மதுபானக்கடை .. திரைவிமர்சனம்

மதுபானக்கடை .. திரைவிமர்சனம்

பயப்படவேண்டாம், நமக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமானவர்கள் யாரும் இதில் நடிக்கவில்லை. ஒரு டாஸ்மாக் மற்றும் அதனுடன் இணைந்த ஒரு நடுத்தர நகரத்தில் உள்ள பார் 24 மணிநேரம் முழுமையும் இயங்குவதின் முழுப்பதிவே இப்படம்.
இதில் சுவாரஸ்யமான விஷயங்கள் என்று எதுவும் இல்லை, டாஸ்மார்க் பாருக்கு செல்லும் பழக்கமுள்ள நபர்களுக்கு இத்திரைப்படம் ரொம்ப ரொம்ப போரடிக்கும், குடிப்பழக்கம் இல்லாதவர்களுக்கும், பெண்களுக்கும் இங்கே என்னதான் நடக்கிறது என பார்க்கலாம்.

• பார் என்பது மிகவும் அசுத்தமான, அடிக்கடி கீளின் செய்யப் படாத இடம்
• ரொம்ப சத்தமான இடம்
• கிட்டத்தட்ட 24×7 விடுமுறையிலும் கூட இயங்குமாறுதான் இந்த அமைப்பு செயல்படுகிறது.
• கள்ளத்தனமாக போலி சரக்குகளின் நடமாட்டமும் உண்டு என பதிவு செய்கிறார்கள்.
• காலையில் துப்புரவு பணியாளர்களில் இருந்து, டீசண்ட் ஆன படித்த இளைஞர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பணமுதலைகள், பிச்சை எடுப்பவர்கள், ஏமாற்றிபிழைப்பவர்கள், அனுமார் மாதிரி வேஷம் கட்டுபவர்கள், திருநங்கைகள், தொழிலாளர்கள் என பலதரப்பட்ட மக்கள் ஒரு நாளைக்கு கூடும் இடம்தான் மதுபானக்கடை.
• ஒரு நாளைக்கு பகல் இரவு என்று பாராமல் 3 முறைக்கு மேல் குடிப்பவர்கள் பெரும் குடிகாரர்கள், இரண்டு அல்லது ஒரு முறை குடிப்பவர்கள் வாடிக்கையாளர்கள்
• மானரோஷம் என்பது எல்லாம் குடிப்பவர்களுக்கு கிடையாது.
• ஓரே நாளில் குறைந்தது 500 ரூபாய்க்கு குடிப்பவர்களும் இருக்கிறார்கள்.
• மீண்டும் இந்த இடத்திற்கு வரமாட்டேன் என சத்தியம் செய்து விட்டுப்போகும் குடிமகன் அடுத்த அரைமணியில் திரும்பி வருவதும், அடிவாங்கி அவமானப்பட்டு போகும் பணக்காரர் கூட இரவு திரும்பபவும் வருவதும் ? கொஞ்சம் ஷாக்கடிக்கும் (மற்றவர்களுக்கு)

