில் என்னை படுக்க வைத்து உடனுக்குடன் இரத்தம் நோயாளிக்கு செல்லும்மாறு செய்து எனது தந்தையை மிக விரைவாக குணப்படுத்தினார்.

சமீபத்தில் எனது சித்தப்பா ஒருவருக்கு ஆப்பரேஷன் செய்ய வேண்டியிருந்ததால் இருவர் இரத்தம் தரவேண்டும் என தொலைபேசியில் செய்திவரப்பெற்று (எனது சித்தப்பாவின் பிளட் குரூப் வேற..) சென்றால், பரவாயில்லை உங்களுடைய பிளட் குரூப் என்னவாக இருந்தாலும் எனக்கூறி 350 எம்எல் இரத்தைதை எடுத்துக் கொண்டு ஒரு கூல்டிரிங்ஸ் கொடுத்து அனுப்பினார்கள். அநேகமாக 210 நாட்களுக்குள் ஒருவரது இரத்தத்தை பயன்படுத்த வேண்டுமாம் எனவே, பிளட் பேங்கில் வைத்திருக்கும் பிளட்டை முதலில் வந்ததை முதலில் பயன்படுத்துவது என செய்கிறார்கள். (இதில் நோ.. சென்டிமெண்ட் எனது இரத்தம் எனது உறவினருக்கே என்ற பேச்சுக்கே இடமில்லை )

இளம் பெண்கள், போதுமான ஆரோக்கியமானவர்கள் கூட (மாதவிலக்கினைப் பற்றி பிரச்சினை இல்லை) இரத்தத்தானம் செய்வதில் எந்தபிரச்சினையும் இல்லை என்று எளிதாக முன்வருகிறார்கள்…. நம்ம ஊரிலோ அடிக்கடி விபத்து ஏற்பட்டு ஏராளமானார் இரத்த இழப்பினாலேயே டிக்கட் வாங்கிவிடுகிறார்கள். அதனால், இரத்தம்( ஈவுஇறக்கம் ) உள்ளவர்கள் அனைவரும் வாழ்வில் ஒருமுறையேனும், இரத்த தானம் வழங்க முன்வரவேண்டும்.. திருச்சியில் ஒருவர் (கனகராஜ், பிட்டர், மாநகராட்சி) 400 முறைக்கும் மேல் இரத்த தானம் வழங்கியிருப்பதாக செய்தி. முகலாய அரசர்கள் நூர்ஜகான், உறாஜகான் போன்றவர்கள் கூட குறிப்பிட்ட கால இடைவெளியில் குருதி இழப்பு என்னும் சடங்கை செய்ததாகவும், அதனை செய்ய ஐரோப்பில் இருந்து வந்த நாடோடி வைத்தியர் செய்ததாகவும் பதிவுகள் உள்ளன.. அப்பொழுதுதான் தனது கெட்ட இரத்தம் போய் நல்ல இரத்தம் உருவாகும் என நம்பினார்களாம்.

வாழ்த்துக்கள்… இரத்தம் வழங்க..

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s