அழிக்க வேண்டியது ஆங்கிலம்.. தழைக்க வேண்டியது தமிழ்

அழிக்க வேண்டியது ஆங்கிலம்.. தழைக்க வேண்டியது தமிழ்

தமிழார்வம் மிக்க பலரும், தங்கள் பேச்சுக்களிடையே தமிழை உயர்த்தியும், ஆங்கில மோகத்தினால் தமிழை அழிய விட்டு விடக்கூடாது என தடாலடியாக பேட்டி தட்டிவிடுகிறார்கள். அதில் சமீபத்தில் தமிழகத்தின் முக்கிய நகரத்தில் நடைபெற்ற இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் கிளை சார்பில் நடைபெற்ற பட்டய கணக்காளர்கள் தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், நமது மதுரைப் புகழ் ( பீடாதிபதி நித்தியானந்தைப் பற்றி குறிப்பிடவில்லை… ), திரைப்படங்களில் அவ்வப்பொழுது தலைகாட்டுவதும், பட்டிமன்றங்களில் சாலமன் பாப்பையாவின் வாரிசாக உருவான அண்ணல் கு. ஞானசம்பந்தன் அவர்களின் சிரிப்பும் சிந்தனையும் என்கிற தலைப்பில் பேசிய பேச்சுக்களைப் பார்க்கலாம்,

பொதுவாக பட்டிமன்ற பேச்சாளர்களின் பேச்சை நேரில் கேட்பது குறைந்து கொண்டு வருகிறது. நாங்கள் மேடையில் பேசினால் அரங்கத்தில் இருப்பவர்கள் பக்கத்தில் இருப்பவர்களுடன் பேசிக்கொண்டு இருப்பார்கள். ஆனாலும், நாங்கள் நகைச்சுவையாக பேசி அவர்களைது கவனத்தை எங்கள் பக்கம் இழுத்து விடுவோம். நான் ஒரு திருமண விழாவில் பேசுவதற்காக சென்றிருந்தேன் அந்த விழாவுக்கு வந்திருந்த 3 ஆயிரம் பேரும் ஆளுக்கொரு பக்கம் பேசிக்கொண்டு இருந்தததால் நான் பேசியதை யாரும் கேட்கவில்லை. அப்போது தான் நினைத்தேன், திருமண மண்டபத்தில் பேசுவது தற்கொலைக்கு சமமானது என்று.

பட்டய கணக்காளர்களின் தொழில் எண்களுடன் சம்பந்தப்பட்டது. எண் முதலில் வந்ததா, எழுத்து முதலில் வந்ததா? என்றால் எண் தான் முதலில் வந்தது என்பதை திருவள்ளுவர் தனது எண்னும் எழுத்தும்… என்று தொடங்கும் குறளில் விளக்கமாக கூறி இருக்கிறார். நமது கணித முறையானது அபாரமானது. ஆனால் இன்றைய மாணவர்களிடம் ஐந்தும் ஐந்தும் எத்தனை என்று கேட்டால் கால்குலேட்டரை தேடுகிறார்கள்.

அமெரிக்காவில் வசிக்கும் தமிழ் குடும்பத்தினர் தங்களது குழந்தைகள் அங்குள்ள சூழ்நிலையில் வளர்ந்தாலும் தாய் மொழியை மறந்து விடக்கூடாது என்பதற்காக அங்குள்ள பெண்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து தமிழ் பாடம் நடத்துகிறார்கள். ஆனால் இங்குள்ள பெண்கள் ஆங்கில மோகத்தினால், அம்மா என்று அன்பாக அழைக்கும் குழந்தையை மம்மி என சொல் என்று கூற வற்புறுத்துகிறார்கள். இப்போது, மம்மி என்ற ஆங்கில வார்த்தை மாம் என்றும் டாடி என்ற வார்த்தை டாட் என்றும் சுருங்கி போய்விட்டது.

பாரதியார் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, பிரெஞ்சு, சமஸ்கிருதம் உள்பட 11 மொழிகளில் பேசும் திறமை பெற்றிருந்தாலும் நான் அறிந்த மொழிகளிலேயே தமிழைப் போல் இனிமையானது இல்லை என்றார். மாணவர்கள் எத்தனை மொழிகளை படித்தாலும், நமது தாய்மொழியான தமிழை படிக்காமல் விட்டுவிடக்கூடாது. எனவே, பெற்றோர்களும் ஆங்கில மோகத்தினால் தமிழை அழிய விட்டு விடாமல் பாதுகாக்க வேண்டும். (நன்றி. தினந்தந்தி 02/07/2012)
Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB

Advertisements

2 thoughts on “அழிக்க வேண்டியது ஆங்கிலம்.. தழைக்க வேண்டியது தமிழ்

  1. உண்மை தான் நண்பரே! ஆங்கில வழிக் கல்வியில் படித்து ஆங்கிலமும் அரைகுறையாய், தமிழும் அரைகுறையாய் கற்று வெளியேறும் நமது இளைய தலைமுறையை பார்த்து பல சமயம் நான் வேதனைப்பட்டதுண்டு. அண்மையில் நமது நண்பர் ஒருவர் சொன்னது படி ஆங்கில வழிக்கல்வியிலும் வரலாறு போன்ற பாடங்களை தமிழில் தான் படிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டால் என்ன? என்று தோன்றுகிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s