அட்டகத்தி….யால் குத்தினால் இரத்தம் வருமா..?

அட்டகத்தி….யால் குத்தினால் இரத்தம் வருமா..?
ATTAKATHI – TAMIL FILM REVIEW

அப்பாடா, மீடியாக்களின் பலமான பூஸ்டருக்களுக்குப் பின்னால், பில்டப்களுக்கு மத்தியில் சமீபத்தில் வந்த பல புரட்சி கரமான படங்களைப் போல் இதுவும் ஒரு பதிவு என எண்ணம் நமது மனதில் உந்தித்தள்ள தியேட்டருக்கு விரைகிறோம்.

இந்தப்படத்தைப் பொருத்த வரையில், இயக்குநர் நன்றாக தனது பணியை செய்திருக்கிறார் என்று தோன்றுகிறது, மருந்துக்குகூட சிரிப்பை வரவழைக்காததாலும், மேற்கொண்டு சுவாரஸ்யமான சம்பங்களை தெரிவிக்காததாலும் படம் 6 மணி நேரமாக ஓடுவதுபோல் ஒரு பீலிங்.

இளம் கதாநாயகன் +2, நாயகி +2, டாவடிக்க, யாரையாவது காதலித்தே தீருவது என முடிவு செய்து கதாநாயகன் ஒவ்வொரு பெண்ணையாக பார்ப்பது, தொடர்ந்து செல்வது, என இருக்கிறார். முதல் பெண்ணை நீண்ட நாள்களாகத் தொடர்ந்து பஸ்ஸில் புட்போர்ட் சாகசங்களைத் செய்து கவர்கிறார். நெருங்கி பேசுகின்ற பொழுது அண்ணா என பெண் சொல்வதால் நொந்து, அடுத்த நிமிடமே சோகமாக இருக்க என்னவெல்லாம் செய்துவிட்டு, ஒரு செகண்டில் அடுத்த பெண்ணை அதுவும் இரண்டு பெண்களை ஓரே நேரத்தில் டாவடிக்கிறார். இதுவும், ரவுடிப் பசங்களால் முறியடிக்கப்படுவதால், விரக்தியாகி வீட்டுக்கு அருகிலேயே ஒரு பெண்ணை டாவடிக்க, அந்தப் பெண் லவ் லெட்டர் கொடுத்து உங்க அண்ணணிடம் கொடுக்க கூறுகிறார்.

ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் யாரையும் லவ் செய்ய மாட்டேன் என சபதம் செய்து, நண்பர்களையும் கட்டாயப் படுத்த, நண்பர்கள் எஸ்கேப் ஆக, இடையில் கோட் அடித்த பிளஸ்2 ரிசல்ட் வர, கல்லூரியில் ரவுடித்தனமாக சுற்றித்திரிந்து ரூட் தல என்னும் பெயரையும் பெறுகிறார், மூன்றாம்ஆண்டு படிக்கும் பொழுது முதலில் பார்த்த பெண்ணை முதலாண்டில் சேர்ந்து இவரை மீண்டும் காதலிக்க தூண்டி படுத்திஎடுக்கிறார். இவ்விஷயம் முற்றிப்போக, பெண்வீட்டில் மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் நிச்சயம் செய்ய, நண்பர்களுடன் சேர்ந்து பெண்ணைத் தூக்கிப்போய் திருமணம் செய்ய முடிவுசெய்து செயலில் இறங்குகிறார். குறிப்பிட்ட நாளில் பெண் வராதால் வெறுத்துப்போய் இருக்கும் பொழுது தற்செயலாக அந்தப் பெண்ணைப் பார்க்க அவரோ வேறொரு நபருடன் முதல் நாளே ஓடிப்போய் கல்யாணம் செய்துவிட்டு வந்துவிடுகிறார்.

மீண்டும் நம்மாளு தேள்கொட்டியகதையாக ரோட்டில் போகும்பொழுது ஒரு பெண்ணை மோத, அவருடன் காதலாகிறது என முடிக்கிறார்கள். கடைசியில் சஸ்பென்ஸ் வேற..

இது ஒரு காதலில் சொதப்புவது எப்படி படத்தின் லோ கிளாஸ் வெர்சன்.. இடை இடையில் பாட்டு வேற போட்டு கொல்கிறார்கள்.. எனிவே… ஒரு லோகிளாஸ் கிராமத்து டைப் வீடு உறவுகளை நெருங்கி பதிவு செய்ததற்கும், அவர்களுடைய வாழ்க்கையை பதிவு செய்ததற்கும் வாழ்த்துக்கள் மற்றும் முயற்சிக்கு பாராட்டுக்களைத் தெரிவிக்கத்தான் வேண்டும்….
Tamil Blogs Traffic Ranking
More than a Blog Aggregator
Thiratti.com Tamil Blog Aggregator
Thenkoodu
valaipookkal.com Tamil Blogs
Udanz
TLIB

Advertisements

13 thoughts on “அட்டகத்தி….யால் குத்தினால் இரத்தம் வருமா..?

  1. நல்ல விமர்சனம்

    நன்றி,
    ஜோசப்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s