தங்க மெடலே வாங்க வேண்டாம்…. ?

தங்க மெடலே வாங்க வேண்டாம்…. ?
No need of Gold Medal in Olympics for India….

ஸ்போர்ட்ஸ், ஸ்போர்ட்ஸ் என்று கல்வி அதிகாரிகள் தொண்டை காயக் கத்துகிறார்கள். கத்தும் கத்தலுக்குத் தகுந்த ஆட்கள் வரவில்லை. காரணம் விளையாட்டில் ருசியில்லாதது ஒன்று. இன்னொரு முக்கிய காரணம் பரிட்சை எழுதுகிற பரிட்சை இல்லை, விளையாட்டிலே பரிட்சை, அவனை இவன் உயர்த்தி, இவனைவிட இன்னொரு இவன் மோசம். இப்படி தேர்வு செய்து வடிகட்டி உற்காசத்தைக் குலைக்கிறார்கள். விளையாடுவது தன் மகிழ்ச்சிக்கு, தன் உடல் வளர்ச்சிக்கு இதில் என்ன போட்டி வேண்டிக் கிடக்கிறது? நம்முடைய படிப்பு மாதிரிதான் இருக்கிறது விளையாட்டு. நம் குழந்தைகள் படிக்கிறது. உல்லாசத்திற்காக, அறிவுக்காக, தன் மகிழ்ச்சிக்காக இல்லை. நிறைய மார்க்குக்காக, வாத்தியாருக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுக்க அந்தத் தலைமை வாத்தியார் பள்ளிக்கூடத்திற்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுக்க அந்தப் பள்ளிக்கூடமும், பள்ளிக்கூடங்களும், மாவட்ட, மாநிலக் கல்வி அதிகாரிகளுக்கு நல்ல பெயர் வாங்கி கடைசியில் அந்த அதிகாரிகள் கல்வி அமைச்சரிடம் ஷொட்டு வாங்க வேண்டும். இந்த சங்கிலி அறுபடாமல் இருக்க, தொய்யாமல் இருக்க, வாரப் பரிட்சை, மாசப் பரிட்சை, கால்பரிட்சை, அரைப்பரிட்சை என்று குழந்தைகளின் உயிரை வாங்குகிறார்கள். பரிட்சை செய்வதே நச்சுப் பழக்கம் என்று வாய் கிழிகிற கல்வி அதிகாரிகளும், நிபுணர்களும் பள்ளிக் கூடங்களை பரிட்சை முடிவைப் பார்த்துத்தான் எடை போடுகிறார்கள். விளையாட்டும் இந்தத் தேர்வுப் பேயின் பார்வையில் தான் வளர்ந்து வருகிறது.

இந்தியா இதில் தனித்து நின்றுவிடவில்லை, மேற்கு நாடுகளிலும் இந்தப் பரிட்சை பேய்கள் நடமாடாமல் இல்லை. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று எவனோ எழுதி வைத்து விட்டு போனான். எல்லாரும் சமம் எல்லாரும் சகோதரர்கள் அப்படியானால் ஏன் விளையாட்டு படிப்பு தோற்றம் எல்லாவற்றிருக்கும் மார்க் போடுகிறார்கள் ?

அடிப்படையில் ஒவ்வொரு மனிதனும் இன்னொரு மனிதனைவிட ஒஸ்த்தி என்று சொல்லிக் கொள்ளத்தான் விரும்புகிறான். இன்னொருவன் அவனை விடத் தாழ்த்தி, அடிமை செய்ய வேண்டும், ஏதாவது ஒரு விதத்தில், இல்லை, நான் உனக்குச் சமமல்ல என்று பல்லையாவது காட்ட வேண்டும். சர்வாதிகார அரசியலில் மட்டுமல்ல, ஒவ்வொரு தனி மனிதனிடமும் உறுமிக் கொண்டுதான் இருக்கிறது. போட்டி வைக்கிறது. சுரண்டச் சொல்கிறது. குடும்பத்தினர் மீது அரசோச்சச் சொல்கிறது. அடுத்த வீட்டுக்காரனை, ஊரை, மாவட்டத்தை, மாநிலத்தை, நாட்டை ஆளச் சொல்கிறது. தவிர்க்க முடியாததுதான்.

டார்வினோ சொல்லிவிட்டான், முயற்சி பண்ணி விளையாட்டிலாவது இதைக் குறைத்துக்கொள்ளலாம், ஒலிம்பிக் விளையாட்டில் தங்க மெடல் வாங்காவிட்டால் நம் குடி முழுகிப் போய்விடாது. சந்தோஷத்திற்காக விளையாடுகிறோம் என்பதை அடிக்கடி நினைவு படுத்திக் கொண்டால் போதும், மனிதனின் இந்த அடிப்படைப் போட்டியைக் கண்டுதான், பைராகிகளும், ஆண்டிகளும், உறிப்பிகளும் உருவாகிறார்கள்.

.. அடுத்த வீடு ஐம்பது மைல்… தி. ஜானகிராமன்.

என்ன புரிந்ததா… நம்ம ஜானகிராமன் சாரே எப்படி சொல்லிட்டாரு, போனா போகுது தங்கம், அது அடுத்தவன் அங்கம்… லண்டன் 2012 ஒலிம்பிக்கில் பல்பு வாங்கும் நமது சகோதர வீரர்களுக்கு ஆறுதலாயிருப்போம்…

Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB

Advertisements

4 thoughts on “தங்க மெடலே வாங்க வேண்டாம்…. ?

 1. தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி

  வாருங்கள் ஒன்று திரள்வோம்!!!!!!!!!!!!!!!

  தமிழின் பெருமையை உலகிற்கு உரைத்து சொல்ல ஒன்று கூடுவோம்…..

  ஆகஸ்ட் – 26-ல் சென்னை மாநகரில்…..

  அனைத்துலகத் தமிழ் பதிவர்களின் சந்திப்பு வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி (ஞாயிறு) சென்னையில் நடைபெற இருப்பதால் தமிழ் வலைப் பதிவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வருகை தாருங்கள்…..

  மதுமதி மற்றும் குழுவினருடன் மக்கள் சந்தை.com
  95666 61214/95666 61215
  9894124021

 2. சரி உடுங்க பாஸ்
  எளைக்கேற்ற எள் உருண்டை

  நன்றி,
  ஜோசப்
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s