தமிழா..தமிழா.. நாளை உன்நாளே…

தமிழா..தமிழா.. நாளை உன்நாளே…

இந்த பாட்டைக் கேட்கும்போதே தமிழருக்கு மெய்சிலிரிக்கும் அது அந்தக் காலம், ஒரு பிரபல தமிழர் இந்திய ஜனாதிபதியாக உதவாத தமிழர்களும் இருப்பது இந்தக்காலம்.
(1) மேட்டுக்குடி மக்கள் மட்டுமே பயன்படுத்திவந்த வானூர்திகளின் பயணச்சீட்டுக்கள் மிகவும் மலிந்து குப்பனும் சுப்பனும் பயணம் செய்யும் அளவிற்கு இருந்தது ஒரு காலம், மீண்டும் மேட்டுக்குடி மக்கள் மட்டுமே கொழுத்த பணக்காரர்கள் மட்டுமே பயணம் மேற்கொள்ளும்படி அனைத்து விமானங்களும் விலையேற்றிவிட்டது.

(2) தமிழக தலைநகருக்கு அண்மையில் செல்ல நேர்ந்தது.. என்ன ஆச்சரியம்.. இரயிலில் கூட்டமில்லை (புறநகர்), பேருந்தில் கூட்டமில்லை அட தெருவில் கூட கூட்டமில்லை.. சாதாரணமாக ஒரு நகரத்தில் இருக்கும் அளவிற்கு மட்டுமே கூட்டம் இருக்கிறது. டிராபிக் மட்டும் பெரிய வாகனங்களால் அல்லல்பட்டுக்கொண்டிருக்கிறது. (ஏன்…ஏன்… பெட்ரோல் இல்லை.. பஸ் டிக்கட் விலைகூட.. இரயிலில் சென்றால் திண்பண்டங்களின் விலைகூட.. எனவே மக்கள் மிகவும் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே பயணங்கள் மேற்கொள்வதாகத் தெரியவருகிறது.)
(3) மழை பொய்த்துவிட்டது… இந்த வருடம் காவிரியில் மணல் கூட குறைந்துவிட்டது.. வெறும் களிமண் தான்.. செடிகொடிகள் தான்.. இருகரைத்தொட்டுத் தழுவும் தண்ணீர் ஆடிப்பெருக்கில் காணக்கிடைக்காதது .. கற்பனையில் மட்டுந்தான் இனிமேல்..

(4) சாதாரண டீக்கடை முதல் பெரிய பெரிய ஓட்டல்கள் பயன்படுத்தும் எரிபொருள் கமர்சியல் கேஸ் சிலிண்டர்கள் (சுமார் 1600 ரூபாய்) அதனால் அனைத்து பண்டங்களும் டண்டன்க்கா டணக்கா கணக்கா விலை விர்….
(5) 40 சதவீத கணிணிபயின்ற மாணவர்களுக்கு வேலையில்லையாம்… கல்லா கட்டும் 67 பொறியியல் கல்லூரிகள் சரியான பணியாளர்களைக் கொண்டும் உபகரணங்களைக் கொண்டும் நடத்தவில்லையாம்… இந்த வருடம் மார்க்க்கைத் துரத்த மாணவர்களும் பெற்றோரும் அலையாயுவது தொடரத்தான் செய்யுது..
(6) ரியல் எஸ்டேட்… எங்கே தான் நிலம் இருக்கோ.. காட்டுக்குள்ளே எல்லாம் வேலிபோட்டு கலர் பெயிண்ட் அடித்து சின்னத்திரை நட்சத்திரத்தைக் கொண்டு விளம்பரம் எடுத்து லோக்கல் முதல் முக்கிய சேனல்வரை கட்டி அடிக்கிறார்கள்.. வியாபாரம் எப்படியோ… ஆனால், நடுத்தரம் இனிமேல் இடமோ வீடோ கட்ட வாய்ப்பு குறைவுதான். வீட்டு வாடகையும் விர்… சாதாரண நடுத்தர 2 பெட்ரூம் குடித்தன வீடு சுமார் 8000 ஆயிரமாம்.
(7) டாஸ்மார்க் சரக்கெல்லாம் விர்… அதனால் குடிமக்கள் கோபத்தில் விர்..

விலைவாசி குறை என்ன செய்யலாம் …

1. முதலில் பெட்ரோல் / டீஸல் / கேஸ் ஆகியவற்றில் 25 சதவீதம் விலைகுறைக்கவும்
2. அனைத்து பொருட்களுக்கும் விலைக் கட்டுப்பாடு அவசியம் அரசே விலை நிர்ணயம் செய்யலாம் (அத்தியாவசிய பொருள்கள் அரிசி, பருப்பு, எண்ணெய்)
3. விலைநிலங்களை வீட்டுமணையாக்க தடைவிதிக்கலாம். மீறினால் அந்த நிலத்தை விற்றவரையும் வாங்கியவரையும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கலாம்.
4. வாடகை கண்ட்ரோல் ஆக்ட்படி நடவடிக்கை எடுக்கலாம்.
5. பேருந்து கட்டணம் குறைக்காவிட்டாலும், எக்ஸ்பிரஸ் பஸ்களுக்குப் பதிலாக சாதரணகட்டண பேருந்துகளை விடலாம்.
6. அரசின் அநாவசிய செலவினங்களைக் குறைக்கலாம்.
7. அரசுத்துறைகளில் ஏற்கனவே இருக்கும் பணியிடங்களில் 20 சதவீதம் குறைக்க நடவடிக்கை எடுக்கலாம்.. (ஏனெனில் கணிணிமயப்படுத்தி நடவடிக்கைகளை விரைவுப்படுத்தலாம்)
8. மணல் கொள்ளையைத் தடுக்கலாம்…
9. குடும்ப கட்டுப்பாட்டுத்திட்டத்தினை மீண்டும் அமல்படுத்தலாம். ஒருகுடும்பம் ஒரு குழந்தை..
10. 4 சக்கர வாகனம் வாங்குவதைக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

இது..அதிகப்பிரசங்கித்தனமா .. அறிவுஜீவித்தனமா
நீங்க சொல்லுங்க.. மாம்ஸ்…
Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz

Advertisements

2 thoughts on “தமிழா..தமிழா.. நாளை உன்நாளே…

  1. டாஸ்மார்க் சரக்குகளின் விலையேற்றத்தைக் குறைக்கும்படி கேட்டுக் கொள்கின்றேன். கருணாநிதி ‌ அரசு ஆவன செய்யவேண்டும். என்னது!….. கருணாநிதி ஆட்சியில் இல்லையா? நான்தான் மப்பில் உளறுகின்றேனா?………

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s