ஆம்பளையும், பொம்பளையும் வாழ்வது எப்படி .. (1)
Humans, How to Live Peaceful and Wealthy
எச்சரிக்கை.. சொந்த சரக்கு… பதிவு..
Do not cut and paste without this site address…
முதலில் வளம் என்றால், நமது பொருளாதார வளத்தையும் மற்றும் மனம் சார்ந்த அமைதி நிலையையும் குறிக்கும்.. இப்பூவுலகில் பிறந்த மானிடர் யாவரும் இந்த இரண்டு நிலையில் சரியில்லாமல் போய் விட்டால் அதோ கதி தான். அதற்குத்தான் இத்தனை போராட்டம் வாயிற்கும் வயிற்றுக்கும், இதில் மனம் சார்ந்தவைகள் பின்தங்கி விடுகிறது. ஒரு தனி மனிதர் தான் எத்தனிக்கும் அனைத்து செயல்களையும் சரியான பாதையில் தான் செல்கிறார் என எவ்வாறு அறிய முடியும், ஒரு சிறிய இடது அல்லது வலது புற திருப்பம்மே அவருடைய வாழ்க்கையை புரட்டிப் போடவும் வாய்ப்பாக அமைந்திடும் இல்லையா…
இளமைப்பருவம்.. இதுவே மனித வாழ்வில் மிக மிக முக்கியமானது… ஏனெனில் இந்த பருவத்தில் தான் நாம் எந்த விதமான கமிட்மெண்ட் இல்லாமல் அப்பா அம்மா தம்பி தங்கைகளுடன் மிகவும் சந்தோசமாக இருப்பதை பகிர்ந்து பொதுவாக சுயநலமில்லாமல் ஒருவர்மீது ஒருவர் அக்கறை செலுத்துவதாகவும் இருக்கும். மிகவும் மிகழ்ச்சியான காலக்கட்டம் என்று சொன்னால் பள்ளி, கல்லூரி,விளையாட்டு மற்றும் நமது கற்றுக்கொள்ளும் திறனை பயனுள்ள வகையில் பயன்படுத்தி பட்டைத் தீட்ட வேண்டும் தவறினால் மிச்சமுள்ள பருவங்கள் எல்லாம் தத்தளிக்க வேண்டிவரும்.
இங்கே இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் நாம் சுறுசுறுப்பாகவோ, எடுத்த பணியை முடிக்கும் அஞ்சா நெஞ்சராகவோ உருவாகி, எதைத்தேர்தெடுத்தாலும் தரத்திற்கும் முன்னுரிமையும், மலிவாகவும் எளிதாகவும் கிடைப்பதற்கு பின்னுரிமையும் கொடுத்து பழகுவதும், நமது மனதை மேற்கண்டவைகளை மட்டுமே செயல்படுத்த கட்டுக்கள் கொண்டுவரவும் வேண்டும்.. இல்லையென்றால் செய்வதெல்லாம் கோவிந்தா தான்…
மற்றுமொரு முக்கியமான மோகத்தூண்டுதலுக்கு ஆளாகி, காதலிக்கிறேன் என்ற மாயையில் விழுவதோ, மோகத்தைத் தணிக்க மேற்கொள்ளும் நடவடிக்கையினாலோ கண்டிப்பாக வாழ்க்கை ஏணி கொஞ்சம் சரிந்துவிட பெரும் வாய்ப்புள்ளது. கவனம் இங்கே ரொம்ப முக்கியம்.
இளமைப்பருவத்தின் முடிவிலோ நீங்கள் கண்டிப்பாக கல்விகற்றவராகவோ, வேலைத்திறன் மிக்கவராகவோ இருக்க வேண்டும் அதன் பயனாக தெரிந்தெடுக்கும் அல்லது தானகவோ அமையும் வேலைவாய்ப்புகளே உங்கள் அடுத்தடுத்த வாழ்க்கைப் படிகளை நிர்ணயிக்க போகிறது. ஆகவே, உட்கார்ந்து நன்றாக யோசித்து, ஆலோசனைகளைப் பலரிடமிருந்தும் பெற்றும், அனுபவசாலிகளை சந்தித்தும், ஒரு பணியின் பின்னால் முன்னேற்றம் எவ்வாறிருக்கும் என்பதனை நன்கு ஆராய்ந்து அதனில் இறங்குவது நலம்.. தற்சமய பலன்களுக்காக மட்டுமே எதையும் பாராமல் ஒரு பணியில் ஈடுபட்டு பல்லாண்டுகள் கழித்து சே.. தப்புசெய்து விட்டோமோ என்று என்னுவது இழுக்கு.
பழக்கவழக்கம்… ஆறில் வளையாதது, அறுபதில் வளையாது என பழமொழி உண்டு. எனவே, உலக வழகத்தில் அனைத்து கெட்டப்பழக்க வழக்கத்தையும் தவிர்த்து, நல்ல பழக்கத்தைப் மட்டுமே பழக முயற்சி எடுத்தால் உண்டு சிறப்பு பின்னால். உடல் நலம் பேனுவதும் இப்பருவமே.. அடித்தளம் நன்றாக இருந்தால் தான் கட்டும் கட்டிடம் ஸ்ட்ராங் இல்லையா.. எனவே, இந்தப்பருவத்தில் பல், கண், வாய், காது, வயிறு என ஐம்புலன்களையும், உடல் முறுக்கு இதெல்லாம் சரியான உணவு, உடற்பயிற்சி, மனவலிமைதரும் யோகா, நண்பர்கள் கூட்டு, குடும்ப ஒற்றுமை போன்றவைகளால் கிடைக்கப்பெறும், தனிப்பட்ட முயற்சியும் அவசியம்.. பொதுவாக இவையனைத்தையும் நாம் இழக்க முக்கிய காரணம் சோம்பேறித்தனம்… இதைஒழித்தால் மேற்கண்ட அனைத்தும் கைகூடும்.
கிட்டத்தட்ட இந்தப்பருவ முடிவில் வேலையில் செட்டிலாகி விட்டாலோ, குடும்பச்சூழ்நிலை அல்லது கட்டாயமாகவோ கல்யாணம் செய்துகொள்ள வேண்டி நிர்பந்தப்படுத்தப்படுவார்கள்…
(திருமணத்தைப்பற்றி ஒரு தனி பதிவு நிச்சயம்)
… இளமைப்பருவத்துக்காரர்களுக்காக .. மேலே
… அடுத்தபதிவில் மத்தியப்பருவம்..
… காத்திருங்கள்