எதைப்பார்த்து, என்ன படித்து எப்படிக்கேட்டு… ஒன்று

எதைப்பார்த்து, என்ன படித்து எப்படிக்கேட்டு… ஒன்று

ரொம்ப நாளாகவே நினைத்து கொண்டிருந்தது… பார்த்தது, படித்தது, கேட்டது என நிறைய விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம், இப்போதுதான் சந்தர்ப்பம் அமைந்தது.

பார்த்து.. பார்த்து..

இந்தவாரம் கலைஞர் டிவியின் நாளைய இயக்குநரின் மூன்று 15 நிமிட குறும்படங்களைத் தவறவிட்டது ரொம்ம வருத்தமாக இருந்தது… புதியவர்கள் என்னமாய் கலக்குகிறார்கள்.

யூடியூப்..ல் இல்லாத சங்கதிகளே இல்லை போலிருக்கே, புட்பால் மேட்சில் ஒரு ரெப்ரி பார்வையாளர்களால் அடித்து கொல்வதையும், பல வீரர்கள் போட்டியின் போதே இறந்து போன கிளிப்பிங்ஸ்களையும் பார்த்து நெஞ்சு பதைபதைத்தது.

டிஸ்கவரி சானலில்.. நான் உயிரோடு இருந்திருப்பேனா? நிகழ்ச்சியும் அருமை… இந்தவாரம் ஒருவர் காட்டில் மாட்டிக்கொண்டு 30 நாட்களாக நடந்தே காட்டைவிட்டு வெளியேறுவது (மலேரியா காய்ச்சலுடன்) துணைக்குவந்த நாயைக்கூட கொண்று சாப்பிட்டு விட்டு உயிரோடு இருந்தவர் என அருமையான படப்பிடிப்பு.

ஆதித்யா சேனல் இமாம் அன்னாச்சியின் கொக்கிபிடி காமெடிக் கேள்விகளால் இரவு 9 மணியில் இருந்து 10 வரை அன்றைய கவலைகளை மறந்து சிரிக்க முடிகிறது, ஞாயிறு அன்று மதியம் 1 லிருந்து 2 வரை சிரிக்க வைக்கிறார்.

படித்து.. படித்து..

செய்தித்தாள்கள் தான், 1880ம் வருடத்திற்குப் பிறகு 2012 மே மாதம் மிக அதிகமான வெயில் பதிவாகியிருப்பதாக அறிந்து உண்மைதான் என புரிந்தது.

1300 பேர் தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகளால் கடந்த வருடம் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

தென்மேற்கு பருவமழை பெய்த்துவிடுமோ இந்த வருடம் அச்சம் நிகழ்கிறது.

கேட்டு.. கேட்டு..

எங்கே போனாலும், விலைவாசி ஏற்றத்தைப்பற்றி மக்கள் பேசிக்கொள்வதைக் காணமுடிகிறது. இசைநிகழ்ச்சிகள் எல்லாம் குறைந்து, திரைப்பாடல்களை மட்டும் பென்டிரைவ் மூலம் கார், லாரி, பேருந்துகளில் ஒலிக்க விடுகிறார்கள்…

ஒரு சில நகரங்களில் மட்டும் சூரியன் எப்எம், உறலோ எப்எம், ரெயின்போ எப்எம் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கு, அதிலும் தனியார் எப்எம்கள் போட்டிபோட்டுக்கொண்டு பாடல்களை அள்ளி அள்ளிக் கொடுத்து தமிழர்களை செவிகுளிர்விக்கிறார்கள்.

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB

Advertisements

3 thoughts on “எதைப்பார்த்து, என்ன படித்து எப்படிக்கேட்டு… ஒன்று

 1. சட்டென அனைத்து விஷயங்களையும்
  தொட்டுத் தொட்டுப் போனாலுமே
  சொல்லிச் செல்லும் விதம்
  சுவாரஸ்யப்படுத்திப்போகிறது
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s