அரைகுறை ஆடையுடன்…

அரைகுறை ஆடையுடன்….

மகாத்தான வெற்றி, சுதந்திரக் காற்றை அனுபவிக்க கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாக பலமுறைகளில் போராடியும், அந்த ஜீவன் வந்தார், போராடினார், வென்றார்… இன்றைய சுதந்திர இந்தியாவின் போக்கு பலருக்கு வெறுப்பைத்தந்தாலும், சுதந்திர காற்றை அனுபவிக்க அந்த நபரின் பங்கு 100 சதவீதம் பயன்பட்டிருக்கிறது… அரைகுறை ஆடையுடன் வலம் வந்த நமது அண்ணல் காந்தியடிகளை நினைவில் நின்றவைகள் இந்த பதிவு.

• 20 முறை அண்ணல் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார்கள் அதில் 5 முறை மட்டும் திருப்பூர்க்கு வந்திருக்கிறார். திருப்பூர் ஸ்பெஷல்… காந்திக்கு

• எனக்கு வந்த குறுஞ்செய்தியின்படி 1932ல் நடைபெற்ற ஒலிம்பிக்கில் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி பார்வையாளராக கலந்து கொண்டும், அதனை ஒரு பத்திரிக்கைக்கு ரிப்போர்ட்டாக தயாரித்து தந்ததாகவும் தகவல்… உண்மையா..?.

• காந்தியை சுட்ப்பட்டப் பொழுது எடுத்த புகைப்படங்களையும் காந்தி கீழே விழுந்து கிடப்பதையும், கோட்சே கையில் துப்பாக்கியையும் இந்த அரிதான புகைப்படத்தைப் பார்த்து அறியலாம்.

• பாரதியார் ஒருமுறை காந்தியிடம் கடற்கரை கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி கோரியபொழுது அந்த நாட்களில் வேறொரு கூட்டத்திற்கு செல்லவேண்டும், தேதியை மாற்றி வைத்தால் நான் அந்தக்கூட்டத்திற்கு வருகிறேன் என காந்தி கூறவும், அதெல்லாம் முடியாது, நீங்க உங்களை அழைத்த கூட்டத்திற்கு அந்த நாளில் போங்க, நாங்க எங்க கூட்டத்தைத் குறிப்பிட்ட நாளிலேயே நடத்திக் கொள்கிறோம் என வீராய்ப்பாக கூறவும், இந்த மனிதரைப் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என காந்தி கூறியதாகவும் தகவல்.

• காந்தியின் போராட்ட முறைகள் வித்தியாசமானதாம். சபர்மதி ஆசிரமத்தில் அவர் உண்ணாவிரதம் இருந்தால், இங்கே கடைக்கோடியில் உள்ள கிராமத்தில் உள்ள ஒரு தொண்டரும் உண்ணாவிரதம் இருப்பாராம்… ( அப்பொழுது இப்பொழுது உள்ளது போன்று தகவல் தொடர்பு சாதனங்கள் இல்லை … போன் இல்லை, தொலைக்காட்சி இல்லை ) வெறும் பேப்பர் மற்றும் ரேடியோ செய்திகள் மட்டுமே. அவ்வாறே, அவருடைய போராட்டங்கள் உலக அரங்கில் பேசப்படுமாறு, சூழ்நிலைகளை அமைத்துக் கொண்டார்.

• காந்தியடிகளின் சத்தியசோதனை வாழ்க்கை வரலாறும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததும், அட்டன்பரோ இயக்கிய காந்தி ஆங்கிலப்படமும் மிகப்பிரமாதமான பதிவுகள்…

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB

Advertisements

6 thoughts on “அரைகுறை ஆடையுடன்…

  1. காந்தி தன்னுடைய கோட்சூட் ஆடையை மாற்றி அரையாடை உடுத்த தொடங்கியது மதுரையில்தான். மதுரை மேலமாசிவீதியில் அந்த நினைவிடம் உள்ளது. காந்தி அருங்காட்சியகம் மதுரையில் உள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s