அ.. இல்லை ட……… பாகம்.. 3

அ.. இல்லை ட……… பாகம்.. 3

பார்த்து ரசித்தது.
பியர் கிரில்ஸ் என்னும் முன்னாள் ரானுவத்தாரும், 21வது வயதில் பாராசூட்டில் இருந்து குதிக்கும்பொழுது கால்முறிவு ஏற்பட்டும் 18 மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றும், எழுந்து வந்து வைராக்கியமாக சாதிக்க வேண்டும் என்னும் வெறியில், அவருடைய கேமரா குழுவும் சேர்ந்து மனிதர்கள் சாதாரணமாக யாரும் காலடி வைக்காத இடங்களாகத் தேர்தெடுத்து மேன் வெர்சஸ் வைல்ட் அல்லது அவர் மட்டும் 5 நாட்கள் தனியாக தங்கும் காட்சிகள் இடம் பெறும் நிகழ்ச்சிகள் உலகின் பல பகுதிகளை காடுகளை, மலைகளை, பாலைவனங்களை, ஆறுகளை, கடல்களை, விலங்குகளை, உணவுகளை என பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கும் வித்தியாசமான நிகழ்ச்சி தினந்தோறும் டிஸ்கவரி சானலில் ஏதேனும் ஒரு நேரத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டே இருக்கிறது. ( சுவாரஸ்யமாகவும் இருக்கிறது )

மங்கையர்கரசி என்னும் மேடைப்பேச்சாளர் சமீபகாலமாக பிரபலமாகி வருகிறார்.. மிக நன்றாக கதைகளும், சம்பவங்களையும் கோர்வையாகயும், சுவாரசியம் குறையாமலும், சபையினரை தனது மந்திரக் குரலாலும், உடல் மொழியாலும் கவனம் சிதறாமல் பேச்சினைத் துவக்கி முடிக்கிறார். சென்ற வாரம் லோக்கல் சானல் ஒன்றில் லயன்ஸ் கிளப் ஒன்றில் உரையாற்றிதை பார்க்க நேர்ந்தது.. ( நன்றாகவும் இருந்தது ). பல சானல்களின் காலை நேரத்தில் பக்திமாலை போன்ற நிகழ்ச்சிகளில் இவறைப் பார்க்கலாம்.

மைக்கிரோ ஓவன் … இதை ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும், கண்ணாடி டம்பளரில் தண்ணீரை கொதிக்க வைப்பது. முட்டையை ஓட்டுடன் உள்ளே வைப்பது.. திராட்சைப் பழத்தை ஓவன் உள்ளே வைத்து இயக்கிப் பார்த்தால் தெரியும் டமார் ஓசையும், ஓவன் தீப்பிடித்து எரிவதையும், ஒரு நிகழ்ச்சியில் செய்து காண்பித்தார்கள்.

கிரிஸ்டல் கிளியர் ஐஸ் க்யூப்களை செய்ய வேண்டுமானால் தண்ணீரை 2 முறை கொதிக்க வைத்து குளிரவைத்து பீரிஸரில் வைக்க வேண்டுமாம். இதனால் இதனில் உள்ள ஆக்ஸிஜன் குறைந்து கிரிஸ்டல் கிளியர் ஐஸ் க்யூப்கள் உருவாகுமாம்.

படித்து பார்த்தது.

இந்தவாரம் தினந்தந்தியின் ஞாயிறு மலரின் இந்திராணி என்னும் பெண்ணின் கட்டுரையில் காமசூத்ரா தவறாக எழுதப்பட்டுள்ளது என்ற வாதம் முன்வைத்து பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். ( முடிந்தால் தினந்தந்தியின் இணையப்பக்கங்களைத் தேடிப்படித்துக் கொள்ளவும் )

இலங்கையில் தமிழ் படிப்பவர்களுக்கு ட எழுத்தே முதல் எழுத்தாம்… (எளிமை கருதி) கேள்விப்பட்டேன். உண்மையில், அ என்பது அகரம் எழுத்துகளின் முதன்மையாகவும், தொன்மையாகவும் உள்ளது, இது எழுதும் பொழுது சிறிது சிரமமாக இருப்பினும் ஒரு முழுவட்டம், அரைவட்டம், நேர்க் கோடு, படுக்கைகோடு, வளைவுக் கோடு என எழுத்து வடிவத்தின் அனைத்தையும் ஒரே எழுத்தில் அதுவும் எழுத பழக ஆரம்பிக்கும் பொழுதே கற்றுக் கொள்வதால் தமிழர்கள் விரைவில் சிந்தனை செய்யும் பழக்கம் உள்ளதாக கருதுகிறேன். உலகளவில் தமிழர்கள் இந்தியாவில் தமிழகத்தையும் சேர்த்து 7 கோடியும், உலகின் பிற பகுதிகளில் 1 ½ கோடி மக்களும் இருப்பதாக ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது. (பார்க்க படம்..)

கேட்டு ரசித்தது..

காலை நேரத்தில் எப்எம் ரேடியோக்கள் போட்டி போட்டுக் கொண்டு, சுப்ரபாதத்தையும், கந்தர்சஷ்டி கவசத்தையும் ஒலிபரப்பி (தினமும் 5 மற்றும் 6 மணி) ஆன்மிக வாதிகளுக்கும், பொது மக்களுக்கும் உற்சாக மூட்டுவதாக இருக்கிறது.

நண்பர் ஒருவர் எப்பொழுது தொலைபேசினாலும், வாழ்க வளமுடன் என்று கூறியே பேச்சை ஆரம்பிக்கிறார், கேட்கவும் நல்லாத்தான் இருக்கு..

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB

Advertisements

One thought on “அ.. இல்லை ட……… பாகம்.. 3

  1. அனைத்தும் அறிந்தது என்றாலும், மறுபடியும் படிக்கும் போது சுவாரஸ்யமாக இருக்கிறது… நன்றி …

    என் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s