இதாங்க பிடிங்க முதல் இடம் தமிழகத்துக்கு.. இரண்டாம் வருடமாக…..

இதாங்க பிடிங்க முதல் இடம் தமிழகத்துக்கு.. இரண்டாம் வருடமாக….. FIRST PRIZE WINNER OF ROAD ACCIDENTS

தங்கத் தமிழகம் எதில் முன்னேறியதோ இல்லையோ, சாலை விபத்துக்கள் ஏற்படுவதில், அதனால் பலியானோர் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே முதலிடத்தில் தொடர்ந்து இரண்டாவது வருடமாக உள்ளது. தேசிய குற்ற பதிவேடுகள் ஆவணத்தினரால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி கடந்த ஆண்டு 65873 விபத்தினை தமிழகம் சந்தித்திருக்கிறது. தேசிய அளவில் 15 சதவீதமாகும். (2011)

2010ல் அதிகவிபத்தின் எண்ணிக்கையாக 64996ம், 11 சதவீதம் தேசிய அளவிலும் பெற்று முன்னிலை வகிக்கிறது. இதே, மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தியாவிலேயே அதிக அளவில் வாகனம் பயன்படுத்துபவர்களாக இருந்தாலும் குறைந்தளவே விபத்தினை சந்திருப்பதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. தென் இந்தியாவின் நான்கு முக்கிய மாநிலங்களும் சேர்ந்து 42.5 சதவீத விபத்தினை உருவாக்குகிறது.

2007ல் விபத்தினை குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட சாலைப் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு கொள்கைகள் காற்றோடு போய்விட்டதாகவும், பெரும்பாலான விபத்துக்களுக்கு மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதே காரணம் எனத் தெரிகிறது. அதிகளவில் மாலை 6 மணியிலிருந்து இரவு 9 மணி வரையிலும் விபத்து ஏற்படுவதாகவும் அறிவிக்கிறது.

இருசக்கர வாகனங்கள் … 25 சதவீதம்
லாரி/கனரக வாகனங்கள் .. 20 சதவீதம்
நடைபாதையில் செல்பவர்கள் .. 6 சதவீதம்

என குறிப்பிடத்தக்கவை. இந்தியாவில் சென்னை மாநகரமே 9845 விபத்தினை சந்தித்ததாகவும், 1399 பேர் இறந்துவிட்டதாகவும், அதற்கடுத்து கோயம்புத்தூர்(1131), திருச்சி(781) மற்றும் மதுரை(685) முன்னனியில் இருப்பதாகவும் தெரிகிறது (நன்றி. இந்தியன் எக்ஸ்பிரஸ் 03.07.12 )

என்ன செய்தால் விபத்திலிருந்து தப்பலாம்.. சிவபார்க்கவி
1. வீட்டைவிட்டு வெளியே செல்லக்கூடாது.
2. இருசக்கர வாகனங்களை தவிர்க்கவும்
3. இரவு 6 லிருந்து 9 வரை எங்கேயும் நகரக்கூடாது
4. நடைபாதைகளில் நடந்து செல்லக்கூடாது
5. வெளியில் செல்லும்பொழுது விபத்தில் சிக்கினாலும்
பாதிக்காத வகையில் இரும்பிலான கவசங்களை அணிந்து கொள்ளலாம்.
6. தூரத்தில் வாகனங்கள் வரும்பொழுதே பாதுகாப்பான தொலைவிற்கு ஒடிவிடலாம்.
7. சிகப்பு / ஒளிரும் வண்ணத்தில் உடைகள் அணிந்து வெளியில் செல்லும் பொழுது எதிர் வாகனங்கள் உஷாராக இருக்க வாய்ப்பு.
Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB

Advertisements

3 thoughts on “இதாங்க பிடிங்க முதல் இடம் தமிழகத்துக்கு.. இரண்டாம் வருடமாக…..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s