• காலையில் கடைதிறந்தது முதல் குடித்துவிட்டு ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும் படித்த இளைஞர், திரும்ப திரும்ப யாரிடமாவது கூட்டு சேர்ந்து குடித்துக் கொண்டே இருக்கும் நடுவயதுக்காரர், வீட்டில் உள்ள பணத்தை தினமும் கொண்டுவந்து குடித்துக் கொண்டே இருக்கிறார்கள். ( ஒவ்வொருவரும் அவருடைய துடுக்குத்தனமான பேச்சைக் கேட்டு சரக்கு தரமாட்டேன் என விரட்டி அடித்தாலும், பிறர் மூலம் சரக்கு வாங்கி).
• கந்து வட்டி முதலாளி கந்து வட்டி வசூல் செய்து, அவரும் தண்ணியடிக்கிறார்.
• மாமூல் வாங்கும் காவலர்களை கடன்காரன் என்று விளிப்பதும், கொடுத்துவைத்தது மாறி அனைத்து நடைபாதை வியாபாரிகளிடமும் 50, 100 வாங்கிக் கொண்டு நடையைக் கட்டுகிறார் போலீஸ் அண்ணாச்சி.
• கடைக்குள் அவ்வப்பொழுது சிறிய சிறிய சண்டைகள் நிகழ்வதும்,
• வாந்தி எடுத்தால் 30 ரூபாய் அபராதம் என எழுதிப்போடுவதும், அங்கேயே ஒரு மூலையில் உச்சா போவதும், பிறர் எச்சி டம்பளரில் சரக்கை ஊற்றிக் குடிப்பதும், பிறரை நம்பவைத்து ஏமாற்றி சரக்கை அபகரித்து குடிப்பதும், பாட்டுப்பாடி பொழுதை ஒப்பேற்றுவதும் தினம்தினம் நடக்கும் சங்கதியாக பதிவாகிறது.
• அழுகிய காய்கறி மற்றும் கெட்டுப்பொன இறைச்சியை வாங்கிவரும் முதலாளியிடம், மாஸ்டர் கெட்டுப்போச்சி எனகூறுவதும் அதற்கு, முதலாளி குடிகார பயலுகளுக்கு இதுபோதும் எனக்கூறுவதும்… அடிரா சக்கை.
• 10 நிமிடம் முன்னதாக கடையை மூடும் ஊழியரை வசைபாடி கடையை திறக்க வைத்து, சரக்கிற்க்காக கெஞ்சுவதும், பில் ஏதும் இல்லாமல் ஐஸ்ட் பணத்தை வாங்கி ஒரு அட்டைப்பெட்டியில் போடுவதும், 77 சரக்கை ரவுண்ட் செய்து 80 ரூபாய்க்கு விற்பதும் பதிவாகியுள்ளது, டாஸ்மாக் ஊழியரின் தெனாவெட்டான பேச்சும், செயல்பாடுகளும் கொஞ்சம் கொசுறு.

கடையில் வேலை செய்யும் இளவட்ட நபர், செல்போனில் கடலை போட்டுக் கொண்டே இருப்பதும், அதுவும், முதலாளியின் மகளையே டாவடிப்பதும், அது தெரியாமல் முதலாளி (இவரும் ஒரு ரவுடிதான்) கண்டுக்காமல் இருப்பதும் (இன்பாச்சுவேஷன் முத்திப்போய் உதட்டுமுத்தம் வரை முன்னேறி, கடைசியில் ஊரைவிட்டே காதலர்கள் ஓடுகிறார்கள்).

படத்தில் ஒரேஒரே ஜோக்தான் போல, இளவயது நண்பர்கள் நண்பரின் பிறந்தநாளை கொண்டாட பாருக்கு வருவதும் அங்கே நாளை காந்திஜெயந்தியை முன்னிட்டு கடைவிடுமுறை என்ற போர்ட்டைப் பார்த்து, நல்லவேளை இன்றைக்கு பிறந்த, நாளைக்கு பிறந்திருந்தாஅங்க பாருன்னு ஒரு அப்பாவி சொல்லும் போது, சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

திரையரங்கை நோட்டம் விட்டபொழுது, குடிகாரர்கள் யாரும் இந்தப் படத்தை பார்க்க வந்ததாகக் கானோம், இந்தப் படத்தின் மூலம் எந்தவிதமான மெசெஜ் எதுவும் சொல்லப் படவில்லை. மதுபழக்கத்தைத் திருந்த எந்தவிதமான டார்ச்சரும் கொடுக்கப்படவில்லை. எனினும் ஒரு இடத்தில், பிளாஸ்டிக்கை ஒழிக்காவிட்டால் இந்த மண்ணில் ஒரு புல்பூண்டு கூட முளைக்காது எனது கூறுவது தான் பஞ்ச்.

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB

Advertisements

3 thoughts on “மதுபானக்கடை .. திரைவிமர்சனம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s